உனக்கு ஞாபகமிருக்கட்டும்!

நான் சொல்கிறேன், இந்த அரசியல் சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்குத் தீங்கிழைப்பதாகும்; இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல; நெருப்பில் போட்டுப் பொசுக்குவோம் என்று.

இந்த அரசியல் சட்டத்தை, யார் சம்மதத்தின் பேரில் யாரைக் கொண்டு செய்தாய்? வெள்ளைக்காரன் காலத்திலே அவன் நலனுக்காக, அவன் வகுத்த தேர்தல் விதிகளின்படி, படித்தவனுக்கும், பணக்காரனுக்கும் ஓட்டு என்கிற அடிப்படையில் நடத்திய தேர்தலில் வந்தவர்களை வைத்துக் கொண்டு, அரசியல் சட்டத்தை நிறைவேற்றி விட்டாய். வெள்ளையன் இந்தப் பிரதிநிதிகளைக் கொண்டு செய்த சட்டத்தை எதிர்த்து, நீயே சட்ட மறுப்புச் செய்திருக்கிறாய் என்பது, வடவனே உனக்கு ஞாபகமிருக்கட்டும் !                                        ‘விடுதலை’ 07.08.1952

 

பெரியார் முழக்கம் 20012022 இதழ்

You may also like...