நூல்கள் வெளியீட்டு விழா

சென்னையில் 21.02.2016 ஞாயிறு மாலை 5 மணியளவில் தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் தோழர் ரவிபாரதியின் ”முதல்படி”, சரவணகுமாரின் ”கருப்புச்சட்டை” ஆகிய நூல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மதுமிதா வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நாத்திகன் தொகுப்புரை வழங்கினார்.
கோவை கு. இராமகிருட்டிணன் நூல்களை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார். நூல்கள் குறித்து கோவை கு. இராம கிருட்டிணனும், கழகத் தலைவரும் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் இலங்கை வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசீதரன் பங்கேற்று உரையாற்றினார். வெளியிடப்பட்ட நூல்களுக்கு மதிப்புரை வழங்கி அருள் எழிலன் உரையாற்றினார். நிறைவாக நூலாசிரியர்கள் ரவிபாரதி, சரவணகுமார் ஏற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார்கள்.

பெரியார் முழக்கம் 03032016 இதழ்

You may also like...