Category: பெரியார் முழக்கம்

பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி

பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி

‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, பீகார் குறித்து ஒளிபரப்பிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பீகார் மாநிலத்தை பார்ப்பனர்கள் ஆட்டிப் படைத்த கொடூரமான வரலாறுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த நிகழ்வில் பேட்டி அளித்த லல்லு பிரசாத், பார்ப்பனக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் அரசியலுக்கு வந்ததாக கூறினார். அந்த சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தித் தொகுப்பு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை மாட்டுக்குப் பதிலாக கழுத்தில் ஏர் பூட்டிக் கொடுமைப்படுத்திய பார்ப்பன உயர் ஜாதிக் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்கான குரலைக் கொடுக்க ஆரம்பித்த நிலையில், அதற்காக எங்கள் ஆட்சிச் சக்கரம் சுழன்ற நிலையில், எங்கள் ஆட்சியைக் காட்டாட்சி (ஜங்கள்ராஜ்) என்று வருணிக்கிறார் – ஆனால், மோடியோ உயர்ஜாதி யினருக்கான கருவி என்றார் லாலுபிரசாத். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு வடக்கே மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம் தவிர்த்த அனைத்து மாநிலங்களும் பார்ப்பனீய கட்டுக்குள் சென்றுவிட்டன. மகாராஷ்டிரத்தை எடுத்துக் கொண்டால் சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா...

அரசியல் சமூகத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதே மதச் சார்பின்மை சங்பரிவார் புரட்டுகளுக்கு மறுப்பு

இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர் ஜவகர்லால் நேரு பல்கலையின் பேராசிரியர் ரொமிலா தாப்பர். சங்பரிவார் முன் வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு சரியான மறுப்புகளை முன் வைத்து ‘பிரன்ட்லைன்’ (செப்.18) ஆங்கில இதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள்: வரலாற்று விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ‘ஆரியர்கள்’ எனும் தலைப்பு தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆரியக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தையோ, இந்திய மண்ணில்தான் ஆரியர்கள் உதித்தார்களா? போன்ற கேள்விகளையோ யார் எழுப்பினாலும் உடனடியாகச் சமூக வலை தளங்களில் அவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான வரலாற்று விவாதங்களுக்கு இடமில்லாமல் போகிறது. கலாச்சாரத் தேசியம் என்பதற்கு அர்த்தம், தேசிய மயமாக்கப்பட்ட கலாச்சாரம் என்பதுதானே? அதாவது, ஒரே ஒரு கலாச்சாரம் மட்டுமே உள்ளது எனச் சொல்வது தானே? என்று கேட்கிறார்கள். சமகாலப் பாரம்பரியம் எதுவும் அசலானது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றிய பாரம்பரியங்களில்கூட ஏதோ ஒரு கட்டத்தில் இடையூறு நிகழ்ந்துள்ளது. ஆனால் ஆங்கிலேயர்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஆயுத பூஜை பண்டிகையில் 1000 கார்கள் விற்று மாருதி சுசுகி சாதனை. – செய்தி விற்பனை இந்துக்களுக்கு மட்டும் தானே? இல்லேன்னா சிவசேனாக்காரங்க கம்பெனிய நொறுக்கிடுவாங்க… மத ரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம், அணுகுண்டைவிட ஆபத்தானது. – விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவரிடம் மனு சரியான கருத்து; ‘மதவாதப் பரவல் தடை’ ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வருவது குறித்து அவசரமாக ஆலோசிக்க வேண்டும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் அமைக்கப்படும். – தேவஸ்தானம் இதற்கெல்லாம் தனித் தனியா ‘ஸ்தல புராணங்கள்’ எழுதப்படுங்களா…? இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் ‘மதம்’ மாறுவதற்கு மறுத்த ‘பிராமணர்கள்’தான் இன்றைய தீண்டப்படாத மக்கள். – பா.ஜ.க. பேச்சாளர் பச்சோங்கர் சாஸ்திரி அப்படின்னா இன்றைய ‘பிராமணர்கள்’ எல்லாம் இஸ்லாமியர் காலத்துல ‘முல்லாக்களாக’ இருந்தவங்களா, சார்? இந்தியாவில் ‘வாடகைத் தாய்மார்கள்’ இந்தியர்கள் கருக்களையே சுமக்க வேண்டும். வெளிநாட்டினர் கருக்களை சுமக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு...

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார். 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத் தினான். 7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகா சூரனுடன் போர் துவங்கினார். 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான். 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!...

தலையங்கம் மதவெறிக்கு எதிராக  விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்

தலையங்கம் மதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்

மோடியின் பார்ப்பனிய மத ஆட்சி -குறுகிய காலத்திலேயே பின்னடைவுகளை சந்திக்கத் தொடங்கி விட்டது. மக்களாட்சி முறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் – அந்தக் கட்டமைப்புக்குள் மதவெறி ஆட்சியை நிறுவிட முயலும் முயற்சிகளும் அதற்கான வெறுப்புப் பேச்சுகளும் உலகம் முழுதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. சுமார் 40 எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கலை படைப்புகளுக்காக கிடைத்த விருதுகளை திருப்பி அளித்து எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என்று 120 விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர். உயிரியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானியும், ‘தேசிய அறிவு ஆணையம்’ என்ற அமைப்பில் தலைவராக இருந்தவருமான ‘பத்மபூஷன்’ விருது பெற்ற பி.எம். பார்கவா, தனது விருதை திருப்பி அனுப்பிவிட்டார். “இந்த அரசுக்கு சகிப்புத் தன்மை இல்லை; பகுத்தறிவு மீதும் அறிவியல் மீதும் தாக்குதலை நடத்துகிறது” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “மதத்தை அரசியலோடு கலக்கக் கூடாது. நம்பிக்கைகள் வீட்டிற்குள்ளேயே...

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

6.11.2015 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் படுகொலையை கண்டித்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், தொடரும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், 30.10.2015 அன்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கழகத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சேரி காவல்நிலையத்தில் 21.10.2015 அன்று மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த அன்றைய நாளே வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சட்டம் அமுலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால் பதட்டமான சூழல் உருவாகும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 29.10.2015 அன்று விசாரணைக்கு வந்தது. 30.10.2015 அன்று அரசு தரப்பின் விளக்கங்களைக் கேட்ட நீதிமன்றம் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட...

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டவர்கள் என்பதற்கு இராமாயணம், மகாபாரதத்திலேயே ஆதாரங்கள் உண்டு. மௌரியர் காலத்துக்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமா யணம் ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்துக்குத் தெளிவான ஆதாரங்களைத் தந்துள்ளன. (தொடக்கக்கால °மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைதாம்). பொழுதுபோக்குக்கு என்பதை விட உணவுக்காக சத்திரியர்கள் அடிக்கடி வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் – குறிப்பாக அதிலுள்ள வனபர்வம் – ஆதாரமாக இருக்கிறது. உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் இது ஆதாரத்தைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய தர்மர்கூட தன் தம்பிகளுக்கும், திரௌபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவு தர தினந் தோறும் ரூரூ மான்களையும், கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட் டுள்ளது. பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. ஜெயத்ரதனுக்கும்...

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

அரசு ஆணைகளை புறந்தள்ளிவிட்டு, காவல் நிலையங்களை ‘இந்து’ வழிபாட்டு இடமாக்கி, ஆயுத பூஜை போடும் மதவாத நிகழ்வை நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் மாநகர ஆணையரிடம் நேரில் தோழர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணை களையும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  மாநகர காவல் துறை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி கருத்துகளை பொறுமையுடன் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, துணை செயலாளர் சுகுமார், அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் பலரும் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 29102015 இதழ்

அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை

அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை

ஜாதி-மொழி-தேசம் குறித்த அம்பேத்கரின் ஆழமான சிந்தனை களை எடுத்துக்காட்டுகிறது இக் கட்டுரை. அம்பேத்கர் என்றவுடன் அவரை தீண்டப்படாதவர்களின் தலைவர் என்றே சமூகம் பார்க்கிறது. அவரின் ஆழமான சமுதாய சிந்தனையும், அறிவும் புறந்தள்ளப்படுகிறது. ஜாதி யின் பெயரால் நாம் இழந்தது சுய மரியாதை, கல்வி, வேலை, இருப் பிடம், செல்வம் என்ற சமூக உண்மையை புரிய வைத்தவர் அம்பேத்கர். ஒரு பள்ளி சிறுவன், தனக்கு அம்பேத்கரை பிடிக்கும் என்கிறான். மற்றொருவன் தனக்கு அம்பேத்கரைப் பிடிக்காது என்கிறான். இந்த விருப்பு வெறுப்புக்கு காரணம் அவருடைய ஜாதியே. அரசியல்வாதிகள் அம்பேத் கரை ஒரு படமாக்குகிறார்களே தவிர, பாடமாக்கவில்லை. இதைப் பற்றி அம்பேத்கர், “இந்தியாவிலோ புனிதர்களையும், மகாத்மாக்களையும் வழிபடுகிறார்கள். வழிபடுவது மட்டுந்தான், அவர்கள் வழியில் நடப்பதில்லை என்ற போக்கு பொது மக்களிடம் இருப்பதால், அவர்களுடைய திட்டத்தால் பெரிய பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை” (அம்பேத்கர் நூல் தொகுப்பு-1, பக்.131) என்கிறார். தீண்டப்படாதவர்களின் தலைவர் என அக்காலத்தில் தான்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மன்னார்குடியில்: 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உள்பட அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி, புரோகிதர்களை அழைத்துவந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அரசு...

தனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – டி. இராசா

தனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – டி. இராசா

தனியார் துறையில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தியும், இடஒதுக் கீட்டுக்கு எதிராக பார்ப்பனியம் கூக்குர லிடுவதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.இராசா, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ டில்லி பதிப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவம்: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டியல் இனப்பிரி வினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இவர்களில் பலரின் விருப்பம். குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராடுவதையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யதையும் தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக குவிந்து கொண்டிருக் கின்றன. சமூகத்தின் ‘மேல்தட்டு அறிவாளி’ப் பிரிவினருக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு உறுத்திக் கொண்டே இருக்கிறது. சமூகநீதி என்ற கருத்தே அவர்களுக்கு கசப்புதான். இடஒதுக்கீட்டின் பயன்,...

‘அருந்ததினர்’ மீதான  தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

‘அருந்ததினர்’ மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வெட்டல் நாயக்கன்பட்டியைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பாலமுருகன் என்பவருக்கும் ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தைச் சார்ந்த நதியா என்பவருக்கும் காதல் திருமணத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சார்ந்த மாவட்ட செயலாளர் போஸ் (இவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்) நடத்தி வைத்துள்ளார். இதற்காக விடுதலை சிறுத்தைகள், புரட்சிப் பாரதம், பறையர் பேரவை அமைப்பைச் சார்ந்தவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த போஸ் என்ற தோழரை கொடூரமாக கொலை வெறியோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இதேபோன்று விழுப்புரம் கச்சிராப்பாளையம் அருகே உள்ள கரடி சித்தூரில் ஆதிதிராவிடர் பரிமளா என்பவரை (பறையர் சமூகம்) அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரை விட்டே ஓட நேர்ந்தது. தொடர்ந்து அருந்ததியர் சமூகப் பெண்கள் நான்கு பேரை மந்தையில் நிறுத்தி மானபங்கப்படுத்தி, 19 வயது வெள்ளையம்மாள் என்பவரை படுகொலை செய்ததாகவும், 17 வயது நதியாவை மனநோய்க்கு உள்ளாக்கியதாகவும்...

காஞ்சி மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? நமது இளைய தலைமுறையின் கவனத்திற்க்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம்,தாழ்த்தபட்ட ஜாதிகளாக, பிற்படுத்தபட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன்,முப்பாட்டன், காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம். பார்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள்.அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.உழைப்பு ,அடிமை வேலை ,குல தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமூதாயம் விதித்த காறாரான கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படி தகர்த்தோம். ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும்,அம்பேத்கரும் போராடிப் பெற்று தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை பெற்றதால் தகர்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில் காமராசர் ஆட்சியில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்தது. அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘ஜாதி’ யை காட்டி, ‘படிக்ககூடாத ஜாதி’;  ‘உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ஜாதி தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கன்டறிந்து...

பல்லடத்தில் பெரியார் பிறந்தநாள் – ஊர்வலம், கொடியேற்று விழா !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 137 வது பிறந்த நாள் விழா ஊர்வலம் கொடியேற்று விழா ! பல்லடத்தில் கொடியேற்றும் இடங்கள் : 1)தெற்குப்பாளையம் 2)மணி மண்டபம். 3)வடுகபாளையம் 4)அனுப்பட்டி 5)லட்சுமி மில். 6)செட்டிபாளையம் பிரிவு. 7)மாணிக்காபுரம் சாலை. 8)N.G.R..ரோடு. 9)காவல்நிலையம் எதிரில் 10)பேருந்து நிலையம். பல்லடத்தில் 25.10.2015 ஞாயிற்றுகிழமை அன்று காலை முதல் மாலை வரை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்த நாள் விழா வாகன ஊர்வலம், கொடியேற்று விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊர்வலம் காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல்லடம் தெற்குப்பாளையம் பகுதியில் துவங்கியது.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் துவக்கவுரை நிகழ்தினார்.பல்லட நகர தலைவர் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தெற்குப்பாளையம் பகுதியில் கொடியை ஏற்றிவைத்தார். பறை இசை முழக்கத்துடன் எழுச்சியுடன் ஊர்வலம்...

இனி என்ன செய்யப்போகிறோம்? – குறுந்தகடு வழக்கிலிருந்து விடுதலை

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இன அழிப்புப்போர் உச்சத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இங்கு தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஈழத்தின் இன அழிப்பு குறித்து பெதிக வின் சார்பில் ”இனி என்ன செய்யப்போகிறோம்?” எனும் தலைப்பில் காணொலி குறுவட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஈழத்தில் நடைபெறும் போர் குறித்து தமிழக மக்களுக்கு உண்மைகளை விளக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது அக்குறு வட்டுக்களை வைத்திருந்ததாக கூறி தற்போதைய திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி இராம.இளங்கோவன் அவர்கள் காப்புரிமைச்சட்டத்தின் கீழ் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு 2½ மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அந்த வழக்கில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்களும் சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு கோபி குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 20.10.2015 அன்று...

மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்

மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. கருத்து மாறுபாடுகளையும் கடந்த பெருந் தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) சிறை குற்றவாளிகளிடம் கனிவு சிறைச்சாலையில் இருக்கும் பொழுது, அங்கிருந்த ஏழைக் குற்றவாளிகள் இவருடைய மீசை தாடியை பார்த்து இவர் ஒரு துறவியார் (சாமியார்) என்று நினைத்துக் கொள்வார்கள். எனவே அவ்வப்பொழுது அவர்கள் வந்து இவர் கால்களில் விழுந்து கும்பிட்டு, ஐயா! பெரியவரே! சாமி! நாங்கள் ஏதோ பெரிய தீவினை (பாவம்) பண்ணிவிட்டு, சிறையிலே வந்து சேர்ந்திருக்கிறோம்; எங்களுக்கு மன்னிப்பு உண்டா? கடவுள் எங்களது தீவினையை (பாவத்தை) நீக்குவாரா? நீங்கள் எங்களுக்கொரு நல்ல...

ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்

ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு 30 உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை கள் மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனை களுடன் ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். மூளைச் சாவு : தமிழ்நாட்டில், ‘மூளைச் சாவு அடைந்தோர் உடலுறுப்பு கொடைத் திட்டம்’ 2008, அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கிய பின் உடலுறுப்புகள் கொடை பெற்று பிற நோயாளிகளுக்குப் பொருத்தப் படுகின்றன. மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், இருதய வால்வுகள், கண்கள், தோல், இரத்தக் குழாய்கள் ஆகிய 10 உறுப்புகளை கொடையாகப் பெற முடியும். தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 676 பேர் தங்கள் உடலுறுப்புகளை கொடை அளித் துள்ளனர். தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு மூளைச் சாவு அடைந்த 15 முதல் 20 பேரின் உடலுறுப்புகளை அவர்களது உறவினர்கள் கொடையளிக்கின்றனர். ஆனால், மூளைச் சாவு...

செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி

செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி

பண்டைய பீகார், கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியது. அங்கேதான் ‘நாளந்தா’, ‘விக்கிரமசீலா’ போன்ற பௌத்தப் பல்கலைக் கழகங்கள் இருந்தன. ஆனால் இன்று, கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது. வேலை கிடைக்காமல் பிழைப்பு தேடி, மாநிலம் விட்டு மாநிலம் அலையும் பீகாரிகளை எல்லா இரயில் நிலையங்களிலும் காண முடிகிறது. பீகாரிகளின் வாழ்க்கை அவலத்தை, சாதியக் கொடுமைகளைக் காண முடிகிறது. பௌத்த சமயம் வேர் ஊன்றிய பீகாரில் ஏன் இன்னும் சாதிப் பிரச்சினை அப்படியே இருக்கிறது? காரணம், நிலப்பிரபுத்துவம் அப்படியே இருக்கிறது. விவசாயக் கிராமங்களில் இன்றும் உயர்சாதியினரே தலைவர்களாக இருக்கிறார்கள். சாதிய ஒடுக்குமுறை வெளிப்படையாகவே நடைபெறுகிறது. பாட்னாவில் உள்ள விந்து வங்கிகளில் சாதிவாரியாக விந்து சேகரித்து வைக்கப்பட்டள்ளது. ‘செயற்கைக் கருத்தரிப்பில்கூட சாதிக் கலப்பு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்’ என்கிறார் மருத்துவர் சின்ஹா. இதை உறுதிப்படத்துவதுபோல ஒரு சம்பவம் கயா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செயற்கைக் கருத்தரிப்பு செய்து, கர்ப்பம் தரித்த மாலா என்கிற...

தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் 17.9.2015 அன்று தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கழகச் சார்பில் ஒரு நாள் முழுவதும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு என்றும், மாலை குடும்ப விழாவாகவும் கொண்டாடப் பட்டது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆலோசனைப்படி, இவ்விழாவினை கடந்த ஆண்டு 17.9.2014 அன்று தூத்துக்குடி பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று, பாவூர் சத்திரம் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தோழர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பாக நடத்த திட்டமிட்டு, முதல் நிகழ்வாக, கீழப்பாவூர் பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலைக்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா மாலை யணிவித்ததோடு தொடங்கியது. தோழர்கள் இரு சக்கர வண்டியில் கொடிகளை கட்டிக் கொண்டும் கார்களிலும் அணிவகுத்து வந்தது பொது மக்களை பெரிதும் கவர்ந்தது. தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்து கழக...

சுயமரியாதை அகராதி

சுயமரியாதை அகராதி

அடுத்த ஜென்மம் என்பது முடிச்சு மாறிகள் பேச்சு ஆரியர் சூழ்ச்சி அறிவுக்கு வீழ்ச்சி இதிகாசம் என்பது மதிமோச மயக்கம் உண்மையைச் சொல்ல ஒருபோதும் தயங்காதே! ஊழ்வினை என்பது ஊக்கத்தைக் கெடுப்பது கருமாந்திரம் என்பது காசுபறிக்கும் தந்திரம் கல்லைத் தெய்வமென்று கற்பிக்க வேண்டாம் கோத்திரம் என்பது குலத்தைப் பிரிப்பது சனாதன தர்மம் என்பது சரியான அதர்மம் சாமி சாமி என்பது காமிகளின் உளறல் சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி திதியைக் கொடுப்பது நிதியைக் கெடுப்பது தெய்வ வழிபாடு தேச மக்களுக்குக்கேடு பார்ப்பனர்கள் என்போர் பகற்கொள்ளைக்காரர்கள் புராணங்கள் என்பவை பொய்மைக் களஞ்சியங்கள் பேதமென்பது வேதியருக்கணிகலம் மகாபாரதம் என்பது பஞ்சமாபாதகம் மடத் தலைவர்கள் மடமைத் தலைவர்கள் மதக்குறி என்பது மடமைக்கு அறிகுறி முக்தி முக்தி என்று புத்தியைக் கெடுக்காதே விதி விதி என்பது மதியைக் கெடுப்பது வேதம் என்பது சூதாய்ச் சொன்னது ஜாதி வேறுபாடு ஜன சமூகக் கேடு க்ஷேத்திரமென்பது சாத்திரப்புரட்டு! – ‘குடிஅரசு’ 28.2.1930

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ‘நாத்திகம்’ இதழ் நிறுவனர் மறைந்த நாத்திகம் பி. இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், ‘எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; எங்கள் இளைய சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமாக 24.9.2015 அன்று ஆழ்வை சீரணி அரங்கில் ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, செ. செல்லத்துரை, கோ.அ. குமார், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் அருந்ததி அரசு ஆகியோர் உரைக்குப் பின், கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில் நாத்திகம் பி.இராமசாமியின் பணிகளை நினைவு கூர்ந்ததோடு, நாட்டில் நிலவும் கனிமவளக் கொள்ளை, சாதி ஆணவக்...

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதி பூசை என்பது ஓர் அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி – அதற்குச் சரசுவதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி இல்லாமல் சாமியை நம்பிக் கொண்டு இருக்கும்படிச் செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளி யாகிக் கொண்டு நம்மைப் படிப்பு வர முடியா ‘மக்குகள்’ என்று சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். முதலாவது, சரசுவதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரசுவதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி அதற்கு...

மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும் – ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும் – ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

“பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைகளை வலியுறுத்தும் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் வலியுறுத்தினார். திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படங்களை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்,...

மாநில கழகப் பொறுப்பாளர்கள்

மாநில கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு கீழ்க்கண்ட மாநிலப் பொறுப்பாளர்களை தர்மபுரியில் நடந்த செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களின் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். ஈரோடு இரத்தினசாமி – அமைப்புச் செயலாளர் திருப்பூர் துரைசாமி – பொருளாளர் பால். பிரபாகரன் – பரப்புரை செயலாளர் கோபி. இராம. இளங்கோவன் – வெளியீட்டுச் செயலாளர் தபசி. குமரன் – தலைமைக் கழகச் செயலாளர் பெரியார் முழக்கம் 23072015 இதழ்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

1. மனு நீதி : ஒரு குலத்துக்கொரு நீதி- பெரியார், விலை-ரூ.10. 2. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?-விடுதலை இராசேந்திரன் விலை-ரூ.30. 3. இந்து மதப் பண்டிகைகள்-பெரியார். விலை-ரூ.30. 4. கடவுளர் கதைகள்- சாமி’. விலை-ரூ.20. 5. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? விலை-ரூ.20. 6. பக்தர்களுக்கு சில கேள்விகள். விலை-ரூ.5. 7. உயர் எண்ணங்கள்-பெரியார். விலை-ரூ.30. 8. பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி. விலை-ரூ.50. 9. பெரியார்-அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடுகள்-ஆ.ராசா. விலை-ரூ.20 10. இவர்தான் பெரியார்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.20. 11. திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.30 12. ஈழம் முதல் அணுஉலை வரை-கொளத்தூர் மணி. விலை-ரூ.30 13. பண்பாடு-சமூகம்-அரசியலில் ‘மனு’வின் ஆதிக்கம்-விடுதலை இராசேந்திரன்,விலை-ரூ.10 14. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜாதி ஒழிப்பு மலர். விலை-ரூ.100 தொடர்புக்கு: தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம் மயிலாப்பூர், சென்னை-600 004....

பெரியார் ஏன் எதிர்க்கப்படுகிறார்? மயிலாடுதுறையில் கழகம் நடத்திய விளக்கக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் 26.09.2015 சனிக் கிழமை அன்று பெரியார்: யாரால், எதற்க்காக, எதிர்க்கப் படுகிறார்? என்ற தலைப்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அமைப் பாளர் கு.செந்தில்குமார் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மத அடிப்படை வாதிகளும், ஜாதிய ஆதிக்கவாதிகளும்தான் பெரியாரை எதிர்க்கின்றனர் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில் போராடிப் பெற்ற இடஓதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்களில் இன்றும் அவர்கள் முழுமையாக அதில் பலன் பெற முடியாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்ப்படுத்தி இட ஒதுக் கீட்டை ஒழிக்கும் சதி திட்டமிட்டு நடைபெறுவதாக விடுதலை இராசேந்திரன் கூறினார். எழுத்தாளர் மதிமாறன் பேசும்போது திருக்குறளை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்ட மன்னர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் புராணங்களை கதாகாலேட்சபம் செய்து கொண்டிருந்த வேளையில் பெரியார் தான் திருக்குறள் மாநாடு...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்  பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாள் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்று விழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும். 22.9.2015 அன்று முதல் 2.12.2015 அன்று வரை வாரம் ஒரு நாள் பரப்புரை பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 22.09.15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழகக் கொடிகம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே காவை இளவரசன் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என...

பெரியாரின் மனித நேயம்: மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

பெரியாரின் மனித நேயம்: மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. பெரியாரிடம் கருத்து மாறுபாடுகளை யும் கடந்த பெருந்தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. நான் 1939 இல் பெரியார் அவர்களுடன் சென்னை சிறைச்சாலையிலே இருந்தேன். நான் இருந்த அறைக்கு வலப்பக்கத்து அறையிலே அவர்கள் இருந்தார்கள். இடப் பக்கத்து அறையிலே திரு. அண்ணாதுரை இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையிலே அவரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சிறையை விட்டு நாங்கள் வெளிவந்த பிறகு பெரியார் என்னை ஈரோட்டுக்கு அழைத்திருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றிந்தேன். நான்கு திங்கள்அவர் வீட்டிலேயே இருந்தேன். பெரியார் சிறைச்சாலையில் இருந்தபொழுது பல முறை அவர் ஊன் உண்பதை நான்...

பூணூல் அறுப்பு வழக்கு: தோழர்கள் பிணையில் விடுதலை

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்ததாக கூறி, 20.04.2015 அன்று இராவணன், கோபி, திவாகர், நந்தகுமார், பிரதீப், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 8.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து 9.10.2015 காலை தோழர்கள் வேலூர் சிறையிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறைச் சென்ற தோழர்கள் இராயப்பேட்டை பெரியார் சிலைக்கும் மயிலாப்பூர் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். தபசி குமரன், அன்பு தனசேகரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண், மாக்ஸ், நெப்போலியன், விடுதலை சிறுத்தைகள்...

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலுள்ள நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இது ரஷ்யாவிலுள்ள மோசடி நிறுவனமான சியோ பொடால்°க் எனும் கம்பெனியிடமிருந்து வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் செர்கே ஷுட்டோவ் தரமற்ற எஃகினை வாங்கி உதரிப்பாகங்கள் தயாரித்த ஊழல் குற்றச்சாட்டுக்களால் 2012ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்திய மக்களிடம் உண்மையைச் சொல்லி நம்மை பாதுகாப்பதற்கு பதிலாக, வருடாந்திர பராமரிப்பு, எரிகோல்கள் மாற்றம் என்று என்னென்னவோ கதைகளை யார் யாரையெல்லாமோ வைத்து சொல்லிக் கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை. கூடங்குளம் அணுஉலை அக்டோபர் 22, 2013 அன்று மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் டிசம்பர் 31, 2014 அன்று வணிக ரீதியிலான மின்உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 31, 2015 வரையிலான 586 நாட்களில் அணுஉலை 226 நாட்கள் ஓடவில்லை. மொத்தம் 64 நாட்கள் அணுஉலை பராமரிப்புக்காக மூடப்பட்டது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காகவும், டர்பைனை...

‘அவாள்’ ஏடே கூறுகிறது: ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது

‘அவாள்’ ஏடே கூறுகிறது: ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது

பெரியாரியலாளர்கள் ஜோதிடமும் ஆன்மிகமும் பிழைப்புவாதம் என்று சொன்னால், இந்துக்களைப் புண்படுத்துவதாக எதிர்ப்பார்கள். ஆனால், ‘துக்ளக்’ பார்ப்பன ஏடே அப்படிச் சொல்கிறது. அந்த ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை: ஒரு நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இத்தனை பரிகார ஸ்தலங்களைத் தேடி தமிழர்கள் அலைந்ததில்லை. ஏதோ அவரவர் ஊர்களிலுள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதோடு தங்கள் வழிபாட்டையும், பிரார்த்தனை களையும் முடித்துக் கொண்டார்கள். ஆனால், இன்று தமிழர்கள், குரு பரிகார ஸ்தலம், சனிப் ப்ரீதி ஸ்தலம், ராகு ப்ரீதி ஸ்தலம் என்று ஏதேதோ ஊர்களுக்குக் கும்பல் கும்பலாகப் படையெடுக்கிறார்கள். ஏன் இந்த சனி, குரு, ராகு-கேது இத்யாதிகளுக்கான பரிகார பூஜைகளை, வழிபாடுகளை அவரவர் ஊரி லுள்ள சிவன் கோவில் நவகிரகங்களுக்குச் செய்தால் போதாதா என்று இன்று யாரும் யோசிப் பதில்லை. இவர்களை இப்படிப் பரிகாரங்களுக்காக ஊர் ஊராக அலைய விட்டதற்கு, இந்த ஜோதிட சிகாமணிகளும், பத்திரிகைகளும்தான் காரணம். அந்தக் காலத்தில் திருப்பதிக்கேகூட...

சென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை

பூணூலை அறுத்ததாக குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தந்தைபெரியார் படத்தைக் கொளுத்தியும் ஆபாசமாக பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம், வீதி மன்றத்தை நாடும் திராவிடர் கழகம்! சென்னையில் பூணூல் அறுத்ததாகக் கூறி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் மத்திய-மாநில அரசுகளால் கவுரவிக்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை எரித்தும், ஆபாசமாகப் பேசியும் செயல்பட்ட பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் மீதும், அவரைச் சார்ந்தவர் மீதும், புகார் செய்தும், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உடனடியாக எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை யும், வீதி மன்றத்தையும் அணுகி திராவிடர் கழகம் செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, 10.10.2015 அன்று விடுத்துள்ளஅறிக்கை...

மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா மயிலை கழகம் சார்பாக 27.9.2015 அன்று காலை 10 மணியளவில் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் 3ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ஜெ. அன்பழகன் (சட்ட மன்ற உறுப்பினர் தி.மு.க.) துவக்கி வைத்தார். போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து 28.92015 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பார்க் அருகே நடைபெற்றது. ஆ. சிவா தலைமை வகிக்க, ஆ. பார்த்திபன், சி. பிரவீன் முன்னிலையில் இரா. மாரி முத்து வரவேற்புரையாற்ற சம்பூகன் குழு வினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நா. நாத்திகன், ஆனந்தகுமார், கோவை இசைமதி ஆகியோர் ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடினர். கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (2) – வாலாசா வல்லவன்

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (2) – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட் டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. முதல் பாகம் தொடர்ச்சி “மேயர் தமது சொந்தப் பொறுப்பில் 16.3.53 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் நடத்த முயன்றார். பெரியார் ஈ.வெ. ராவையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்குமாறு ராஜாஜி கூறினார். நான் அவர்தான் சென்னை ஆந்திராவுக்குப் போனாலும் தமிழ் நாட்டிலிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று சொல்லிவிட்டாரே! தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவர் வருவாரா?” என்றேன். இந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள் அவர் வருவார் என்று சொன்னார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 623) இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய். திராவிடர் கழக மத்தியச் செயற்குழு 11.1.1953இல் சென்னை தமிழகத்திற்கே சொந்தம்...

நேபாளத்தை இந்து நாடாகவே நீடிக்க சங்பரிவாரங்களின் திரைமறைவு சதிகள்

நேபாளத்தை இந்து நாடாகவே நீடிக்க சங்பரிவாரங்களின் திரைமறைவு சதிகள்

நேபாளம், ‘இந்து’ அடையாளத்தை ஒழிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, மோடி ஆட்சி, ‘இந்து’ நாடாகவே நீடிக்க திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது. இது பற்றி ஏற்கெனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கம் தீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் சில செய்திகள்: நேபாள அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட் டிருப்பதை வரவேற்பதில் இந்தியா முதலாவதாக இருந்திருக்க வேண்டும். மாறாக, மோடி அரசாங்கம் ஓர் எதிர்மறை அணுகுமுறையை பின்பற்றி இருக் கிறது. ஒரு தேவையற்ற தலையீடும் நிலைப்பாட்டை யும் எடுத்திருக்கிறது. அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, இரு நாட்களுக்குப்பின் மோடி அரசாங்கம் தன் அயல்துறை செயலாளர் ஜெய்சங்கரை, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, அரசமைப்புச் சட்டம் முறையாகப் பிரகடனம் செய்ய நிச்சயிக்கப் பட்டிருக்கிற செப்டம்பர் 20 அன்று அவ்வாறு நடைபெறாமல் நிறுத்துவதற்காக காத்மண்டுக்கு அனுப்பியது. நேபாளத்தின் இறையாண்மை விஷயங்களில் மிகவும் கேடுகெட்ட முறையில் தலையிடுவதற்கு...

கழகத் தோழர் எலத்தூர் செல்வக்குமார் மகன் திலீபன்  படத் திறப்பு

கழகத் தோழர் எலத்தூர் செல்வக்குமார் மகன் திலீபன் படத் திறப்பு

கழகத் தோழர் எலத்தூர் செல்வக் குமார் மகன் எஸ். திலீபன் படதிறப்பு (30.08.2015) அன்று நடைபெற்றது. இராம. இளங்கோவன் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். அறிவியல் மன்றத்தின் சார்பில் ஆசை தம்பி மாலை அணிவித்தார். மற்றும் ரமேஷ், அழகிரி, செல்வன், இராஜேந்திரன் மாவட்ட செயலாளர் வேணு கோபால் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 08102015 இதழ்

‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் விடுதலை இராசேந்திரன் உரை அமெரிக்க-இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

ஊடகவியலாளர்கள் அய்யநாதன் எழுதிய ‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கருத்தரங்கமும் அக்.2, 2015 அன்று சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் காலை முதல் இரவு வரை ஒரு நாள் நிகழ்வாக நடந்தது. காலை அமர்வில் அந்நூலை பழ. நெடுமாறன் வெளியிட, வைகோ பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் பானுமதி, டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் இராமு மணிவண்ணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். இரண்டாம் கட்ட அமர்வாக பிற்பகல் 3 மணியளவில் “அய்.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் தலைமை யில் நடந்தது. நிகழ்வில் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரை: எனது நீண்டகால நண்பர் அய்யநாதன் மிகச் சிறந்த பத்திரிகையாளர். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உந்தப்பட்ட அவர், தனது பத்திரிகையாளர் பணியையும் உதறிவிட்டு, செயல்களத்துக்கு வந்தவர். தமிழ் ஈழப்...

இடஒதுக்கீடு கொள்கை : மறு பரிசீலனை தேவையா? சங்பரிவாரங்கள் எழுப்பும் வாதங்களுக்கு மறுப்பு

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் ஒரே குரலில் கூக்குரலிட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பாக இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டுக்கு (செப். 30, 2015) எழுதிய கட்டுரை இது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பே ஒழிக்க வேண்டும் என்று கருத்துகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும், பல ஆண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கைதான் தமிழகத்தை இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர்த்தியிருக்கிறது என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குறி பார்க்கும் முன்பே துப்பாக்கிக் குண்டு முந்திக் கொண்டு பாய்வது போன்றதே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் கருத்து உள்ளது என்பதுபோல்,“anti-quota can jumps the gun” என்று ‘டைம்ஸ்ஆப் இந்தியா நாளேடு இக்கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளது. விடுதலை இராசேந்திரன் கட்டுரையின் தமிழ் வடிவம்: “எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்; இல்லையேல் இடஒதுக்கீடு எவருக்குமே இருக்கக்...

“காட்டாறு” குறித்து ஓர் அறிவிப்பு

“காட்டாறு” குறித்து ஓர் அறிவிப்பு

‘காட்டாறு’ எனும் மாத வெளியீடு குறித்து விளக்கங்கள் கேட்டும், விமர்சனங்கள் கூறியும் சில கடிதங்களும், கைபேசி அழைப்பு களும் கழகத் தலைமை நிலையத்துக்கும், பொறுப்பாளர்களுக்கும் வருகின்றன. ‘காட்டாறு’ இதழ் சில பெரியாரியல் சிந்தனை யாளர்களால் அவர்களது தனிப் பொறுப்பில் நடத்தப்படும் இதழே தவிர, திராவிடர் விடுதலைக் கழகத்தின் இதழ் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்விதழைத் தொடர்பு கொள்ள விரும்பு வோர் அவ்விதழிலேயே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

வெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக! குடியுரிமை அதிகாரியிடம் கழக சார்பில் மனு

வெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக! குடியுரிமை அதிகாரியிடம் கழக சார்பில் மனு

இலங்கை இராணுவத்தின் ஒடுக்கு முறைகளிலிருந்து தப்பித்து, ஈழத் தமிழர்கள், கடல் வழியாக படகுகள் வழியாக தாய்த் தமிழகம் நோக்கி அகதிகளாக வருகிறார்கள். படகுகளில் வர முடியாதவர்கள், சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் ‘விசா’ பெற்று விமானம் மூலம் அகதிகளாக வருகிறார்கள். இவர்களும் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தவர்கள்தான். இவர்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ திரும்பும்போது இந்தியாவில் அனுமதித்த காலத்தைவிட கூடுதலான காலம் தங்கியதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் துயரத்துக்கு உள்ளா வதை சுட்டிக்காட்டி, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை சாஸ்திரி பவனிலுள்ள தலைமை குடியுரிமை அதிகாரியிடம் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் செப். 25 பகல் 11 மணி யளவில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. “கடந்த வருடத்திற்கு முன்பு வரை ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டுமானால் விசாக் காலம் முடிந்து தங்கியிருக்கும்...

கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடுமாவட்டம். கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இவ்வாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் விடுதலைக்கழகம், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. பேரணி ல.கள்ளிப் பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர். சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்தடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும்,...

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (1) – வாலாசா வல்லவன்

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (1) – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. வழக்கறிஞர் பா. குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ. வெ. ரா’ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் பல வரலாற்றுப் பொய்களையும் பல வரலாற்றுத் திரிபுகளையும் செய்துள்ளார். அவர் சமீபகாலமாக ம.பொ.சியின் பக்தராக மாறியுள்ளதால் ம.பொ.சியின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது சீடகோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரியவேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் நாம் மேற்கொண்டிருக்கும் இலட்சியப் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ளமுடியும். பா.குப்பன் தன்னுடைய நூலின் தொடக்கத்திலேயே என்னுரையில் பக் 31இல் (அவர் தமிழ் எண்ணில் பக்க எண் கொடுத்துள்ளார்) “இமய மலைக்கும் விந்திய மலைக்கும், கங்கை ஆற்றுக்கும்...

தலையங்கம் – நேபாளத்தில் ‘இந்து’ மத ஆட்சி ஒழிந்தது!

தலையங்கம் – நேபாளத்தில் ‘இந்து’ மத ஆட்சி ஒழிந்தது!

உலகின் ஒரே ‘இந்து’ நாடு என்று பார்ப்பனியம் பெருமையுடன் பறைசாற்றி வந்த ‘நேபாளம்’ – மதச்சார்பற்ற நாடாகி விட்டது. ‘இந்து மன்னர்’ ஆட்சி நடந்தது. அந்த மன்னர் விஷ்ணுவின் ‘மறு அவதாரம்’ என்று, மக்களை பார்ப்பனியம் நம்ப வைத்தது. மனு சாஸ்திரமே நாட்டின் சட்டமாக இருந்தது. மன்னர் ‘க்ஷத்திரியர்’; அவர் ‘பிராமண புரோகிதர்’ காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். சங்கராச் சாரி பார்ப்பனர்கள், தங்களின் தாய் நாடாக நேபாளத்தைக் கருதி வந்தனர். 1994ஆம் ஆண்டு முதல் ‘மனு தர்ம’ மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கியப் போராட்டத்தைத் தொடங்கினர். 2006இல் ஆயுதப் போராட்டத்தை கை விட்டு, அரசியல் பாதைக்குத் திரும்பினர். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு 239 ஆண்டுகால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி முறையைக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டது. ‘மதச்சார்பற்ற’ கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போடாதே குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

13.9.2015 அன்று நடைபெற்ற கன்னியாகுமரி திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள கற்பனை கடவுளர் படங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அகற்றவும், ஆயுத பூஜைப் போன்ற மதப் பண்டிகைகளை கொண்டாடவும், தடைவிதித்த அரசாணையையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அமுல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 25.9.15 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் தமிழ் மதி, நீதி அரசர், சூசையப்பா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இராம. இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். ‘அரசு அலுவலகங்களை பூஜை மடங்களாக்காதே’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை மாவட்ட கழகம் சார்பாக மதியழகன், சாந்தா கலந்து கொண்டனர். குமரேசன் தலைமையில் ஆதித் தமிழர் பேரவையினரும், ஜான் விக்டர்தா° தலைமையில் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்....

குற்றவாளிகளே நீதிபதிகளாக முடியாது போர்க் குற்றம்: உள்நாட்டு விசாரணை பயன் தராது!

குற்றவாளிகளே நீதிபதிகளாக முடியாது போர்க் குற்றம்: உள்நாட்டு விசாரணை பயன் தராது!

அய்.நா.வின் மனித உரிமைக் குழு அறிக்கை ஈழத்தில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. சிங்கள நீதிபதிகள், சர்வதேச சட்ட நிபுணர்கள் அடங்கியதே கலப்பு நீதிமன்றம். இலங்கை அரசு உள்நாட்டு விசாரணையை மட்டுமே ஏற்க முடியும் என்று பிடிவாதமாக மறுக்கிறது. கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா, இப்போது அய்.நா.வில் முன்மொழிய உள்ள தீர்மானத்தில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் தான் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்று கூறிவிட்டது. உண்மையில் இலங்கை வரலாற்றில் இதுவரை அங்கே நடத்தப்பட்ட எந்த உள்நாட்டு விசாரணையும் முழுமையாக தோல்வியையே சந்தித்து வந்திருக்கின்றன. 1963-லிருந்து 2013 வரை இலங்கையில் ஏறத்தாழ 18 விசாரணை ஆணையங்களை இலங்கை அரசு நியமித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவை. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் பானவை, எந்த ஒரு ஆணையமும் முறையாக செயல்படவில்லை. முதன்முதலாக 1963ஆம் ஆண்டு அன்றைய ‘சிலோன்’ ஆளுநராக இருந்த...

கொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர்மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது. காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார். புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர்...

பெரியார் விழா : காஞ்சி மாநகர் குலுங்கியது

செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.

50 சதவீத சலுகையில் ‘தமிழ்க் குடிஅரசு’ வெளியீடுகள் 0

50 சதவீத சலுகையில் ‘தமிழ்க் குடிஅரசு’ வெளியீடுகள்

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாசகர்களின் நலன் கருதி, தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகத்தின் நூல்கள் அனைத்தும் தந்தை பெரியார் பிறந்த மாதமான 2015 செப்டம்பர் மாதம் முழுவதும் 50ரூ சலுகை விலையில் கொடுக்கப்படும். அஞ்சல் செலவு தனி. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும். – வாலாஜா வல்லவன் தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் எண்.4/11, சி.என் .கே.சந்து, சேப்பாக்கம், சென்னை-5. பேசி : 9444321902, 72992 14554 மின்னஞ்சல் : vallavankuil@gmail.com பெரியார் முழக்கம் 17092015 இதழ்

பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை தேசியம் 0

பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை தேசியம்

தமிழ்த் தேசியம் பேசுவோரிட மிருந்து பெரியார் பேசிய சுயமரியாதைக்கான தேசியம் வேறுபடும் புள்ளிகளை விரிவாக அலசுகிறது இக்கட்டுரை. பெரியார் தோன்றி 137 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க.வின் ஆட்சி நடந்து கொண் டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கடைபிடித்த அதே பொருளியல் கொள்கைகளைத்தான் பா.ச.க முழு வீச்சில் நடைமுறைப் படுத்துகிறது. இன்னொரு புறம் பா.ச.க. வால் முன்னெடுக்கப்படும் பார்ப் பனியப் பண்பாட்டு ஆதிக்கமென்பது அன்றாடச் செய்தியாகிக் கொண் டிருக்கிறது. இத்தகைய சூழலில் சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு பெரியாரின் கருத்துகள் மாபெரும் கருவியாக இருக்கிறதென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. 2009 இல் ஈழப் போரில் ஏற்பட்ட தமிழினப் பேரழிவும் அதை தடுக்க முடியாமல் தமிழ்நாடு கையறு நிலையில் இருந்ததும் அமுங்கிக் கிடந்த தமிழ்த் தேசிய உணர்வை உசுப்பிவிட்டது. புதிய புதிய இயக் கங்கள், பேரியக்கங்கள், கட்சிகள் பிறப்பெடுத்துள்ளன. இளந்தலை முறையொன்றும்...

பெரியாருக்கெல்லாம் பெரியார் சுயமரியாதை சுடரொளி டேப் தங்கராசன் 0

பெரியாருக்கெல்லாம் பெரியார் சுயமரியாதை சுடரொளி டேப் தங்கராசன்

மறைந்த சுயமரியாதை சுடரொளி அணைக்கரை டேப் ஆ. தங்கராசன் அவர்கள் திராவிடர் கழக ஊர்வலங்களில் இராவணன் வேடமணிந்து, பெரியாரை வாழ்த்தி எழுப்பிய முழக்கங்கள் இவை. கழகத் தோழர்கள் ஊர்வலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தோடு இதை வெளியிடுகிறோம். பார்ப்பன இன இறுமாப்பையும் அடக்கியே பார்த்தவ ரெமது பெரியார் – வாழ்க மடமையை நீக்கிநீ மனிதனாய் வாழதன் மானங்கொள் என்ற பெரியார் – வாழ்க மனிதனாய்ப் பிறந்தநீ மனிதர்க்கே உதவிடும் மார்க்கங்கா ணென்ற பெரியார் – வாழ்க அடிமையைப் போக்கிபொது உடமையைக் காணநீ ஆசைப்படு என்ற பெரியார் – வாழ்க நரகமும் மோட்சமும் தரகர்கள் பொய்க்கதை நம்பாதே என்ற பெரியார் – வாழ்க உடமையைப் பாழாக்கிக் கடவுளைக் காணநீ ஓடாதே என்ற பெரியார் – வாழ்க பெண்ணின விடுதலைக் கெண்ணியே உழைத்திட்ட பெரியாருக்கெல்லாம் பெரியார் – வாழ்க பிள்ளைபெறு மெந்திரம் இல்லையடா பெண்ணினம் பெருமையளி என்ற பெரியார் – வாழ்க விதவையெனுங் கொடுமையினால் பதறுதடா பெண்ணினம்...