கிரகங்களிலும் ஜாதி

கிரகங்களைப் பற்றிய ஜோதிடர்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை. கிரகங்களை ஆண், பெண் என்று மட்டுமல்ல ‘அலி’ என்றுகூட வகைப்படுத் தியிருக்கிறார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் அது நிஜமே.

சூரியன், செவ்வாய், குரு ஆண்கள்! சந்திரன், சுக்ரன், ராகு பெண்கள்! புதன், சனி, கேது ‘அலி’கள்! மனிதர்களைப் போல் கிரகங்களைப் பாவிக்க  ஆரம்பித்து விட்டால் பிறகு சகல கல்யாண குணங்களையும் கொடுத்துவிட வேண்டியது

தானே. எந்தக் கிரகம் உயரம், குட்டை, சமம்? எது வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை? எது எதற்கு என்ன உடைவாகனம் யாது? என்றெல்லாம்   பட்டியலிட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சாதிப் பாகுபாடுகூட வகுத்து விட்டார்கள்!  குரு, சுக்ரன் – பிராமண ஜாதி; சூரியன், செவ்வாய்- ஷத்திரிய ஜாதி; சந்திரன், புதன் – வைசிய ஜாதி; சனி – சூத்திரஜாதி; ராகு, கேது – சங்கிரம ஜாதி – என்று எழுதி வைத்திருக்கிறார்கள். படுமோசமான கிரகம் என்றும், ஏழரை நாட்டுச் சனி என்றும் கூறப்படும் கிரகத்தை ‘சூத்திர’ சாதி என்று அழைத்திருக்கிறார்கள் பாருங்கள். அங்கே வர்ணாஸ்ரம ஒடுக்குமுறையும் உயர்சாதி வெறியும் அப்பட்டமாய் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். –                        பேராசிரியர்  அருணன் நூலிலிருந்து

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...