நஞ்சு விதைக்கும் மாதவி!

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுபவர் மாதவி. இவர், தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல செய்கை செய்து வெறுப்பு அரசியலை தூண்டியதுடன், அது சர்ச்சையானதும் ‘’நான் மசூதியை பார்த்து அம்பு விடவில்லை’ என்று பின்வாங்கினார்.
இவரை சமீபத்தில் ஊடகர் பர்கா தத், ஒரு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் இடஒதுக்கீடுக்கு எதிரான வன்மத்தையும், இட ஒதுக்கீட்டில் பாஜக அரசியல் நிலையையும் தெளிவுபடுத்துகிறார் மாதவி.
அரசியலுக்கு எப்படி வந்தீர்கள் என்கிற கேள்விக்கு, “தான் ஏழ்மையான சூழலில் வளர்ந்தேன். ஆனால், எஸ்.சி, எஸ்.டி இல்லை. கல்லூரியில் எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. நான் படித்துக்கொண்டே பல்வேறு வேலைகளை செய்து என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டேன். அதேநேரத்தில், பொருளாதாரத்தில் வசதியான தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதை அறிந்த நேரத்தில்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றியது’’ என்று கூறுகிறார் மாதவி.
வசதி குறைந்த தாழ்தப்பட்ட சமூகத்தைச் சேராத இவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. ஆனால், வசதியான தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு உதவி கிடைத்துவிட்டது. இப்படியான அரசியல் புரிதலில் இருந்து மாதவி பாஜகவின் குரலாக ஒலிக்கிறார். இதுதான் அந்தக்கட்சியின் செயல்திட்டமும். அதாவது பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்கிற கருத்தை முன்வைக்கிறார் மாதவி.
பொருளாதார ரீதியில் என்று சொல்லிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வருமான வரம்பை வருடத்திற்கு மூன்று லட்சம் என்றும், அதாவது மூன்று லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் வந்தால் இவர்கள் பணக்காரர்கள். ஆனால் அரிய வகை எழையினருக்கு வருடத்திற்கு எட்டு லட்சம் வருமான வரம்பு வைப்பார்கள்.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட வரலாறும், வறுமையில் உழலும் பெரும்பான்மை இடைநிலை சாதிகளைப் பற்றிய எந்தவொரு கவலையும், புரிதலும் இல்லாமல் இடஒதுக்கீடு குறித்து நஞ்சு விதைக்கும் மாதவிகளும், அவர்களின் அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
– முரசொலி

பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

You may also like...