பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?
கடந்த 10 ஆண்டுகால மோடியின் தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சி நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு சென்றிருக்கிறது. இதனுடைய தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை முதன்மையாகக் கொண்டது. அந்த லட்சியத்தை செயல் வடிவமாக்கும் முயற்சியில் தான் பாஜக ஆட்சி தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனைகளே அல்ல. மதச்சார்பற்ற கொள்கையோடு நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டை மதச் சார்புள்ள ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு இங்கே ஜனநாயகமும் ஜனநாயகக் கட்டமைப்புகளும் மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. எனவே ஜனநாயகத்தையும் ஜனநாயகத்தின் நிறுவனங்களையும் சீர்குலைத்து அவைகளை பலவீனம் ஆக்க வேண்டும். முதலில் நாடாளுமன்றத்தை பார்ப்போம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக சீர் குலைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வராமல் வெளியேற்றப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான...