பந்தயம் கட்டி கேட்கிறேன்…!

பந்தயம் கட்டிக் கேட்கிறேன். உலகில் நான் அறிந்த வரையில் நம்நாட்டு மக்களிடம் (இந்துக்கள் என்பவரிடம்) ஒழுக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100 க்கு 99 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன ?

நமக்கு ‘கடவுள்’ இல்லையா ? நாம்  ‘கடவுள் பக்தி’ இல்லாதவர்களா !

நாம் ‘மதம்’ அற்றவர்களா ? நமக்கு ‘கடவுள் பயம்’ இல்லையா ? ‘கடவுள் நெறி’ இல்லையா ?

நன்மை செய்தால் ‘நற்பயன்’ கிடைக்கும், தீமை செய்தால் ‘தீய பயன்’ கிடைக்கும் என்கின்ற தான எச்சரிக்கைச் சாதனங்கள் இல்லையா ?

நம்மில் பெரியவர்கள் ‘தெய்வீகத் தன்மை’ கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள் – கூறுபவர்கள், கூறும்படியான நீதிநூல்கள் இல்லையா ?

அரசாங்க கட்டுத் திட்டம், தண்டனை முதலியவைகள் இல்லையா ?

நமக்கு குருமார்கள் – மடாதிபதிகள் இல்லையா ? இவைகளும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும் போது நமக்கு நம் மக்களுக்கு ஏன் ஒழுக்கம், நாணயம், இன உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத்தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை ?

இப்படிப்பட்ட நிலை ஏற்பட என்ன காரணம் என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விடுதலை 31.07.1972‘

பெரியார் முழக்கம் 11112021 இதழ்

You may also like...