தேசியக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதா?
தேச பக்திக்கு தாங்களே முழு உரிமையாளர்கள் என்று பாஜகவினர் நாடகம் போட்டார்கள். ஆனால், இவர்களின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தேசியக்கொடியை ஏற்றுக் கொண்டதா ? வரலாறு என்ன ? ஒவ்வொன்றாக பார்ப்போம். 1) காங்கிரஸ் கட்சி நடுவில் கை இராட்டினம் உடைய மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொண்டது. 1929 -இல் இலாகூரில் கூடிய காங்கிரஸ், “ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர நாளாகக் கொண்டாடி, மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும்”என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், “அதை ஏற்க முடியாது, அது இந்துக்களின் கொடி அல்ல” என்று பகிரங்கமாக அறிவித்தது. அதன் தலைவர் ஹெட்கேவர், ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் “பஹவா ஜந்தா” என்ற காவிக் கொடியைத் தான் ஏற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு 1930 ஜனவரி 21 இல் சுற்றறிக்கை அனுப்பினார். ஆதாரம் (ஹெட்கேவர் கடிதங்கள்.வெளியீடு அர்ச்சனா பிரகாசன், இந்தூர் 1981.பக்கம் 18) இந்த சுற்றறிக்கை...