Category: திவிக

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

கண்டன ஆர்ப்பாட்டம் ! அக்.25 – திருப்பூர். மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வழிகாட்டும் இந்திய அரசியல் சட்ட சாசனத்திற்கெதிராக கல்விக்கூடங்களில் மதமூட நம்பிக்கைகளை வளர்க்க மதவாதிகளுக்கு துணைபோய் தன் கடமையிலிருந்து தவறி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் இழைக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! நாள் : 25.10.2018 வியாழக்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில், திருப்பூர். கண்டன உரை : தோழர் துரைவளவன்,மாநில துணைசெயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர் அபுதாஹிர்,மாவட்டத்தலைவர்,SDPI கட்சி, தோழர் சம்சீர் அஹமது,மாவட்டச்செயலாளர்,SFI. தோழர் தேன் மொழி,மாவட்டச்செயலாளர்,...

நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும் கருத்தரங்கம் திருச்சி 21102018

நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும் கருத்தரங்கம் திருச்சி 21102018

திருச்சியில் 21.10.2018 ஞாயிறு அன்று நடைபெற்ற SDPI அமைப்பின் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் காலை அமர்வில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள் ‘நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர்...

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தாள், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 138 ஆவது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராசர் 118 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழா பொதுக் கூட்டம்,  13.10.2018 ம் தேதி குமாரபாளையம்  பேருந்து நிலையத்தில்  மாலை 5 மணிக்கு, டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் தலித் மக்களின் உரிமை சார்ந்த பாடல்கள் மூலம் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்விற்கு, கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மேலும், கேப்டன் அண்ணாதுரை மாவட்ட காப்பாளர், சரவணன் மாவட்ட செயலாளர், வைரவேல் மாவட்ட அமைப்பாளர், முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர், மோகன் குமாரபாளையம், ரேணுகா திராவிடமணி குமாரபாளையம் ஆகியோர் முன்னிலை வகிக்க, குமாரபாளையம் இரா.மோகன் வரவேற்புரையாற்றினார். மேலும் நிகழ்வில், காமராசர் உருவப்படத்தை அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி திறந்து வைத்தார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை சாக்கோட்டை இளங்கோவன், தந்தை பெரியார் உருவப்படத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி...

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் அக்.13, 2018 பிற்பகல் 2 மணியளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு  அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். களப்பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றை 5 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை 10 கழகப் பொறுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுகளை விடுதலை இராசேந்திரன் அறிவித்தார். கழக ஏடுகளுக்கான சந்தா சேர்ப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கழகத் தோழர்களை கழகத் தலைவர் பொதுச்செயலாளர் சந்தித்து, கழக...

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் செயலவையில் பங்கேற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கருத்துகளை முன் வைத்தனர். செயலவைக் கூட்டங்களில் கழகத் தலைவருக்கு வணக்கம் கூறுவதற்கு பதிலாக நன்கொடை வழங்கி உரையைத் தொடர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து, மடத்துக்குளம் மோகன் தலைவருக்கு ரூ.500/- வழங்கி உரையைத் தொடர்ந்தார். தோழர்கள் ஆர்வமாக வரவேற்றனர். சிலர் அதேபோல் ரூ.100, ரூ.200 என்று தலைவரிடம் வணக்கம் கூறி நன்கொடை வழங்கினர். மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. சாக்கோட்டை இளங்கோவன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களைப் பாடி தோழர்களை மகிழ்வித்தார். தலைமைக்குழு மற்றும் செயலவைக் கூட்டங்களுக்கு திருப்பூர் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. கழகக் கட்டமைப்பு நிதி – கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பில் மாவட்டங்களின் பங்களிப்பைத் தோழர்கள் அறிவித்தனர். நிமிர்வோம் இதழுக்கு மாதம் 1000 நன்கொடை தருவதாக அறிவித்த ஆசிரியர் சிவகாமி, முதல் தவணையாக ரூ.5,000 வழங்கினார். சென்னை அன்பு தனசேகர் மாதம் ரூ.1000 வழங்குவதாக...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் கூட இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டை மட்டும் விலக்கி வைத்து ஆட்சி மொழி விதிகளை உருவாக்கியதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி இந்தியாவைப் பற்றி பல ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நான்கைந்து ஆண்டு களுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் ஒரு நூலை எழுதினார். அவர் ஒரு வங்க நாட்டுக்காரர். அவரோடு இணைந்து அந்த நூலை எழுதியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ழின் தெரசு. அந்த நூலில் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைத்தான் அவர்கள் குறிப்பிட் டார்கள். குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் இந்தியாவோடு இல்லாமல் இருந்திருந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருக்கும் என்று...

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில்  முப்பெரும் விழா

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

எம்.ஜி.ஆர். நகல் கழக செயல் பாட்டாளர் கரு. அண்ணாமலை, தோழர்களுடன் இணைந்து நடத்தி வரும் அமைப்பு ‘கற்க கல்வி அறக் கட்டளை’. கரு. அண்ணாமலை மற்றும் சக தோழர்கள் வீ.பொற் கோவன், குமணன், விருகை செல்வம், மூவேந்தன்,குன்றத்தூர் சசிக்குமார், விநாயகமூர்த்தி, மணி மொழியன், சு,துரைராசு, இராமபுரம்  க,சுப்பிரமணி, கரிகாலன், சிலம்பம் சிவாஜி, மதன்குமார், சட்டக் கல்லூரி மாணவர்கள் சுரேசு, அன்பரசன், அம்பேத்கர் துரை மற்றும் தோழர்களின் கடுமையான உழைப்பில் கிட்டத்தட்ட 8 இலட்ச ரூபாய் செலவில் “கற்க” கல்வி அறக்கட்டளை சார்பில், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, கல்வித்தந்தை காமராசர் நினைவுநாள், தமிழ்வழிக் கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு உதவி வழங்கும் விழா ஆகிய “முப்பெரும் விழா” 2.10.2018 அன்று சிறப்பாக நடந்தது. முகநூலில் பார்த்து கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கிய தோழர்கள், எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் (இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முக்கிய காரணமானவர்கள்), விழாவில் கலந்துகொண்டு...

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

1.10.2018 அன்று விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் கல்வி உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், பாக்கம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக கடுவனூர் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து பாக்கம் பொதுக் கூட்டம் மேடை வரை தோழர்கள் பறையிசையுடன் பேரணியாக வந்தனர். கடுவனூர் – பாக்கம் இரண்டு ஊர்களில் பெரியார் சிந்தனை பலகை திறப்பு, கல்வெட்டு திறந்து கழகக் கொடியையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, பொதுக் கூட்டம் கழகத் தோழர்களின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. பெரம்பலூர் தாமோதரன் ‘மந்திரமல்ல, தந்திரமே’ என்ற அறிவியல் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இரா. துளசிராஜா தலைமை வகித்தார். என்.மா. குமார், தே. இராமச்சந்திரன், மு. நாகராஜ், சா. நீதிபதி,  கே.வே. ராஜேஷ், சி. ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்க ச.கு....

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து ஒன்றியப் பகுதியில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் செய்வது என மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 23.09.2018 ஞாயிறு அன்று அந்தியூர் ஒன்றியம் அத்தாணி பகுதியில் பரப்புரைப் பயணம் துவங்கியது. அத்தாணி பகுதியில் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், யாழ்மதி ஆகி யோரின் பாடல்களுடன் பரப்புரைப் பயணம் துவங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணு கோபால், நம்பியூர் இரமேசு, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்றம்  சுந்தரம் நன்றி கூறினார். அடுத்து பயணம்  கீழ்வானி பகுதிக்குச் சென்று அடைந்தது. கீழ்வானி பகுதியில்  வீரா கார்த்திக்,  இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். கீழ்வானி இந்திரா நகரில் அமைந்துள்ள கழகக் கொடிக் கம்பத்தில் ...

கழக ஏட்டுக்கு 100 சந்தா;  கால்பந்து போட்டிகள்  மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

கழக ஏட்டுக்கு 100 சந்தா; கால்பந்து போட்டிகள் மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

27.09.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்மேரீஸ் பாலம் அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி சார்பாக மாநில சுயாட்சியின் நாயகன் டாக்டர் கலைஞர் நினைவரங்கில் பெரியாரின் 140வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் கால்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை த.குமரன் தலைமையில், தோழர்கள் பி.அருண், து.அரவிந்தன், இரா.பரணிதரன் ஆகியோர் முன்னிலை யில் சீ.பிரவீன் குமார் வரவேற்புரையாற்ற தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன் ஒருங்கிணைத்தார். முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் பகுத்தறிவு, நையாண்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பகுதி மக்கள் ஓரணியாகத் திரண்டு வந்து பகுத்தறிவு கருத்துகளைக் கேட்டு சிந்தித்தனர். அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் அருண்,  திருமூர்த்தி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ச்சியாக ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான், கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. நீண்ட நெடிய காலம் தன்னுடைய அரசியலால், எழுத்துகளால், இலக்கியப் பணிகளால், கலை செயல்பாடுகளால் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞரை நாம் இழந்து நிற்கிறோம். இதில் தலைப்பே கூட கருஞ்சட்டைக் கலைஞர் என்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பெரியார் இயக்கத்தில், சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றிய கலைஞர், அதற்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகமாக உருப்பெற்ற பிறகு தன்னுடைய வீரியமிக்க சொற் பொழிவுகளால் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் எழுச்சியை, இன எழுச்சியை ஏற்படுத்தியதில் ஒரு பங்கு உடையவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு பெரியாரின் தொண்டர் என்ற அடிப்படையில், பெரியாரிய பார்வையில் அவர் ஆற்றிய பணிகள், அவருடைய செயல்பாடுகளைப் பற்றி நாம் பேசுவதைத்தான் நோக்கமாகக் கொண்டு தோழர்கள் ’கருஞ்சட்டைக் கலைஞர்’ என்ற தலைப்பைக் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன். “உலகத்தின்...

எச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்

எச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்

திருப்பூரில் பெரியார் சிலையின் சுற்றுச் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த எச்.ராஜாவின் பிறந்தநாள் சுவரொட்டிகள் பா.ஜ.க.வினரை வைத்தே கிழித்தெறியப் பட்டது. தமிழகம் முழுவதும் பெரியார் சிலையை சேதப்படுத்தல் மற்றும் சிலையை அவமானப்படுத்தும் விதத்தில் இந்துத்துவவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலைகள் உள்ள இடத்தின் சுற்றுச்சுவரில் வெள்ளியன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. திட்டமிட்டு வன்முறையை உண்டாக்கும் வகையில் இந்துத்துவவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த செயலை அறிந்த பெரியாரிய அமைப்பினர் அவ்விடத்தில் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு தயாராகினர். இதற்கிடையே, இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டுவதற்காக திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை பாஜகவினரே கிழித்து எறிய வேண்டும் என பெரியார் அமைப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து பாஜக நிர்வாகிகளிடம் பேசிய காவல்துறையினர், அக்கட்சியைச் சேர்ந்தவர்களை...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் கருஞ்சட்டைக் கலைஞர் என்ற தலைப்பில் செப்டம்பர் 30ஆம் தேதி திருச்செங்கோட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் து.சதிசுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சு இரா.தர்சினி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் மாவட்ட தலைவர்  மு.சாமிநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலைஞரின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் ஆகியோரும் உரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி பேசுகையில், “காவிகளை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்றபோது உறுதியளித்திருக்கிறார். அவருடைய பாதையில் நாங்களும் காவிகளை எதிர்க்க உறுதியாய்...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

ஈரோடு தெற்கு : 17.09.2018 பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. காலை, ஈரோடு ப.செ. பூங்கா பெரியார் சிலை வளாகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின் தி.க., த.பெ.தி.க., தி.வி.க. அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் ஊர்வலமாக பெரியாரின் இல்லத்தை அடைந்து அங்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கருஞ்சட்டை தோழர்கள் பெரியாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இறுதியாக சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பேரணியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும்...

இந்து மதமும் திராவிடர் இயக்கமும்

இந்து மதமும் திராவிடர் இயக்கமும்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். காவி ஆட்சியை வீழ்த்துவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இப்போது அறிவிக்கிறார். இவரே எங்களது கட்சியில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று ஏற்கனவே கூறியவர் தானே? இது முரண்பாடு அல்லவா? என்று கேட்டார்கள். முரண்பாடு அல்ல என்று நான் பதில் கூறினேன். பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் அனைவருமே விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ‘இந்து’க்கள் என்ற பட்டியலில் தான் அடைத்து வைக்கப்பட் டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலை உருவாக்கி அவர்களுக்கு சமூகநீதி உரிமைகள் வழங்கப்பட்டாக வேண்டும் என்ற நிலையை உருவானதற்கே அடிப்படை என்ன? இந்த மக்களை இந்துக்களாகி, பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமையாக்கி,  அவர்கள் மீது சுமத்திய இழிவை நீக்கவும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தரவும் இந்த இடஒதுக்கீடு பட்டியல்களே வந்தன! ‘இந்துக்கள்’ என்றாக்கப்பட்டதால் உழைக்கும் மக்கள் கொடுத்த கடும் விலை இது. திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் – சுயமரியாதை,...

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

15.09.2018 அன்று கழகத் தலைவர்  கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற தமிழர் கல்வி உரிமை மீட்புப் பயணம் குறித்த தலைமைக் குழு – பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் –  இயக்கக் கொள்கைப் பரப்புரைக்கும்,  மக்களிடையே கருத்துகளை எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கும் கலைக்குழுக்களின் தேவை குறித்து விரிவாக  விவாதிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் முதல் முன்னெடுப்பாக தமிழ்நாடு மாணவர் கழகமும், மாற்றம் பகுத்தறிவு கலைக் குழுவும் இணைந்து சேலம் மாவட்டம் கொளத்தூர், உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் இரண்டு நாள் பறை பயிற்சிப் பட்டறையை எதிர்வரும் 3.11.2018,  4.11.2018 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணமாக ரூ.500 (பயிற்சி, உணவு செலவுகள் உட்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான பயிற்சிக் கட்டணம்  ரூ.1200 ஆகும். பயிற்சி பெற விரும்பும்  கழகத் தோழர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்களுக்குத்...

மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி நடத்தும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டி 23.09.2018 அன்று காலை 8.00மணிக்கு குருபுரம் விளையாட்டு திடலில் தொடங்கப்பட்டது. போட்டியை காங்கிரசை சார்ந்த ஐடீஊ பாலு தொடங்கி வைத்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கும், கழகத் தோழர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். மாலை 6.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகை தந்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து, இறுதி சுற்றுக்கு தகுதியான அணிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து இறுதிச் சுற்றை தொடங்கி வைத்தார். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

வடசென்னை  கழகம் நடத்திய கருத்தங்கம்

வடசென்னை கழகம் நடத்திய கருத்தங்கம்

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளில் அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம் 22.09.2018 அன்று மாலை 6 மணிக்கு தாய் ரமாபாய் பவன், பெரம்பூரில் தட்சணாமூர்த்தி முன்னிலையில், நா.பாஸ்கர் வரவேற்புரையாற்ற, இராஜீ தலைமையில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங் கிணைத்தார். இந்த கருத்தரங்கத்தில் “பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்” என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆய்வுரையாற்றினார். “பா.ஜ.க ஆட்சியில் சந்திக்கும் அடக்குமுறைகள்” என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் .ஆளுர் ஷாநவாஸ்  சிறப்புரையாற்றினார். இறுதியாக வட சென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 17.09.18 அன்று  மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. எழுத்தாளர் வி.எம்.எஸ் சுபகுணரஜன்,  பேராசிரியர் கல்யாணி, ஆசிரியர்  இராமமூர்த்தி ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை மருதம் இரவி கார்த்திகேயன்   ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, கழகத் தலைவரை சால்வை அணிவித்து வரவேற்று நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து கேட்டுகொண்டிருந்தார். தி.மு.க. கட்சித் தோழர்கள், அய்.ஏ.எஸ் பயிற்சி மாணவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக செயற்குழு உறுப்பினர் அய்யனார்,  விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன்,  செஞ்சி பெரியார் சாக்ரட்டீஸ்,  சென்னை தம்பி மண்டேலா, நடராசன், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி பரப்புரை செயலாளர் விஜி,  இளங்கோவன்,  பெரியார் கணேசன், அழகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

குமரி மாவட்டம் : திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் நடத்திய பெரியார்140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு, விண்ணரசு வித்யா கேந்திரா, அழகிய மண்டபத்தில் தக்கலை எஸ்.கே.அகமது (பெரியாரியலாளர்) தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஷ்ணு “பெரியார் பார்வையில் கடவுள் மறுப்பு” என்னும் தலைப்பிலும், நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழகம், மாவட்டத் தலைவர்) “பெரியார் பார்வையில் இடஒதுக்கீடு” என்னும் தலைப்பிலும், தமிழ் மதி (மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) “பெரியார் பார்வையில் நீட்” என்னும் தலைப்பிலும், போஸ் (மார்க்சியலாளர்) “பெரியார் பார்வையில் பொதுவுடைமை” என்னும் தலைப்பி லும், மகிழ்ச்சி (ஒருங்கிணைப்பாளர், பொது வுடைமை தொழிலாளர் கட்சி) “இளைஞர்கள் எதை நோக்கி பயணிப்பது” என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். பின்பு கலந்துக்கொண்ட அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சூசையப்பா (முன்னாள்மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) நன்றி கூறமுடிவுற்றது. கூட்டத்தில் மஞ்சு குமார் (மாவட்டப்...

பயணக் குழுவினர் ஆக்கபூர்வ யோசனைகளை முன்வைத்தனர் ஈரோட்டில் பரப்புரைப் பயண மீள் ஆய்வுக்குழு கூட்டம்

பயணக் குழுவினர் ஆக்கபூர்வ யோசனைகளை முன்வைத்தனர் ஈரோட்டில் பரப்புரைப் பயண மீள் ஆய்வுக்குழு கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்பு பரப்புரைக் குழுவில் பங்கேற்ற தோழர்கள், பயண ஒருங்கிணைப்பாளர்கள் செப்டம்பர் 15 அன்று கூடி, பயணத்தின் அனுபவங்கள், மேலும் பயணத்தை செழுமை யாக்குதல் குறித்து விரிவாக விவரித்தனர். ஈரோடு கே.எஸ்.கே. மகாலில், 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.  இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். கோவை நிர்மல் குமார், சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் மோகன், விழுப்புரம் அய்யனார், சென்னை உமாபதி, மேட்டூர் அ. சக்திவேல், கொளத்தூர் பரத், காலாண்டியூர் ஈஸ்வரன், குருவை நாத்திகஜோதி, பவானி வேணுகோபால், திருப்பூர் முத்துலட்சுமி, காவை இளவரசன், சந்தோஷ் குமார், பெரம்பலூர்...

ஈரோடு-சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

ஈரோடு-சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

ஈரோட்டில் : ஈரோட்டில் செப்.15 அன்று மாலை 5 மணி யளவில் விநாயகன் சிலை அரசியல் ஊர்வலத்தில் நடக்கும் ஒழுங்கு மீறல்களைக் கண்டித்து காளை மாடு சிலை அருகிலிருந்து பெரியார் கைத்தடி ஊர்வலம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்பட்டது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடங்கி வைத்தார். கழகத் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அமைப்புச் செய லாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட 100 தோழர்கள் கைதானார்கள். ஆதித் தமிழர் பேரவை நாகராஜன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் அக்கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் : மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 16.09.2018 அன்று மாலை 4 மணிக்கு ஐஸ் அவுஸ் மசூதி அருகில்...

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...

திவிக செயலவை கூட்டம் 14102018 திருப்பூர்

திவிக செயலவை கூட்டம் 14102018 திருப்பூர்

“செயலவைக் கூட்டம்” மாற்று தேதி அறிவிப்பு. பெருமழை அறிவிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநில செயலவைக் கூட்டம் வரும் அக்14 ஞாயிறு அன்று, திருப்பூரில் நடைபெறும். நாள் : 14.10 2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி இடம் : டைய்யர்ஸ் அசோசியேசன் கட்டிடம், முருகன் கோயில் பின்புறம், வாலிபாளையம், திருப்பூர். கழக செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். மாவட்டத்தின் மற்ற செயலவை உறுப்பினர்களுக்கும் தெரிவியுங்கள். – கொளத்தூர் தா.செ.மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் . 06.10.2018.

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் ! வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கையும்,இசுலாமிய மக்களுக்கு தக்க பாதுகாப்பும் வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல் ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. செங்கோட்டையில் கடந்த 13.09.2018 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலம் திட்டமிட்டு கலவரமாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்வலத்தில் இந்து தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்கி இசுலாமிய மக்களின் வீடுகள்,வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு சிலரை தாக்கி அம்மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அடுத்தநாளும் வன்முறை தொடர்ந்து அப்பகுதி ஒரு பதட்டமான பகுதியாக மாறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே இப்பகுதியில் வன்முறையை தூண்டுவது காவல்துறையில் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டும் வன்முறை நிகழவிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என இசுலாமிய...

கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை

கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்களைப் பற்றியும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தோழர்.கொளத்தூர்மணி அவர்களைப் பற்றி, தவறான, உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீடியோவாக வெளியிட்டு தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.. அந்த வீடியோவில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய குண்டு சாந்தனை தோழர்.கொளத்தூர்மணி தான் காட்டிக் கொடுத்ததாக அவதூறாகக் கூறியுள்ளார்.. மேலும், அந்த வீடியோவில், வேலூர் சிறையிலிருந்து 44 விடுதலைப்புலிகள் சுரங்கம் தோண்டி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட கொளத்தூர்மணியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர்நிறுத்திய போது, தன் கையில் துப்பாக்கி இருந்தால் அப்போதே சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் பேசியுள்ளார்.. தனது பணிக்காலத்தில் இது போன்று பேசாமல், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு அந்த அதிகாரி இது போன்று பேசவேண்டிய அவசியம், மர்மம் என்ன என்பதையும் அறிய வேண்டி உள்ளது.. ராஜீவ்...

அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! ஆண்டிமடம் 16092018

அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! ஆண்டிமடம் 16092018

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் – கவரப்பாளையம் பெரியார் அண்ணா வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! நாள் : 16-09-2018 மாலை 2 .00 மணி #சிலை_திறப்பு_நிகழ்ச்சி -1 தந்தை பெரியார். – தோழர் கொளத்தூர் மணி பேரறிஞர் அண்ணா – பேரா.மணியன் மக்கள்திலகம் MGR – எஸ் ஆர் இராதா நாள் : 17-09-2018 காலை 9 .00 மணி #சிலை_திறப்பு_நிகழ்ச்சி -2 வான் புகழ் வள்ளுவர். – தோழர்.Dr.தொல்.திருமாவளவன் பெருந்தலைவர் காமராசர். – தோழர்.டி.கே அரங்கராசன் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் – புதுக்கோட்டை பாவாணன் பிரபாகரன் காவியம் நூல் வெளியிடுபவர் தோழர் .கோவை.கு .இராமகிருட்டினன்

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! மயிலாடுதுறை 02092018

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! மயிலாடுதுறை 02092018

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! நாள் – 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம்- கோவிந்தம்மாள் திருமண மண்டபம், மயிலாடுதுறை. இணையர்கள்- மு.அன்பு, மாவட்ட அமைப்பாளர், திவிக அ.இளமதி தலைமை – ம.மகாலிங்கம் மாவட்டத்தலைவர், வரவேற்புரை- நா.இளையராஜா, தலைமைக்குழு உறுப்பினர், நடத்தி வைத்து வாழ்த்துரை – தோழர் கொளத்தூர் மணி முன்னிலை – விடுதலை இராசேந்திரன், வாழ்த்துரை- பேரா.த.ஜெயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சாக்கோட்டை மு.இளங்கோவன், நன்றியுரை- ப.தமிழ்வேலன் நகர செயலாளர்.

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுசூழல் பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்யவும்,உச்சநீதி மன்றம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்துள்ள உத்தரவுகளை அமுல் படுத்த வலியுறுத்தியும்,மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரியும் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த ஆட்சித்தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு அவர்கள் தலைமையில் 10.09.2018 மாலை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கழகத் தோழர்கள் மனுவை அளித்தனர். அப்போது கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் விஜயகுமார்,அகிலன், ராமசாமி,தனபால்,முத்து, நீதிராசன் ஆகிய பொறுப்பாளர்கள் உடன்...

தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம் ஈரோடு 15092018

தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம் ஈரோடு 15092018

”தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம்” இடம்: KKSK மகால்,பவானி ரோடு,ஈரோடு நாள்: 15.9.18,சனி, காலை 10 மணி *தலைமை:* தோழர்.கொளத்தூர்மணி *முன்னிலை:* தோழர்.விடுதலை இராசேந்திரன் *நிகழ்ச்சி ஏற்பாடு:* தோழர்.இரத்தினசாமி *தொடர்புக்கு:* தோழர்.வேணுகோபால் 97883 64964 தோழர்.சண்முகப்பிரியன் 99444 08677

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” – கருத்தரங்கம் விழுப்புரம் 17092018

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” – கருத்தரங்கம் விழுப்புரம் 17092018

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” எனும் தலைப்பில் ”கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் கருத்துரையாற்றுகிறார். நாள் : 17.09.2018,திங்கள் நேரம் : மாலை 5.00 மணி. இடம் : தளபதி அரங்கம்,கலைஞர் அறிவாலயம், விழுப்புரம். எழுத்தாளர் சுபகுணராஜன்,பேராசியர் பா.கல்யாணி ஆகியோரும் கருத்துரையாற்றுகிறார்கள்.

தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! 29092018 மணவாசி கரூர்

தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! 29092018 மணவாசி கரூர்

”திராவிடமும் தமிழ்தேசியமும்” எனும் தலைப்பில் கழகத்தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! நாள் : 29.09.2018 சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : பெரியார் நினைவு சமத்துவபுரம்,மணவாசி. கலைஞர் படம் திறந்துவைத்து உரை : ‘திருமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன்’, துணைப்பொதுச்செயலாளர்,தி.மு.க. ”திராவிடர் மாணவர் எழுச்சி” எனும் தலைப்பில் ‘மானமிகு பொத்தனூர் கா.சண்முகம்’ ( தலைவர்,பெரியார் அறக்கட்டளை) அவர்களும், ”பெரியாரின் இன்றைய தேவை” எனும் தலைப்பில் ‘திரு.ஆ.வந்தியத்தேவன்’,(அமைப்புச்செயலாளர் ம.தி.மு.க.)அவர்களும், ”பெரியாரும் பெண்ணியமும்” எனும் தலைப்பில் ‘தோழர் கிறிஸ்டினா சாமி’,(அகில இந்திய துணைத்தலைவர்,சுய ஆட்சி இந்தியா) அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், கரூர் மாவட்டம்.

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! 15092018

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! 15092018

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! கழகத்தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைமையில்…. மதத்தை அரசியலாக்காதே ! மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ”பெரியார் கைத்தடி ஊர்வலம்” நாள் : 15.09.2018,சனிக்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : தந்தை பெரியார் சிலை வளாகம் (ப.செ.பூங்கா), ஈரோடு. பேரணியை துவக்கி வைப்பவர் : தோழர் விடுதலை ராசேந்திரன்,பொதுச்செயலாளர், தி.வி.க. தோழமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம்! 16092018

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம்! 16092018

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம் ! தென்சென்னை மாவட்டச்செயலாளர் தோழர் இரா.உமாபதி அவர்கள் தலைமையில், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து. நாள் :16.09.2018(ஞாயிற்றுக்கிழமை) நேரம் : மாலை 4 மணிக்கு இடம் : திருவல்லிக்கேணி,ஐஸ்அவுஸ் மசூதி அருகில். மதத்தை அரசியலாக்கும் மதவாதத்திற்கு எதிராக அணிதிரள்வோம்… வாரீர் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.”

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.”

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.” தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு…. நாள் : 22.09.2018 (சனிக்கிழமை) நேரம் : மாலை 6 மணி இடம் : தாய் ராமாபாய் பவன்,சடையப்பதாஸ் தெரு, பெரம்பூர். கருத்துரை: ‘தோழர்.விடுதலை இராசேந்திரன்’ பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் ‘தோழர்.ஆளூர் ஷாநவாஸ்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #வாருங்கள்_தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு :7299230363

பாரூக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவிய தோழர்கள்

பாரூக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவிய தோழர்கள்

மதவெறிக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் குழந்தைகளுக்கான  2018 முதல் பருவ பள்ளிக் கட்டணம் ரூ46,492/- செலுத்தி அவர்களது இரண்டாம் வருடத்திய கல்வியினை துவக்கி வைத்துள்ள வழக்கறிஞர் சிவகுமார், வழக்கறிஞர் கலையரசு ஆகியோருக்கும்,  கடந்தாண்டு இரண்டாம் பருவ கட்டணம் ரூ. 34000 செலுத்திய மதுரை வழக்கறிஞர் தன பாலாஜி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. பாரூக் குழந்தைகளை இஸ்லாமிக் பள்ளியில் இருந்து எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு இரண்டு பருவக்கட்டணம் செலுத்த வேண்டும். வாய்ப்புள்ள தோழர்களிடம் உதவி பெற்று செலுத்தி வருகிறோம். வாய்ப்பிருக்கும் தோழர்கள், ஆதரவாளர்கள், பள்ளிக் கட்டணத்திற்கு உதவ விரும்பினால் மகிழ்வோம். நேருதாஸ், திராவிடர் விடுதலைக் கழகம் , கோவை மாவட்டம் பெரியார் முழக்கம் 13092018 இதழ்

வேலூரில் திராவிட வேர்கள் கருத்தரங்கம்

வேலூரில் திராவிட வேர்கள் கருத்தரங்கம்

8.9.2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் விரிஞ்சிபுரம் வி.எஸ்.பி மகாலில் திராவிட வேர்கள் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு எழுத்தாளர் டான் அசோக் தலைமை தாங்க திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, கல்வியாளர் பாலா கருத்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘கருஞ்சட்டை கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அந்த நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி தோழர்கள் திராவிட கருத்தியலில்  ஆர்வம் கொண்ட இளைஞர்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தின் வேலூர் மாவட்ட அமைப்பாளர்கள் நெமிலி திலீபன், குடியாத்தம் சிவா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றார்கள். பெரியார் முழக்கம் 13092018 இதழ்

பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது

பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது

திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09.09.2018 அன்று வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு மற்றும் மாவட்ட மாநகர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பெரியார் 140ஆவது பிறந்தநாள் அன்று 17.09.2018 மாலை 4 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத் தில் இருந்து பேரணியாக புறப்பட்டு இரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு. 24.09.2018 திங்கள் அன்று காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலையில் இருந்து இரு சக்கர வாகன ஊர்வலமாய் நகரில் 25 இடங்களில் கொடியேற்று விழா மிகச் சிறப்புடன் நடைபெற திட்டம் வகுக்கப்பட்டு கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைக்கிறார். கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம் வெற்றி பெற பங்கெடுத்து அனைவரும்...

தமிழ்க் குரிசில் படத்திறப்பு

தமிழ்க் குரிசில் படத்திறப்பு

09.09.2018 அன்று மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடந்த தோழர் தமிழ்க்குரிசில்  படத்திறப்பு நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் தொடங்கி யது. தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்க மணி  வரவேற்புரையாற்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் நிர்வாகியாக இருந்து செயல்பட்ட வரும் தமிழ்நாடு தாய்த் தமிழ் கல்வி யின் செயலாளராக இருந்தவரும், பெரியாரிய சிந்தனையாளரும், குடிஅரசு வெளியீட்டில் தொகுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தலைமை யேற்று நடத்தியவருமாகிய தமிழ்க்குரிசில்  படத்தை பேராசிரியர் கல்விமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் ஏற்பாடுகளையும், உணவு ஏற்பாடுகளையும் மேட்டூர் நகர கழகத் தோழர்கள் செய்தார்கள். நிகழ்ச்சியில் நினைவேந்தல் உரையாக கோபி தாய்த் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் குமணன், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் மூர்த்தி, தமிழ்வழி கல்விக் கழகத்தின் சார்பாக வெற்றிசெழியன், பல்லடம் தாய்த் தமிழ்...

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

ஈரோடு வடக்கு – ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 02.09.2018 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக பேச்சாளர் வேலுச்சாமி  தலைமையில் மாவட்ட செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.  கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் விழாவை கோபியில் அனைத்து இயக்கங்களும் இணைந்து ஊர்வலம் நடத்துவது எனவும், மாவட்ட முழுவதும் அய்யா பிறந்த நாள் விழாவினை தமிழர் கல்வி மீட்பு பரப்புரை பயணமாக வாரந்தோறும் ஞாயிறன்று ஒவ்வொரு ஒன்றியங்களாக நடத்துவது எனவும், பரப்புரை பயணத் தொடக்க நிகழ்வாக செப்டம்பர் 23 அன்று குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட கலந்துரையாடல் 02.09.2018 அன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி மாவட்ட...

மேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார்

மேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார்

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி நிர்வாகியும், மேட்டூர் அனல் மின் நிலைய ஓய்வு பெற்ற முதுநிலை வேதியரும் பெரியாரியலாளருமான ப. தமிழ்க்குரிசில் (62) 3.9.2018 அன்று மேட்டூரில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பெரும் கவலை கொண்டு பணி ஓய்வுக்குப் பிறகு முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோது வெளியிட்ட போது தொகுப்புப் பணியில் பெரும் பங்காற்றிய பெருமைக்குரியவர் தமிழ்க்குரிசில். மேட்டூர் அருகே கொளத்தூரில் இரவு பகலாக பல வாரங்கள் தொகுப்புப் பணி நடந்த போது பணிகளை ஒருங்கிணைத்து ‘குடிஅரசு’ இதழ்களில் உள்ளது உள்ளவாறே அப்படியே வெளி வர வேண்டும். அப்போது தான் இது வரலாற்று ஆவணமாக எதிர்காலத்தில் நிற்கும் என்பதில் கவனம் செலுத்தி கவலையோடு பணியாற்றியவர் தமிழ்க் குரிசில். இறுதி வணக்கம் செலுத்திட கழகத்  தோழர்களும் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆதரவாளர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். கழகக்...

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மேற்கொண்ட சென்னைக் குழுவினருக்கு மக்கள் பேராதரவை வெளிப்படுத்தினர். தோழர்கள் இராவணன், முரளி, அருண், இரண்யா, தேன்ராஜ், செந்தில், பிரியா, ஓவியா – வெயில், மழை என்று பாராமல் கழக துண்டறிக்கையைக் கொடுதது கடைகளில் நிதி வசூல் செய்தனர். ஏழு நாளில் 16,000 துண்டறிக்கையை மக்களிடையே கொடுத்தனர். மக்களும் தாமாக முன் வந்து துண்டறிக்கை வாங்கி படித்தது மிகச் சிறப்பு. பயணத்தில் கடை வசூல் மட்டும் ரூ.60,000/- கிடைத்தது. இதில் சிறு வியாபாரிகளே அதிக ஆதரவு தந்தனர். கூடுவாஞ்சேரியைச் சார்ந்த நாடி ஜோதிடர் பழனிச்சாமி என்பவர், பயணச் செலவுக்கு ரூ.2000 நிதியளித்தார். கண்டிகையில் பிரச்சாரத்தைக் கேட்ட பக்தர் ஒருவர் ரூ.500 நன்கொடை வழங்கினார். இப்படி பயணத்தில் ஏராளமான பக்தர்கள் நிதி உதவி தந்தும், பழம், குளிர் பானம், தேநீர் என்று அவர்களால் இயன்ற அளவில் வழங்கி ஆதரவு தந்தனர். பெரியார் இயக்கத்தைச் சார்ந்த வர்கள் நம்...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

‘விநாயகன்’ ஊர்வலம் :  சென்னை மாவட்டக் கழகம் காவல் துறையிடம் மனு

‘விநாயகன்’ ஊர்வலம் : சென்னை மாவட்டக் கழகம் காவல் துறையிடம் மனு

விநாயகன் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் விநாயகர் சிலைகளை இரசாயன பொருட்களைக் கொண்டு தயார் செய்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரியும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 03.09.2018 காலை 11 மணிக்கு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கழகத் தோழர்கள் மனுவை அளித்தனர். பெரியார் முழக்கம் 06092018 இதழ்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள் சென்னை அணி புகைப்படங்கள் திருப்பூர் அணி புகைப்படங்கள் குடியாத்தம் அணி புகைப்படங்கள் மயிலாடுதுறை அணி புகைப்படங்கள்  

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு ! தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான 28.08.2018 அன்று கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு ! கேரளாவின் மழை வெள்ளத்திற்காக நிவாரண நன்கொடைகளை மக்களிடம் பெறும்போது இரயில் நிலையத்தில் காவல்துறை அநாகரீகமான செயலை கண்டித்தற்காக தோழர்.வளர்மதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தோழர்.வளர்மதி 01.09.2018 காலை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்பை சார்ந்த தோழர்கள் அவரை வரவேற்றனர். தோழர்.வளர்மதி புழல் சிறை அருகே உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கும், இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாமற் ஆக்கப்பட்டோர் நிலை குறித்து ஐ.நா விடம் இன்று ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை விடப்பட்டது To: ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில்  காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம்  ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்குசெய்யப்பட்டிந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன்,...

ஐநா பொதுச் செயலருக்கும்,  ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

தோழர் கொளத்தூர் மணி                                31.8.2018 தலைமை ஒருங்கிணைப்பாளர்   ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும்.  ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாமலடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில்(ICPPED) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம். இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்குப் முன்பும் பின்பும் வலுகட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப்போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப்பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த...