தொழிற்சங்கம் பற்றி ஒரு சிறுகதை !

நான் ஒரு சிறுகதை கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒரு குளத்திலுள்ள தவளைகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று கடவுளைக் கேட்டதாகவும், கடவுளும், ஒரு மரக்கட்டையைத் தலைவராகக் கொடுத்ததாகவும், அம் மரக்கட்டை ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளிடம் எங்களுக்குக் கொடுத்தத் தலைவர் உபயோகமில்லையென்றும் வேறு தலைவர் வேண்டுமென்று கேட்டதாகவும், கடவுள் ஒரு பாம்பைக் கொடுத்ததாகவும், அப்பாம்பு தினம் 10 தவளைகளைத் தின்று வந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளை நோக்கி தங்களுக்குக் கொடுத்த தலைவரை எடுத்துக் கொள்ளும்படி வேண்டி, தங்களது காரியத்தை வேறொரு தலைவரில்லாமல் பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல, உங்களிலேயே உங்களுக்குத் தலைவர்களும், காரிய தரிசியும், நிர்வாகிகளும், கிடைக்கவில்லையானால் கண்டிப்பாய் உங்களுக்கு சங்கம் வேண்டாம்.

‘குடிஅரசு’  30.05.1926

பெரியார் முழக்கம் 25112021 இதழ்

You may also like...