பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஈரோடு இரா.வீரமணி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வை கழக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார்.
முன்னதாக விடுதலைக் குரல் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இணையேற்பு விழாவின் மகிழ்வாக மணமக்கள் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார்கள்.

பெரியார் முழக்கம் 15032024 இதழ்

You may also like...