நன்கொடை
விருதுநகர் கழகச் செயற்பாட் டாளர் கு. கணேசமூர்த்தி-திருச்சி தே. சுதாதேவி ஆகியோரின் ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு நிகழ்வு ஜன. 21, 2018 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் திருச்சியில் நடந்தது. மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.3000/- நன்கொடை வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் வட்டம் தொழுவந்தங்கல் கிராமத் தில் வீ. முருகன்-நா.பஞ்சவர்ணம் ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வை 11.11.2018 ஞாயிறு அன்று மாவட்ட செயலாளர் இராமர் நடத்தி வைத்தார். கழகத் தோழர்கள் மண விழாவில் பங்கேற்றனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.1000/- நன்கொடை வழங்கப்பட்டது. (நன்கொடையினை நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். – ஆர்) பெரியார் முழக்கம் 22112018 இதழ்