உயர்ந்தவர் யார்?

ஓட்டல்காரன் – அன்னதானப் பிரபு ஆவானா ? சம்பள உபாத்தியாயர் – குருநாதனாவானா ? தாசி – காதலியாவாளா? என்பது போலத்தான் தன்தன் நலனுக்கு, தன்தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் – எப்படிப் பட்டதாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் – அதாவது தன்னைப் பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக் கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள் – தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது, பொதுவாக மதிக்காததாகாது.                                                         விடுதலை 08.04.1930

பெரியார் முழக்கம் 25022021 இதழ்

You may also like...