உண்மையான பெண் விடுதலைக்கு

சட்டத்தாலும், மதத்தாலும், மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற் கில்லாமல் பெண் சமூகம் ஒப்புக்கொண்டு, இந்நிலைக்கு உதவிபுரிந்து வருவதனாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்ல வேண்டும். அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த ஜாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக் கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும் விளங்கவும் முந்துகிறார்களோ, அதுபோலவே பெண்மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துக்களென்றும், ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக்கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கிறார்கள். உண்மையாக பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.

குடி அரசு 08.01.1928

பெரியார் முழக்கம் 18112021 இதழ்

You may also like...