சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னை : அன்னை மணியம்மையார் 105வது பிறந்தநாள் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்வு 10.03.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
பிரீத்தி வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தோழர்கள் இரண்யா, தேன்மொழி, ரம்யா ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்துரை வழங்கினர்.
தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி, சமூக செயற்பாட்டாளர்கள் அக்னி – மரக்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். மதிய உணவிற்கு பிறகு தோழர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக யாழினி நன்றி கூறினார்.
திருப்பூர் : உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் 08.03.2024 அன்று நடந்த மகளிர் தின விழாவில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 15032024 இதழ்

You may also like...