அய்யா இனியன் பத்மநாபன் 90ஆம் அகவை விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்ட ஆலோசகர், பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன் 90 ஆவது பிறந்தநாள் விழா 15.02.2017 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு ஹோட்டல் ரீஜென்சியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.

தோழர்கள் நாத்திகஜோதி, சண்முகப்பிரியன், செல்லப்பன், வேணுகோபால், கவிஞர் சின்னப்பன், பாரதிதாசன் கல்லூரிப் பேராசிரியர் சதீஸ்குமார், ஆசிரியர் சிவகாமி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக அய்யா இனியன் பத்மநாபன் ஏற்புரையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இவ்விழாவில் அய்யாவின் குடும்பத்தார்களும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிறந்தநாள் விழா மகிழ்வாக அய்யா இனியன் பத்மநாபன், கழக வளர்ச்சிக்கு ரூ. 1000  வழங்கினார்.

பெரியார் முழக்கம் 23022017 இதழ்

You may also like...