Category: பெரியார் முழக்கம்

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அமைப்புகள் எங்கள் நாட்டில் இருக்கின்றன. புகார் தெரிவித்தால் அரசு விசாரிக்கும். – ராஜபக்சே பேட்டி அப்படியா? இராணுவத்துக்கே மனித உரிமைப் பிரிவு என்று பெயர் மாற்றம் செய்து விட்டீர்களா? சொல்லவே இல்லை! இலங்கை தமிழர் பகுதியை பார்வயிடச் சென்ற ‘சேனல்-4’ தொலைக்காட்சிக் குழுவினர் ரயிலை சிங்களர்கள் மறித்து குழுவினரை திருப்பி அனுப்பினர்.  – செய்தி ஓகோ! ராஜபக்சே கூறிய மனித உரிமைக் குழு, இது தானா? இப்பத்தான் விளங்குது! கேரள முதல்வர் உம்மன்சாண்டி – மக்கள் சந்திப்பு திட்டத்தின் வழியாக மாவட்டந் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.       -செய்தி முதலமைச்சரை மக்கள் நேரிலேயே பார்க்கலாமா? என்ன சொல்றீங்க? நம்பவே முடியவில்லையே; எங்க தமிழ்நாட்டு மக்களும் கேரளாவுக்கு வந்து முதலமைச்சரை நேரிலேயே பார்க்க அனுமதிப்பீங்களா… ப்ளீ°….. பாட்னாவில் மோடி கூட்டத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக நான்கு இந்து இளைஞர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது...

வாழ்நாள் முழுவதும் நான் தொண்டனே!

வாழ்நாள் முழுவதும் நான் தொண்டனே!

நான் மறைந்து நின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒரு சமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்த சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீரவேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.                                               (பெரியார், ‘குடிஅரசு’ – 24.11.1940 பெரியார் முழக்கம் இதழ் 26122013

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 அன்று பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் அருகில் தலைவர் கொளத்தூர் மணியையும், தோழர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர் கி. திருவேங்கடம், ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பாளர் க.சொ. சிவசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட கழக அமைப்பாளர்இரா. காளிதாசு, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் கு.பாரி, நல்லக்கோட்டை ஒன்றிய செயலாளர் பெ. முருகன், வடசேரி கழகத் தோழர் அ.மா. பிரபாகரன், மன்னார்குடி கழகத் தோழர் செந்தமிழன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெரியார் முழக்கம் இதழ் 26122013

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் டிசம்பர் 4 அன்று திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாநில பொருளாளர் ஈரோடு ரெத்தினசாமி, செயலவை தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர்கள் 7 பேரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததையும், இச் சம்பவங்களில் தொடர்பில்லாத கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், பாய்ச்சப்பட்டதற்கும் திருவாரூர் மாவட்ட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கழக ஒன்றிய செயலாளர்கள் மன்னை சேரன், ரமேஷ், நீடா நல்லிக் கோட்டை முருகன், வலங்கைமான் செந்தமிழன், கோட்டூர் அனுராசு, திருவாரூர் கலைவேந்தன், நகர செயலாளர்கள் கரிகாலன், பிரபாகரன், கலைவாணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்....

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம், திருப்பூரில் அக்.20 ஆம் தேதி நிகழ்ந்த திராவிடர் வாழ்வியல் விழா, உணவு விழாவையொட்டி ‘திராவிடர் பண்பாட்டு மலர்’ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாழ்வியலின் மூலக் கூறுகளான திருமணம், மறுமணம், கல்யாண விடுதலை, குழந்தைப் பேறு, கர்ப்பத் தடை, சோதிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரியாரின் ஆழமான கட்டுரைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பது மலரின் தனிச் சிறப்பாகும். ‘வா°து’ மூடநம்பிக்கை, பெயர் சூட்டல் குறித்து – கொளத்தூர் மணி கட்டுரைகளும், சங்க இலக்கியங்களிலேயே பார்ப்பனியம் ஊடுருவியதை விளக்கும் – விடுதலை இராஜேந்திரன் கட்டுரையும் நல்ல கருத்து விளக்கங்களை முன் வைக்கின்றன. ‘திராவிடர் உடை’ என்ற கட்டுரை, வேட்டி சேலை அணிவதும், இந்து மதப் பண்பாடு என்று சங்கராச்சாரி கூறுவதை எடுத்துக்காட்டி, அதையே தமிழர்களின் அடையாளமாக தமிழ்ப் பண்பாடு பேசுவோரையும் சுட்டிக்காட்டி, தமிழர் அடையாளம் இந்துப் பண்பாடா என்ற கேள்வியை எழுப்புகிறது. உணவு மற்றும் உடையைப் பொறுத்தவரை மதம், கலாச்சாரப் பார்வையைத்...

மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு

மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு

வசதி வாய்ப்புப் படைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர். அப்பாவி மக்களை மட்டும் பாதிக்கும் மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென மன்னார்குடியில் நடைபெற்ற ‘உயிர்வலி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேசினார். மரண தண்டனைக்கு எதிரான வரலாற்றுப் பதிவு ‘உயிர்வலி’ (சக்கியடிக்கும் சத்தம்) ஆவணப்பட வெளியீட்டு விழா மன்னார்குடி தமிழ் இனஉணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் திருமண அரங்கத்தில் தமிழின உணர்வாளர் பா.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. ‘உயிர்வலி’ ஆவணப்படத்தை திருவாரூர் மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் இரயில் பா°கர் வெளியிட, மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அனையாவிளக்கு அய்யப்பன் பெற்றுக் கொண்டார். இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின்பேரில் 22 ஆண்டுகாலமாக தூக்குதண்டனை கைதியாக சிறையில் வாடும் பேரறிவாளனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘உயிர்வலி’ ஆவணப்படம் குறித்து பொங்கு தமிழ் இயக்க செயலாளர் மருத்துவர் பாரதிச் செல்வன், தமிழக தலித்...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

14.12.2013 அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்திய ‘ஆதார்’ குறித்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம். ‘ஆதார்’ அடையாள அட்டையை கட்டாய மாக்கும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும், சமையல் எரிவாயுவுக்கு மான்யம் பெற ஆதார் எண் அவசியம் என்று சில நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டைகளைப் பெறவில்லை. இதற்கிடையே இதை வழங்கும் பணி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆதார் அட்டை வழியாக ஒருவரின் விரல் ரேகை, விழிப்படலம் என்று பல்வேறு அடையாளங்கள் பதியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் குடி மக்களும் இதன் வழியாக இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படு கிறார்கள் என்பது இதில் அடங்கியுள்ள ஆபத்தான அம்சம். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் நலத் திட்டங்களை...

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு!

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு!

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு! தமிழக அரசு பதிப்பித்த 10 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில், “தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: “தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்தனையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்து கிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்பதனை, அதனை ஆராய்வோரே அறிவர்.” பாடத்தில் தமிழருக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கனிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று கூறப்படுகிறது. இத்தகைய பாடங்கள் மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியவை. அறிவியல் என்பது கோட்பாடு (தியரி), சோதனை (எக்°பெரிமெண்ட்), கண்டறிதல் (ஃபைண்டிங்°) என்ற மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு. இயற்கையில் இருப்பதை, நடப்பதைப் பதிவு செய்வது மட்டும் அறிவியல் ஆகி விடாது. உதாரணமாக, ‘செம்புலப் பெயல் நீர்போல’ என்று செம்மண்ணைப் பற்றிப் புலவர் எழுதிவிட்டதால், அவர் மண்ணியல் அறிஞர்...

தலையங்கம் : குரூப் 1 – தேர்வு வயது வரம்பை உயர்த்துக!

தலையங்கம் : குரூப் 1 – தேர்வு வயது வரம்பை உயர்த்துக!

வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் பின் தங்கியுள்ளது என்று ‘டீம்லீ°’ எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதோடு நாடு முழுதும் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தித் துறை ஏறுமுகமாக இருந்தாலும், தமிழகம் மட்டும் பின்னடைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. தென்னக நகரங்களிலேயே வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருப்பது சென்னைதான் என்றும் ஆய்வு கூறுகிறது. மிகவும் கவலையளிக்கக் கூடிய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய பிரச்சினை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அடுத்து வரவிருக்கும் தேர்தல்கள்தான் அழுத்தமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களை இறக்குமதி செய்தபோது வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று உறுதிமொழியை மத்திய மாநில ஆட்சிகளின் தமிழக அமைச்சர்கள் கூறினார்கள். அப்படி வேலைவாய்ப்பு ஏதும் அதிகரித்து விடவில்லை. தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஊழியர்களை சேர்க்காமல், குறைந்த ஊதியத்தில்...

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்கள் கிருட்டிணன், அருள்குமார், அம்பிகாபதி ஆகியோர், கடந்த 17.12.2013 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் அறிவுரைக் குழுமம் முன் நேர் நிறுத்தப்பட்டனர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலுள்ள அறிவுரைக் குழுமத்துக்கு தோழர்கள் வருவதை அறிந்த கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். தோழர்களை சந்திக்க காவல்துறை செய்த கெடுபிடி காரணமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பதட்டம் நிலவியது. தோழர் கொளத்தூர் மணி சார்பில் விடுதலை இராசேந்திரனும், ஏனைய தோழர்களுக்கு பொருளாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், குழுமத்தின் முன் வாதிட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுமார் 45 நிமிடங்கள் இந்த வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதை காவல் துறை சாட்சி யங்கள், தேசியப் பாதுகாப்புச் சட்...

குரல் உள்ளவரை பேசுவேன்!

குரல் உள்ளவரை பேசுவேன்!

நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன். சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை யில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத்தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக் கொடுத்த வனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவை களில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தை யாவது காட்டியிருப்பேனே யொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசியிருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும் சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக்கட்டையாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

நிர்வாகிகள் ஒருபுறமும், தலைவர்கள் ஒருபுறமும் வேட் பாளர்கள் மறுபுறமும் ஒருங்கிணைப்பின்றிச் செயல்பட்டதால் தான் காங்கிர° தோற்றது.  – சோனியா அப்படி, விளக்கமாக சொல்லுங்க. நாங்ககூட, ஏதோ, வாக் காளர்கள்தான் தோற்கடிச்சுட்டதா தப்பாகவே புரிஞ்சுகிட் டோம்! நாடாளுமன்ற தேர்தல் கூட்டடணி பற்றி முடிவு செய்ய அ.தி.மு.க. பொதுக்குழு ஜெயலலிதாவுக்கு அதிகாரம்.   – செய்தி அதிகாரத்தை அம்மா முறையாகப் பயன்படுத்தி, வெற்றிக் கூட்டணியை அமைக்காவிட்டால், எந்த நேரத்திலும் பொதுக் குழு அதிகாரத்தைப் பறித்துவிடும், எச்சரிக்கை! அமெரிக்காவுக்கான இந்திய பெண் தூதர் கைது பிரச்சினையை – பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்தி போடுகிறதே! – ஒரு வாசகரின் வியப்பு அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்தப் பெண் தூதர் படத்தை வெளியிடத் தடைபோட்டுவிட்டால் செய்தியும் நின்று விடும். தூதர் தேவயானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாடு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் இப்போதைய முக்கிய கோரிக்கை.   – அமைச்சர் கமல்நாத் விடாதீங்க…. வழக்கை திரும்பப் பெறாவிட்டால், அவசரமாக...

பார்ப்பனர் எச்சில் இலையும் ‘புண்ணிய’மானது!

பார்ப்பனர் எச்சில் இலையும் ‘புண்ணிய’மானது!

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலை மீது ‘சூத்திரர்கள்’ உருண்டு வழிபாடு செய்தால், நோய் தீர்ந்து, புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை , இப்போதும் கருநாடகத்தில் தொடருகிறது. மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியசாமி கோயிலில் ஆண்டுதோறும் ‘மடே° நானா’ என்ற பெயரில் நடக்கும் இழிவை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட ‘இந்து’ மடாதிபதிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அவமானத்தை தலைகுனிய வைக்கும் இழிவை நிறுத்தக்கோரி மங்களூர் துணை ஆளுநர் அலுவலகம் எதிரில் கடந்த சனிக்கிழமை டிசம்பர் 7 ஆம் தேதி ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடந்தது. கருநாடகாவைச் சார்ந்த வேதிக் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு, பார்ப்பன இழிவுக்கெதிராக நடத்திய இந்தப் போராட்டத்தில், சித்தே°வர மடாதிபதி பசவராஜா தேவாரூ, மைசூர் பேட்டாட புரா மடாதிபதி சிரச்ரேட்டி சிவாச்சார்ய சுவாமி, கருநாடகா சமூகநலத் துறை அமைச்சர் எச். ஆஞ்சநேயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டித்துப் பேசினர். கடந்த பல ஆண்டுகளாகவே இதை எதிர்த்து இயக்கங்கள்...

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா, மராட்டிய சட்டமன்றத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவேறியது. நரபலி தருவது, பில்லி சூன்யம் மந்திரிப்பது, நோய் தீர்க்க மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மகாராஷ்டிர மேலவையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். பகுத்தறிவாளர் நரேந்திர தபோக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவசர சட்டமாக – இதை மகாராஷ்டிர அரசு பிறப்பித் திருந்தது. இப்போது சட்டசபையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது. மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற இந்து மத அமைப்புகள் இந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதில் பெரும்பாலான திருத்தங்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, சோதிடம், வா°து சா°திரம் போன்ற மூடநம்பிக்கைகள், மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய...

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 15.12.13 அன்று காலை அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் முடித்த தோழர் இராசசேகர குமார், ஆராய்ச்சியாளர் தோழியர் சிறீதேவி ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா சிறப்புடன் நடந்தது. இராசசேகர குமார், திருநெல்வேலியையும், சிறீதேவி கோவையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து பிரான்சிலும், அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவர்கள். தமிழச்சி (பிரான்°) அவர்களின் பெரியாரின் பதிவுகளை இணையத்தில் படித்து பெரியாரை உள்வாங்கிக் கொண்ட இவர்கள், நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இரு குடும்பத்தினரின் சம்மதமும் பெற்று இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது, பெரியாரின் சுயமரியாதை திருமண வழியில் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திருமணத்தை தலைமை அலுவலகத்தில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மணமக்கள் இருவரும் பெரியாரியல் கொள்கைக்கு எப்படி வந்தோம் என்பதை அனுபவங்களின் வழியாக விளக்கி உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரி யார்...

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

28.11.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த சுருக்கமான குறிப்புகள்: சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறை 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோற்ற தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சுப்பிரமணிய சாமி இந்த வழக்கில் இணைத்துள்ளார். கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதற்கு ஆதரவாக ஆறுமுகசாமி (சிவனடியார்), வி.எம். சவுந்தரபாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் வழியாக மனித உரிமை பாதுகாப்பு மையமும் சத்தியவேல் முருகனாரும் இவ்வழக்கில் தலையிட்டுள்ளனர். இவ்வழக்கு சௌகான், பாப்டே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நவம்பர் 28 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களான தீட்சிதர்கள் சார்பில் யாரும் வாதிடவில்லை. மாறாக, சுப்பிரமணிய சாமி வாதத்தை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சாமியுடைய வாதங்களின் சுருக்கம்: “பிராமணர்கள்” எனப்படுவோர் பிறப்பினால் தோன்றுபவர்களல்ல. குணம் தான் ஒருவர் “பிராமணரா” என்பதைத் தீர்மானிக்கிறது என்று கீதை கூறுகிறது. அதனால்தான்...

தலையங்கம்: மீண்டும் ‘377’

தலையங்கம்: மீண்டும் ‘377’

டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன. பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது....

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘இலக்கு நோக்கிய பயணத்தில் இணைய வரும் தோழர்களே, வாருங்கள்!’ என்ற அழைப்பை ஏற்று வந்த தோழர்களுடன் 2012 Aug 12 ஆம் நாள் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோட்டில் உதயமானது. 2001 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத்தில் தலைவராக இருந்த கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்த அழைப்பை ஏற்று, விலகி வந்த பெரும்பாலான பெரியார் திராவிடர் கழக மத்தியக் குழு உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட இந்த அமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தனிப் பெயரை சூட்டிக்கொண்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தது. இயக்கம் தொடங்கியதிலிருந்து – ஜாதி, தீண்டாமைக்கு எதிராக கழகத்தின் பணிகள் பெரியார் காட்டிய வழியில் தீவிரம் பெற்றன. புதிய சவால்களையும் கழகம் எதிர்கொண்டது. சமூக நீதியான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களை மீட்டெடுத்துக்கொண்ட, பிற்படுத்தப் பட்ட ஜாதிகளைச் சார்ந்த சில தலைவர்கள் ஜாதிய அமைப்புகளை ஒன்று சேர்த்துகொண்டு, தலித் மக்களுக்கு...

கரியாம்பட்டி அருந்ததியர் மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்!

கரியாம்பட்டி அருந்ததியர் மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கரியாம்பட்டி – நடுப்பட்டி. இக்கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று மாலை 3.30 மணியளவில் சுமார் 200 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, பெட்ரோல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த தலித் மக்களை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர். தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இக்கொடிய வன்முறையில் 8 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன, 27 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த தொலைக்காட்சி, பீரோ, மிக்சி உள்ளிட்ட பொருட்கள் அடித்து சூறையாடப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் பெருமாள் (36), நாகராஜ் (34), சுப்பிரமணி (28) ஆகிய 3 தலித்துகள் காயமடைந்தனர். மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் 5 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 தலித்துகளும், 51 சாதி இந்துக்களும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறை...

திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 2.12.13 மாலை 7.30 மணிக்கு சகிலா விடுதியில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செயலகத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டக் கழகத்திலிருந்து தோழர்கள் மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார், மாவட்ட அமைப்பாளர் குணராஜ், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்கம் அமைப்பாளர் அசோக், பெரியார் பெருந் தொண்டர் டாக்டர் எ°.எ°.முத்து, பொன்னு சாமி, பழனி, முருகானந்தம், தமிழ் முத்து, ஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ள தமிழக அரசை கண்டிக்கிறோம். ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் இராணி, அருந்ததியினருக்கான 6 சதவீதம் உள்ஒதுக்கீட்டை...

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 சனிக் கிழமை மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், கழகத் தலைவரை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யக் கோரியும் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் ச. பெரியார் வெங்கட் தலைமை தாங்கினார். செ. நாவாப்பிள்ளை, கா. இராமர், ந. அய்யனார் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கண்டித்தும் எந்தவித நிபந்தனையு மின்றி கழகத் தலைவரை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும்,  சங்கராபுரம் நகரத்தில் ஜாதிப் பெயர்களை தூக்கிப் பிடிக்கும் வணிகம் மற்றும் தொழிற் சாலைகள் உடனடியாக தங்கள் கடைகளிலுள்ள ஜாதிப் பெயரை அகற்றி, சமூக மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்றும், ஜாதி...

இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

கறுப்பினப் போராளி, இன விடுதலை இயக்கங்களின் நாயகர், சிறைப் பறவை மண்டேலா, அம்பேத்கர் முடிவெய்திய அதே டிசம்பர் 6 ஆம் நாளில் விடைபெற்றுக் கொண்டுவிட்டார். “வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதியான வழியில்தான் எங்கள் போராட்டங்களை தொடங்கினோம். ஆனால், அரசு வன்முறையை ஏவியது. வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பதால் நாங்களும் எங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொண்டோம். நாங்கள் தேர்ந் தெடுத்தது வன்முறையைத் தானே தவிர, பயங்கரவாதத்தை யல்ல” என்று கூறிய மண்டேலா, பிறகு அந்த வன்முறைப் போராட்டத்தையும் கைவிட் டார். வரலாறாகிப் போன அந்த விடுதலை வீரர் பற்றிய சுருக்கமான வரலாறு இதுதான்: (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்) 18 ஜூலை 1918 அன்று தென்னாப்பிரிக்காவின் வெஸோ என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ரோலிலாலா மண்டேலா. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் காட்லா. பள்ளி ஆசிரியருக்கு ரோலிலாலா வாயில் நுழையவில்லை போல. “இனி உன் பெயர் நெல்சன்” என்று சொல்லி விட்டார். கருப்பின மக்களை...

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் டிசம்பர் 6 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கர் மணி மண்டபத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மாலை அணி வித்தார். இராயப் பேட்டை பத்ரி நாராயணன் படிப் பகத்தில் வைக்கப் பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கும், மயிலை விசாலாட்சி தோட்டத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் புடை சூழ, பொதுச் செயலாளர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தார். பெரியார் முழக்கம் இதழ் 12122013

தமிழர் ‘இனப்படுகொலை’ உறுதியாகிறது

தமிழர் ‘இனப்படுகொலை’ உறுதியாகிறது

முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தொடர்ந்து, முதலில் அயர்லாந்து நாட்டிலுள்ள ‘மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம்’ விசாரணை ஒன்றை நடத்தியது. வியட்நாமில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய பெருமை இந்த ஆணையத்துக்கு உண்டு. நேர்மையும் நம்பகத் தன்மையும் கொண்ட இந்த ஆணையத்தின் முன் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சான்றுகளாக உலகத் தமிழர் அமைப்புகளின் முயற்சியால் சேகரித்து முன்வைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தியது, இந்த விசாரணை ஆணையம். ஆனால், இனப்படுகொலைக்கான அறிகுறிகள் தெரிகிறது என்றும், அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த சான்றுகள் தேவை என்றும் கூறியது. மீண்டும் மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம் இது குறித்து இம்மாதம் ஜெர்மனியில் கூடி விரிவாக ஆராய்ந்து இனபடுகொலை குறித்து விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் சிங்கள இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்த இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரே ‘இனப் படுகொலை’ நடந்தது உண்மையே...

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

‘மக்கள் சந்திப்புத் திட்டம்’ – கழக சார்பில் தோழர்களின் வேலைத் திட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர், தோழர்களை மாவட்டந்தோறும் நேரில் சந்தித்து இதற்கான நன்கொடைப் படிவங்கள், துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளையும் அதன் முன்னுரிமைத் திட்டங்களையும் மக்களிடம் விளக்குவதற்கும் அவர்களின் ஆதரவை நன்கொடை வழியாக உறுதி செய்யவுமே இத்திட்டம். பெரியார் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம், தமிழ்நாட்டை வேறு மாநிலங்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக மாற்றியது. ஒப்பிட்டளவில் சமூக மாற்றத்துக்கு தமிழகத்தை பக்குவப்படுத்திய பெருமையும் சிறப்பும் பெரியாரியலுக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டை இன்று வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய ஆபத்தான முயற்சிகள் முனைப்பாக அரங்கேறி வருகின்றன. திராவிட அரசியல் கட்சிகள், பதவி அரசியல் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கான கொள்கை அடையாளங்களை கைவிட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாமல்...

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், அவர் மீதும் கழகத் தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கக் கோரியும் ம.தி.மு.க. சார்பில் 7.12.2013 மாலை புரசைவாக்கம் ‘தானா’ வீதியில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் ஜீவா தலைமையில் நடந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்தின், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், த.தே.பொ.க. சார்பில் அருண் பாரதி, கரும்பு விவசாயிகள் கழகத்தின் சார்பில் பொன்னையன், நாகை தருமன், ஈட்டிமுனை இளமாறன் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர். மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் நடந்தது. மேடையின் பின்புறத்தில் தோழர் கொளத்தூர் மணி, சிறைக் கம்பிகளுக்குள் அடைபட்டிருப்பதுபோல் வண்ணப் பதாகை நிறுவப்பட்டிருந்தது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேயை ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நேரில் சந்தித்து, கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும்...

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் 2013 டிசம்பர் 9 ஆம் தேதி அறிவுரைக் குழுமத்தின் முன் பிற்பகல் 3 மணி யளவில் நேர்நிறுத்தப்பட்டனர். உமாபதி, இராவணன் ஆகியோருக்காக பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரனும், மாரிமுத்து, மனோகரனுக்காக மருத்துவர் எழிலனும் வாதுரைத்தனர். விடுதலை இராசேந்திரன் நீதிபதிகள் முன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “நாட்டின் பாதுகாப்புக்கு, பொது ஒழுங்குக்கு, சமுதாயத்துக்கு இன்றியமையாத பொருள்களை வழங்குதலுக்கு, அதற்கு சேவை ஆற்றுவதற்கு எதிராக பாதிப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும். அத்தகைய எந்தக் குற்றமும் சாட்டப்படாத நிலையில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இந்த வழக்கில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி யதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குகளில் பிணை வழங்கப்படவில்லை. பிணை வழங்கு வதை நீதிமன்றம் நிலுவையில் வைத்துள்ளது. ஆனால்,...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

கோயில் கருவறைக்குள் உள்ள சிலை மந்திரத்தால் உயிரூட்டப்பட்டது; பாதுகாப்புக்காக கருவறையை அற நிலையத் துறை வீடியோ படம் எடுப்பது, பக்தர்களைப் புண்படுத்துவதாகும்.   – அர்ச்சகர் சங்கம் எதிர்ப்பு ஆகம விதிகளில் திருத்தம் கொண்டு வந்து கருவறைக்குள் ஒரு கண்காணிப்புக் காமராவைப் பொருத்தி விடலாமே! குரங்கு, எலி, பூனைகளுக்கு காபிப் பழத்தை உணவாகக் கொடுத்து, அவை மலம் கழிக்கும் போது வெளியாகும் கொட்டைகள்தான் உயர்ந்த ‘காபி’ ரகமாக தயாரிக்கப்படுகிறது.  – ‘இந்து’ தமிழ் ஏடு செய்தி அக்கிரகாரத்துல ‘பேஷா’ மணக்கும் காபி வாசனை – ரகசியம், இப்பதாண்டா அம்பி புரியறது! ஜப்பான் நாட்டில் திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களாக ரோபோக்களை (எந்திர மனிதர்களை) பயன்படுத்து கிறார்கள்.  – ‘தினமலர்’ செய்தி அந்த ரோபோக்களை எங்க நாட்டுக்கு அனுப்பிடா தீங்க… ஓமகுண்டம் புகை மூட்டத்துல ஓட்டம் புடுச்சிடும். செவ்வாய்க் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்பிய அடுத்த 15 நாளில் அமெரிக்காவும் அனுப்பியுள்ளது.  – செய்தி இரண்டு கலங்களும்...

சிறப்பு வினா… விடைகள்…

சிறப்பு வினா… விடைகள்…

சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரன் விடுதலை.  – செய்தி ‘ஆன்ம விடுதலை’ கிடைக்கிறதோ இல்லையோ; இந்த ‘பூத’ உடலுக்காவது விடுதலை கிடைத்ததே! நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டபோது ஜெயேந்திரர் முகம் இறுக்கத்துடன் காணப் பட்டது. விஜயேந்திரர் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். – செய்தி அப்படி என்ன சிந்தித்துவிடப் போகிறார்கள்? போயும் போயும் ஒரு ‘சூத்திர’ நீதிபதி நம்ம ‘தலைவிதி’யை நிர்ணயிக்கிறானே என்று சிந்தித்திருப்பார்கள்! தீர்ப்பு வெளிவந்தவுடன் செய்தியாளர்கள், ஜெயேந்திரனிடம் பேச முற்பட்டபோது அவர் கையை மட்டும் அசைத்தார். ‘சுவாமிகள் மவுனவிரதம்’ இருப்பதாக சீடர்கள் தெரி வித்தனர்.  – செய்தி மவுன விரதம் இருப்பதாக – சாமிகள் சீடர்களிடம் கூறியிருப்பார் போல! தீர்ப்பு வந்தவுடன் ஜெயேந்திரர் புதுச்சேரி யிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் திருச்செந்தூர் போய் சாமி தரிசனம் செய்தார்.  – செய்தி ஆதி சங்கரர் நடந்தே போனார்; அவரது ‘வாரிசு’ தனி விமானத்தில் பறக்கிறது. பாரத வரலாற்றில் மகான்கள் தங்கள் தவவலிமையில் இன்னல்களைக்...

“என் பிள்ளைகளை கொலை செய்வதாக மிரட்டினார்கள்”: சங்கர்ராமன் மனைவி கண்ணீர் பேட்டி

“என் பிள்ளைகளை கொலை செய்வதாக மிரட்டினார்கள்”: சங்கர்ராமன் மனைவி கண்ணீர் பேட்டி

ஜெயேந்திரனும் அவரது கூட்டாளிகளும் சங்கர்ராமன் கொலை வழக்கில் விடுதலையாகி விட்டார்கள். முதலில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சங்கர்ராமன் மனைவியும், மகளும் இறுதியில் அடையாளம் காட்ட அஞ்சினர். என் பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதே காரணம் என்கிறார், சங்கர்ராமனின் மனைவி, ‘ஜுனியர் விகடன்’ ஏட்டுக்கு (4.12.13) அவர் அளித்த பேட்டி இது. 3369 நாட்கள்… 24 குற்றவாளிகள்… 1873 பக்க குற்றப் பத்திரிகை… 189 அரசு தரப்பு சாட்சிகள்… என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜேயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்துள்ளது புதுவை நீதிமன்றம். தமிழகத்தில் நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்று வேறு மாநிலத்துக் மாற்ற ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்று சங்கர் ராமன் கொலை வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள் நடந்தது வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சி.°.முருகன் கடந்த 27 ஆம்...

கிணத்துக்கடவில் தொடரும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள்

கிணத்துக்கடவில் தொடரும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள்

கோவை மாவட்டம், கிணத்துக் கடவு அருகே பத்தனம் என்கிற கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இதையறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு படிக்கின்ற தலித் மாணவ, மாணவிகளையும் அவர்தம் பெற்றோர்களையும் அவர்களுடைய வீடுகளுக்கேச் சென்று சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். அதன்படி அவர்கள் சொன்னது, – அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஈ°வரி என்பவர், தேநீர் வாங்க, பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய பெருக்க பயன்படுத்து வாராம். ஆனால், பள்ளிக் கழிப்பறையை மட்டும் கழுவி சுத்தம் செய்ய தலித் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்துவாராம். இது பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது தற்போதுதான் வெளி வந்துள்ளது. அதாவது தற்போது அந்தப் பள்ளியில் படிக்கும் சுபாஷினி என்கிற மாணவி கழிப்பறை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வராததால் அவரை ஆசிரியர் ஈ°வரி அடித்து...

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 28.11.2013 அன்று வழங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணையும், அவருக்குப் பிறந்த குழந்தையையும் தனியாகத் தவிக்கவிட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னை தவிக்கவிட்டுச் சென்ற அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எ°.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “திருமண மாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள், அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத்தை இயற்ற வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தர விட்டது. மேலும், “திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவம் அல்ல....

திருமணம் வேண்டாதது! பெரியார்

திருமணம் வேண்டாதது! பெரியார்

உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது. மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. குறிப்பாகப் பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்ச்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப்போலத்தான் மக்களில் சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிபோடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் – நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள். பிராமணன்-சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன்-பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால், ‘கலியாணம்’ என்பதையே சட்ட விரோதமாக ஆக்கவேண்டும். இந்தக் ‘கலியாணம்’ என்ற...

குடும்பம் குடும்பமாய் திரண்டு-வீரவணக்கம்: ‘புலியூரி’ல் மாவீரர் நாள் எழுச்சி

குடும்பம் குடும்பமாய் திரண்டு-வீரவணக்கம்: ‘புலியூரி’ல் மாவீரர் நாள் எழுச்சி

நவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு கொளத்தூர் புலியூர் பிரிவு, தண்டாசாலையில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை வகித்தார். பொது மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் தோழமை அமைப்புகள் உட்பட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாவீரர் களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்க நிகழ்வுக்கு பின் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, காமராசு, கழகப் பொருளாளர் இரத்தினசாமி ஆகியோரது உரைக்குப் பின் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். சரியாக 6.04 மணிக்கு மாவீரர்...

‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்: பால்பிரபாகரன் பேச்சு

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கண்டன பொதுக்கூட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணியளவில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் குரும்பலாபேரி மாசிலாமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. துவக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் சங்கர், லெட்சுமணன், பெரியார் திலீபன், தங்கதுரை, சபாபதி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மோடி அரசை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் பால்வண்ணன், கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், கீழப்பாவூர் திமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், கழகத் தோழர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கல்வி வேலை வாய்ப்புகளில்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (14) ஆதித்தனார் – ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (14) ஆதித்தனார் – ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்! வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல் லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும், ஏ.பி.பாத்ரோவும் நீதிக் கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே, கட்சியில் பார்ப் பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம்; தேர்தல் களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம்; தாங்களாகவே வெற்றி பெரும் பார்ப்பனர் களில் நாம் கொள்கைக்கு ஒத்து வருபவர்களை அமைச்சராக வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நீதிக்கட்சியினரின் தீர்மானத்தை பெரியார் வழி மொழிந்தார். தெலுங்கரான மனத்தட்டை சேது...

சஞ்சய்தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா?

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரு நாள்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்கு திடீர் ‘ஞானோதயம்’ வந்தது. ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. நவம்பர் 2ஆம் தேதி உச்சநீதிமன்றம் இது குறித்து தீர்ப்பளித்தப் பிறகு, 3 மாத காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜுனா, இந்த 7 தமிழர்களை விடுதலை செய்யவே கூடாது; அவர்கள் தேச விரோதிகள்என்று சோனியா சொல்லிக் கொடுத்த மொழி களில் பா.ஜ.க. ஆட்சியை மிரட்டி விட்டார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று கூறி விட்டார். இந்த 7 தமிழர்களும், ராஜீவ் கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் அல்ல; ‘தடா’ சட்டத்தின் கீழ் மிரட்டி, சித்திரவதை செய்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே அவர்களுக்கு...

பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது?

பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது?

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் கதவுகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறந்தே இருக்கும். சமூக மாற்றத்திற் கான புரட்சிக் கர சிந்தனைகள் படிந்து நிற்கும் பல்கலைக் கழகம் இது. பேராசிரி யர்கள் பலரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் தான். இடது சாரி சிந்தனைகளின் தாக்கம் மிகுந்து நிற்கும் இப்பல்கலைக் கழகத்தில் அண்மைக் காலமாக மாணவர்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பெண் ணுரிமை சிந்தனைகள் மேலோங்கி வருகின்றன. காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறை களுக்கு எதிராகவும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு ஆதர வாகவும் குரல் கொடுத்து வரு கிறார்கள். இயற்கை வளங்கள், பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்படுவதற்கு எதிராக வும், மாணவர்கள் அழுத்தமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். இடது சாரி கட்சி களின் எல்லைகளைக் கடந்து சமூக எதார்த்தம் இந்த மாணவர் களை பார்ப்பன எதிர்ப்பு குறித்து வெளிப்படையாக போராட வைத்திருக்கிறது. மறைந்த திராவிடர் இயக்க ஆய்வாளர் எம்.எஸ்.எஸ். பாண் டியன்,...

கன்யாகுமாரின் புரட்சி முழக்கம் பார்ப்பனியத்திலிருந்து விடுதலை கேட்கிறோம்!

“நாங்கள் பார்ப்பனியத் திடமிருந்து ஜாதியிலிருந்து முதலாளித்துவத்திலிருந்து விடுதலை கேட்கிறோம். எங்கள் போராட்ட உணர்வை நசுக்கிட முடியாது” என்று பிரகடனப்படுத்தினார், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார். தேசத் துரோக குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார், இப்போது நாடு முழுதும் கவனிக்கப்படும் போராளி. உச்சநீதிமன்றம், பல நிபந்தனை களோடு அவருக்கு 6 மாதம் பிணை வழங்கியிருக்கிறது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற அவருக்கு, மாணவர்கள் எழுச்சியான வரவேற்பு அளித் தார்கள். சிறை மிரட்டல் அவர் உறுதியை குலைத்துவிடவில்லை. புடம் போட்ட போராளியாக வெளியே வந்திருக்கிறார். சிறை மீண்டு மாணவர்களிடையே அவர் ஆற்றிய உரையை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வலைதளங்களில் பார்த்திருக் கிறார்கள். அதே நாளில் மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. மின்சார அதிர்வுகளை உருவாக்கியது போல் அமைந்திருந்தது. அவரது உரை என்று...

நூல்கள் வெளியீட்டு விழா

நூல்கள் வெளியீட்டு விழா

சென்னையில் 21.02.2016 ஞாயிறு மாலை 5 மணியளவில் தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் தோழர் ரவிபாரதியின் ”முதல்படி”, சரவணகுமாரின் ”கருப்புச்சட்டை” ஆகிய நூல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மதுமிதா வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நாத்திகன் தொகுப்புரை வழங்கினார். கோவை கு. இராமகிருட்டிணன் நூல்களை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார். நூல்கள் குறித்து கோவை கு. இராம கிருட்டிணனும், கழகத் தலைவரும் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் இலங்கை வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசீதரன் பங்கேற்று உரையாற்றினார். வெளியிடப்பட்ட நூல்களுக்கு மதிப்புரை வழங்கி அருள் எழிலன் உரையாற்றினார். நிறைவாக நூலாசிரியர்கள் ரவிபாரதி, சரவணகுமார் ஏற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 03032016 இதழ்

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் குமரேசன்-தரணி, ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு நிகழ்வு காதலர் நாளான பிப்.14 அன்று மாலை 7 மணியளவில் இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகத் தோழர் குமரேசன், கழகத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர். கழக மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்ற, தபசி. குமரன், வழக்கறிஞர்கள் துரை.அருண், திருமூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 03032016 இதழ்

வினா… விடை…!

வினா… விடை…!

‘கிங்’ ஆக இருப்பதையே எனது கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். – விஜயகாந்த் ஜனநாயகம் – தேர்தல் – கூட்டணி எல்லாத்துக்கும் முழுக்குப் போட்டுட்டு மன்னராட்சிக்கு உங்களை போராட அழைக்கிறாங்க… புரியுதா, கேப்டன். 16,000 முன்னாள் இராணுவ வீரர்கள் ரிலையன்ஸ் அம்பானியின் சொத்துக் களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். – செய்தி அன்று ‘தேசத்தை’ காக்கும் பணி; இன்று தேசத்தின் ‘முதுகெலும்பை’க் காக்கும் திருப்பணி! என்னே தேசபக்தி…! முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் நானும் இருக்கிறேன். – சரத்குமார் வாங்க… வாங்க… உட்காருங்க… இதோ, டி. இராஜேந்தர், வந்துகிட்டே இருக்காரு… ஜெயலலிதா முதல்வராக, சபரிமலை அர்ச்சர்கள் தமிழகக் கோயில்களில் பூஜை. – செய்தி அதுதான், அய்யப்பனுக்கு பெண்கள் என்றாலே ஆகாதே; முதலமைச்சராக மட்டும் அனுமதிச்சிடுவானா? ஊழலே செய்யாத கட்சியுடன் கேப்டன் கூட்டணி அமைக்க பிரேமலதா கோயிலில் பிரார்த்தனை. – ‘தினமலர்’ விஜய்காந்துகிட்ட நேராக சொன்னா நிச்சயம் கேட்க மாட்டாருன்னு அவ்வளவு நம்பிக்கை. பாகிஸ்தான் பரோட்டா...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13) ம.பொ.சி. ஆதரித்து விட்டால்-தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13) ம.பொ.சி. ஆதரித்து விட்டால்-தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா? வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி அடுத்தக் குற்றச்சாட்டு “சேதுரத்தினம் அய்யரை அமைச்சராகச் சேர்த்துக் கொண்டது”. 1926இல் சுயேச்சை அமைச்சரவை அமைத்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுயராச்சிய கட்சியை சேர்ந்த அரங்கசாமி முதலியார் ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் கமிஷனை டாக்டர் சுப்பராயன் வரவேற்றதை கண்டித்து பதவி விலகினர். டாக்டர் சுப்பராயன் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியினரை அழைத்து டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண் டார். நீதிக்கட்சியைச் சார்ந்த முத்தையா முதலியாரையும் சுயராச்சிய கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்த சேதுரத்தினம் அய்யரையும் அமைச்சரவையில் சுப்பராயன் சேர்த்துக் கொண்டார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. சுய ராஜ்ஜிய கட்சி தான் வெற்றி பெற்றிருந்தது. நீதிக்கட்சியில் 21 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயராச்சிய கட்சியில் 41 சட்டமன்ற உறுப்பினர்களும்...

“பெரியாரின் பெண் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை!”

“பெரியாரின் பெண் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை!”

கோவை ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள ‘இந்துத்துவத்துக்கு எதிரான 5 நூல்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு க.வி. இலக்கியா எழுதிய நீண்ட முன்னுரையின் – ஒரு பகுதி. “மனிதன் ஏன் பிறந்தானோ, ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். அது புறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும்.” இது பெரியாரின் வார்த்தைகள். ‘கல்யாண விடுதலை’ என்ற கட்டுரையின் இறுதி பத்தி களில் இருந்து எடுத்துள்ளேன். பெரியார் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வரும் வார்த்தையாக இருப்பது ‘வெங்காயம்’ என்பதுதான். ஆனால், எனக்கு நினைவிற்கு வருவது ‘இன்பமும் திருப்தியும்’ என்ற வாக்கியமே. இரண்டு வார்த்தைகளை உடைய இந்த அழகான வாக்கியம், “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தில் மட்டும் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. மக்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று மட்டும் பெரியார் நிற்கவில்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்...

வஞ்சகம் – பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியானவர்! அப்சல்குருவை நினைவு கூர்வது தேசத் துரோகமா?

தொலைக்காட்சி விவாதங்களில் சங்பரிவாரங் களின் பிரச்சார பீரங்கிகள் செவிப் பறைகளைக் கிழிக்கிறார்கள். “அப்சல் குருக்களாக மாறுவோம்; ஓராயிரம் அப்சல்குருக்கள் உருவாகுவார்கள்” என்று முழக்கமிட்டவர்கள் தேச துரோகிகளா? இல்லையா? இதை எப்படி ஒரு தேசம் அனுமதிக்க முடியும்? மீண்டும் மீண்டும் இதே கேள்விதான். அப்சல் குரு உண்மையிலே தேசத் துரோகி தானா? நாடாளுமன்றத் தாக்குதலில் அவர் பங்கு பெற்றவரா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை; கையில் சிக்கிய ஒரு அப்பாவியை வஞ்சகமாக பொய்யாகக் காவு கொடுத்தக் கயவர்கள் இவர்கள் என்பதை இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். இந்த வழக்கில் நடந்த முறைகேடுகளை – மோசடிகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். • 2001, டிசம்பர் 3 ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் முன் தாக்குதல் நடந்தது. இந்த கொடும் குற்றத்தில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 7 பேரும் இதில் கொல்லப்பட்டனர்....

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை 27.2.2016 அன்று ஒபுளா படித் துறையில் சிறப்புடன் நடத்தியது. மாவட்ட செயலாளர் மா.ப. மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்ற, மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பகத்சிங், கழகப் பிரச்சார செயலாளர் பால். பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா. செல்வம், கம்யூனி°ட் மா.லெ. மாவட்டச் செயலாளர் மேரி ஆகியோரைத் தொடர்ந்து எஸ்.டி.பி.அய். மாநில செயலாளர் நெல்லை முபாரக், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். சகாயராஜ் நன்றி கூறினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, விருதுநகர் கணேசமூர்த்தி, விஜயகுமார், சூலூர் பன்னீர்செல்வம், காளையார் கோயில் முத்துகுமார், தனபால், சங்கீதா, வழக்கறிஞர் பொற்கொடி ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர். காவல்துறை விதித்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு...

‘ஜனநாயகம்’ பெரியார்

‘ஜனநாயகம்’ பெரியார்

கேள்வி : உலகத்தில், மகா பித்தலாட்ட மான சொல் எது? பதில் : அதுவா, அதுதான் ஜனநாயகம் என்கின்ற சொல். கேள்வி : அது என்ன, கடவுள் என்பதை விட மகா பித்தலாட்டமான சொல்லா? பதில் : அய்யய்யோ, கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கின்ற பித்த லாட்டச் சொல் அப்படி அல்ல; தந்திரக் காரனுக்கு – அயோக்கியனுக்கு – இவர்களே சேர்ந்த கோஷ்டிக்குத்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி – ஜனநாயகம்தான். கேள்வி: இதுவே இப்படியானால் – ஜன நாயக முன்னணி, ஜனநாயக அய்க்கிய முன்னணி, ஜனநாயக முற்போக்கு முன்னணி, ஜனநாயக தீவிர முன்னணி, ஜன நாயக அதிதீவிர முன்னணி, ஜனநாயக சுயேச்சை முன்னணி, சுயேச்சை ஜனநாயக முன்னணி, ஜனநாயகக் கூட்டணி – என்பது போன்ற சொற்களின் தன்மை என்ன...

மத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு

மத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு

மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையிலான கல்வி ஆலோசனைக் குழு, மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. “ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகள் மாணவர்களுக்கு தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக 3ஆவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசின் கீழ்வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சமஸ்கிருதம் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்படும். இதற்காக விரைவில் சமஸ்கிருத மொழி நூல்கள் அச்சிடப்பட இருக்கின்றன” என்று  ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சமஸ்கிருதத் திணிப்பு என்பது பார்ப்பனியத் திணிப்பேயாகும். இந்தியாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் மொழி சமஸ்கிருதம். அதுகூட பேசும் மொழி அல்ல; கோயில்கள், சடங்குகள், யாகங்களுக்காக பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி. பல்வேறு...

‘ஜாட்’ சமூகத்தினரின் மிரட்டலுக்கு  மண்டியிடும் ஆட்சியாளர்கள்

‘ஜாட்’ சமூகத்தினரின் மிரட்டலுக்கு மண்டியிடும் ஆட்சியாளர்கள்

அரசியலில் பொருளாதாரத்தில் வலிமையாகத் திகழும் ‘ஜாட்’ ஜாதிப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்துக்கு மாநில பா.ஜ.க. ஆட்சி பணிந்து, இடஒதுக்கீடு வழங்க முன் வந்திருக்கிறது. ஏற்கெனவே புபேந்திரசிங் ஹீடா, முதல்வராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ‘ஜாட்’ இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டு, பிறகு உச்சநீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் ஒப்புதல் பெறாமலே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதே காரணம். பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ‘ஜாட்’ பிரிவினரை சேர்க்கவில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு! மண்டல் ஆணையம் ‘பிற்படுத்தப்பட்டோரை’ ஒரு ஜாதியினரின் சமூக நிலை, கல்வி நிலை, பொருளாதார நிலைகளைக் கண்டறிந்து, அதனடிப்படையில் நிர்ணயம் செய்தது. இதற்காக அறிவியல் அடிப்படையிலான காரணிகள் தேர்வு செய்யப்பட்டன. மொத்தம் 22 காரணிகளை வரையறை செய்து, இந்த 22 காரணிகளில் (Factors) 50 சதவீதத்துக்கும் மேலாக பின் தங்கியிருந்த பிரிவினர் பிற்படுத்தப்பட்டோராக பட்டியலிட்டனர். இந்த அடிப்படையில்...

பிப்ரவரி 27, 28இல் மதுரை, கோபியில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்

பிப்ரவரி 27, 28இல் மதுரை, கோபியில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்

மதுரையில் பிப்.27 அன்றும், கோபியில் பிப்.28 அன்றும் திராவிடர் விடுதலைக் கழகம், பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகளை நடத்துகிறது. ஏற்கெனவே ஈரோடு, சென்னை, சேலம், சங்கராபுரத்தில் கழகம் மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. 27ஆம் தேதி மதுரை ஓபுளா படித்துறையில் மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எஸ்.டி.பி.அய். கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித் தமிழர் பேரவை இரா. செல்வம் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் வழியாக மாநாட்டுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. கோபியில் பிப்.28 மாலை 4 மணியளவில் பெரியார் திடலில் மாநாடு, டி.கே.ஆர். குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அப்துல் சமது, செந்தலை ந. கவுதமன் ஆகியோர்...