இயந்திரமுறைத் தொழில் தேவையே !

கால்கள் இருக்க, கட்டை வண்டிகள் இருக்க இயந்திரத்தின் மூலமாய்த்தான் – அதாவது இரயில் மூலம் பிரயாணம் செய்தோம்; மோட்டாரில் பிரயாணம் செய்தோம்; ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம்; அவைகளையே எல்லா மக்களும் போக வரப் போக்குவரத்துச் சாதனமாக்கவும் ஆசைப்படுகிறோம்; மற்றவர்களும் ஆசைப்படுகிறார்கள்.

ஆகவே, இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, இது எவ்விதக் குற்றமுள்ளதும், அநியாயமானதும் என்று சொல்லி, இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.

ஆகவே, இயந்திரம் வேண்டாம் என்பது இயற்கையோடும் முற்போக்கோடும் போராடும் ஒரு அறிவீனமான பிற்போக்கான வேலையாகுமே தவிர, மற்றபடி பயனுள்ள வேலையாகாது.

குடி அரசு – 14.12.1930

பெரியார் முழக்கம் 23062022 இதழ்

You may also like...