* “தங்கள் சுயநலத்துக்கென்றே சர்க்காருடன் ஒத்துழைக்காமல் ஒத்துழையாமை என்னும் பேரால் அரசின் யந்திரத்திற்கு தொந்தரவு கொடுத்தும் பொதுஜன ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஒழுங்குக்கும் விரோதமாகவும் ஒரு சுயநலக் கூட்டத்தார் சண்டித்தனம் முதலிய தொல்லைகள் விளைவித்து வந்த நெருக்கடியான சமயத்தில் நல்ல ஆட்சியையும் பொதுஜன நன்மையையும் கருதி மனப்பூர்வமாக சர்க்காருடன் ஒத்துழைத்தும் அதனால் விளக்கமறியா பாமர மக்கள் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி வருவதையும் லôயம் செய்யாமல் அதற்காக தொண்டாற்றியும் வந்த தமிழ் மக்களுக்கு சிறிதும் நன்றி விசுவாசம் காட்டாமல் சுயநல புரோகித கூட்டத்தாருக்கு வசப்பட்டு நம்மை அவர்களது பழிவாங்கும் தன்மைக்கு ஆளாக்கி விட்டுக் கொண்டிருக்கும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் நடத்தைக்கு ஆக இம்மகாநாடு வருந்துவதுடன் அவரிடம் இம்மாகாண தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட இடமில்லையென்று இம்மகாநாடு அபிப்பிராயப்படுகிறது.

இம்மாகாண மக்களின் நன்மையையும் சாந்தியையும் சமாதானத்தையும் உத்தேசித்து மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தியா மந்திரியை கேட்டுக் கொள்கிறது.”

You may also like...