சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு
சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.02.2024 அன்று சேலம் கருப்பூர் சக்தி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா தொகை ஒப்படைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ;சமூக ஒற்றுமையைக் காப்போம்” என்ற தலைப்பில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 11.02.2024 ஞாயிறு அன்று நங்கவள்ளியில் பொதுக் கூட்டத்துடன் பரப்புரையை தொடங்கி, சேலம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா முதல் தவணையாக சேலம் மாவட்டத்தின் சார்பாக (கிழக்கு – மேற்கு) 525 சந்தாவிற்கு தொகையினை கழகத் தலைவரின் முன்னிலையில் தோழர்கள் ஒப்படைத்தனர். வருகின்ற 18.2. 2024 ஞாயிற்றுகிழமை எஞ்சிய பெரியார் முழக்க சந்தாக்களையும் மாவட்ட தலைமையிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கான...
