‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாட மறுத்த அதே எம்.எஸ்…
எம்.எஸ். சுப்புலட்சுமியை ஏதோ சமூகத்தை மாற்ற வந்த போராளிபோல் பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள். அவரது நூற்றாண்டு விழா தொடர்பான செய்திகள் வேறு எந்த நூற்றாண்டு கண்ட தலைவர்களுக்கும் இல்லாத அளவுக்கு விளம்பரப்படுத்தப்படுகின்றன.
கல்கி சதாசிவம் என்ற பார்ப்பனரை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்ட பிறகு, அவர் ‘பார்ப்பனியப் பாரம்பர்யத்தின்’ பெருமைக்குரிய குறியீடாக மாற்றப்பட்டார். அதன் காரணமாகவே தமிழ்மொழி வாழ்த்தான மனோன்மணியம் சுந்தரனாரின் ‘நீராடும் கடலுடுத்த’ பாடலை பாடித்தருமாறு அன்றைய தி.மு.க. அரசு கேட்டுக் கொண்டபோது, அதை பாட மறுத்தார். தமிழ் மொழி வாழ்த்து, ‘பார்ப்பனிய மரபுக்கு’ எதிரானதாகவே அவரும் அவருக்கு நெருக்கமான உறவுகளும் உறுதி காட்டின. பார்ப்பன பாரம்பர்யத்திலும் இந்து பழமையிலும் ஆழமான பிடிப்புள்ளதாகவே காட்டிக் கொண்ட அதே எம்.எஸ். சுப்புலட்சுமியைத் தான் வாயில் சிகரெட்டுடன் மேலே படத்தில் பார்க்கிறீர்கள். நடிகையும் பாடகியுமான டி. பாலசரசுவதியுடன் (இடது) எம்.எஸ். சுப்புலட்சுமி, 1937ஆம் ஆண்டு ஒரு புகைப்பட ஸ்டுடியோவில் எடுத்துக்கொண்ட படம் இது.
நன்றி: சுனில் கிலானி தொகுத்துள்ள ‘lncarnations india in 50 Lives ’ எனும் புகழ் பெற்ற நூலில் வெளியிடப்பட்டுள்ள படம்.
பெரியார் முழக்கம் 20102016 இதழ்