விழுப்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

செப்டம்பர் 17இல் விழுப்புரம் மாவட்டம் கழக சார்பில் காலை 9 மணியளவில் சங்கராபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பெரியார் வெங்கட் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் மரியாதை செலுத்தினர். காலை 11 மணியளவில் செம்பராம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் மாணவ மாணவிகளிடையே தோழர்கள் ராஜேஷ், க.இராமர் ஆகியோர் உரையாற்றினர். செஞ்சி நான்கு முனை சாலையில் பெரியார் படத்திற்கு செஞ்சி கழகப் பொறுப்பாளர் கோ. சாக்ரடீசு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை நகரத்தில் கழகத் தோழர் வழக்கறிஞர் சத்தியராஜ், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் சிந்தனைகள் கொண்ட பெரிய பேனர் வைத்தும் பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னெடுத்தார்.

பெரியார் முழக்கம் 29092016 இதழ்

You may also like...