மேட்டூர் கோவிந்தராசு-கீதா இல்லத் திறப்பு

12.2.2017 அன்று சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந் திரன் திறந்துவைத்தார்.

நிகழ்வின் தொடக் கத்தில் இல்லத்தின் உரிமையாளர் கோவிந்தராசு, அவரது மகள் அருள்மொழி உள்ளிட்டோரின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது. அடுத்து கொள்கைப் பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரால் பாடப் பட்டன.

இல்ல உரிமையாளர் கீதாவின் அக்கா கணவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கழக வளர்ச்சிக்கு ரூ.2000/- நிதி பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 23022017 இதழ்

You may also like...