தீண்டாமை கிராமங்கள் : பட்டியல் தயாரிப்பு – கழகத் தோழர்கள் களமிறங்கினர்
17.06.2023 சனி மாலை 5.00 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1) 17.05.2023-ல் இயற்கை எய்திய குமரன் நகர் கிளைக் கழக செயலாளர் பொன்.செல்வம் அவர்களுக்கு சேலம் மாவட்ட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும்,புகழ் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
2) தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளில் இரட்டை சுடுகாடு, தேனீர் கடைகளில் இரட்டைக் குவளை, பொது கோயில்களில் பட்டியலின மக்கள் வழிபடுவதை தடுக்கும் இடங்களை கணக்கிட்டு வருகின்ற 25.06.2023ம் தேதிக்குள் மாவட்ட கழகத்திற்கு பட்டியலை ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3) எது திராவிடம்! எது சனாதனம்! எனும் தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை அனைத்து கிராம பகுதிகளிலும் நடத்துவதெனவும், தெரு முனைக் கூட்டங்கள் நடத்தும் பகுதிகளின் பெயர்களை மாவட்ட கழகத்திற்கு 25.06.2023ம் தேதி ஒப்படைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதைப் பற்றி தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். திவாகர் நன்றி கூறினார்.
நங்கவள்ளி, மடத்துக்குளம் செய்திகள் – அடுத்த இதழில்
பெரியார் முழக்கம் 22062023 இதழ்