மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை
மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை திணிக்காதே! தமிழ் நாட்டை வட நாடாக்காதே! நாம் மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிற வட மாநிலங்களைவிட – நாம் வேறுபட்டுள்ளோம். எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மை வாட்டினாலும் சரி; எப்பாடுபட்டாவது – நமது மகளை, மகனை படிக்க வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும் என்ற கொள்கையே நமது பண்பாடு! பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலே போராடினார். உரிமையைப் பெற்று தந்தார். காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த உரிமைகளை படிப்படியாக வளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின் வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தார். போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது...
