மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

தலைமைக் கழக அறிவிப்பு

அன்பு தோழர்களுக்கு வணக்கம்.

14.10.2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற கழகச் செயலவையின் தீர்மானங்களை நினைவூட்டுகிறோம்.

அவற்றின்  நிறைவேற்றம், முன்னேற்றம், கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் குறித்து ஆயவும், கலந்துரையாடவும் முதற்கட்ட பயணம் ஒன்றினை திட்டமிட் டுள்ளோம். இப்பயணத்தில் கழகத்தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

21.11.2018 – புதன் காலை – ஈரோடு வடக்கு – மாலை – ஈரோடு தெற்கு; 22.11.2018 – வியாழன் காலை – நாமக்கல் – மாலை – திருப்பூர்; 23.11.2018 – வெள்ளி காலை – கோவை மாநகர்  – மாலை கோவை புறநகர் (ஆனைமலை); 24.11.2018 – சனி காலை – திண்டுக்கல் (பழனி) -மாலை – திருச்சி, பெரம்பலூர், அரியலூர் (திருச்சி); 30.11.2018 – வெள்ளி காலை – சேலம் கிழக்கு- மாலை – சேலம் மேற்கு; 02.12.2018 – ஞாயிறு காலை – தர்மபுரி – மாலை – கிருட்டிணகிரி; 07.12.2018 – வெள்ளி காலை – கடலூர் –  மாலை – நாகப்பட்டினம்; 08.12.2018 – சனி காலை – திருவாரூர் (மன்னை) – மாலை – தஞ்சாவூர், புதுக்கோட்டை (பேராவூரணி); 09.12.2018 – ஞாயிறு காலை – சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர் (மதுரை); 15.12.2018 – சனி மாலை – குமரி; 16.12.2018 – ஞாயிறு காலை – தூத்துக்குடி – மாலை – நெல்லை.

திட்டமிடப்பட்டுள்ள நாள்களில் அந்தந்த மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, விவரத்தை தலைமைக் கழகத்துக்கு விரைவில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆய்வுப் பொருள்கள்:

  1. பெரியார் முழக்கம், நிமிர்வோம் உறுப்பினர் சேர்க்கை. 2. கழகக் கட்டமைப்பு நிதி. 3. டிசம்பர் 24, பெரியார் நினைவு நாள், திருச்சி-உரிமை மீட்பு கருஞ்சட்டைப் பேரணி, மாநாடு. 4. மாவட்ட கழகம் புதுப்பித்தல்.

இப்பயணத்தின் மாலை கலந்துரையாடல் நடைபெறும் ஊர்களின் பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து பரப்புரைச் செயலாளர், தலைமைக் கழகச் செய லாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விடுதலை இராசேந்திரன்                  கொளத்தூர் மணி

பொதுச் செயலாளர்                – தலைவர்

பெரியார் முழக்கம் 15112018 இதழ்

You may also like...