கங்கை கொண்ட (காங்கரஸ்) சாக்கடை
காங்கரசானது கங்கைக்குச் சமமாக ஒப்பிடப்படுவதுண்டு. கங்கைப் புனித நதியெனப் பெயர் பெறும். காங்கரசும் தேசீயம், சுயராஜ்யம் ஆகிய விஷயங்களில் நாட்டினுக்கும் மக்களுக்கும் அளப்பறிய நன்மை செய்யும் ஸ்தாபனமாகக் கருதப்படுகிறதன் காரணமாகக் கங்கைக்கு உவமானங் கூறப்படுகிறது. கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன. காங்கரஸ், கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன, கங்கையில் கலக்கும் சாக்கடைக் கங்கையுடன் ஐக்யமாகிப் புனிதமாகி விடுகிறது. காங்கரஸ் கங்கையில் கலக்கும் சாக்கடைகளோ தாம் புனிதமடைதல் ஒரு புறமிருக்கக் காங்கரஸ் கங்கையையே அசுத்தப்படுத்திவிட்டன. தேசீயம் வேண்டும் சபையில், சுயராஜ்யம் வேண்டும் சபையில், நாட்டினடிமையொழிய விரும்பும் சபையில், நாட்டின் க்ஷேமாபிவிர்த்தியை கோரும் சபையில் இன்று நர்த்தனமிடுபவை எவை எனக் கூர்ந்து நோக்கின் உண்மை வெளியாகும். காங்கரஸ் மகாசபையில் கூடியிருப்போர் அத்தனைபேரும், ஏன் 30 லக்ஷ மக்களும் சுயராஜ்யத் தாகங் கொண்டுதான், தேசீயப் பற்றுக் கொண்டுதான் சேர்ந்து இருக்கின்றனரா என்பதனைச் சிறிது ஆராய்ந்தால் உண்மை புலனாகும். காங்கரஸ் மகாசபையில் இன்று வகுப்பு வாதிகள், பதவி வேட்டைக்காரர்கள்,...