நாத்திகர் பேரணி முழக்கங்கள்
செப்.1 அன்று நடந்த சென்னை நாத்திகர் பேரணியில் எழுப்பிய முழக்கங்கள். நம்பாதீங்க! நம்பாதீங்க! சாமியார் கூட்டத்தை நம்பாதீங்க! நாட்டு நடப்ப பாருங்க! ஏமாத்துறான் பாருங்க! நம்பி வந்த பெண்களை கெடுக்கிறானுக பாருங்க! ஏமாத்துறதைப் பாருங்க! ஜெயிலுக்குள்ளே பெயில் கேட்டு கம்பி எண்ணுறான் பாருங்க! நம்பாதீங்க! நம்பாதீங்க! சோதிடத்தை நம்பாதீங்க! நல்ல நேரம் பார்த்து சோதிடத்தை பார்த்து நடத்தி வச்ச கல்லாணம் ரத்து கேட்குது பாருங்க! பொய்யுங்க! பொய்யுங்க! சோதிடம் எல்லாம் பொய்யுங்க! நல்ல நேரம் கெட்ட நேரம் நல்லவனுக்கு வேணாங்க! ராகு காலம், எமகண்டம் எந்த நாட்டில் இருக்குங்க! பொய்யப்பா! பொய்யப்பா! வாஸ்து சாஸ்திரம் பொய்யப்பா! புயலடிச்சி பூகம்பம் வந்தா வாஸ்து வீடு இடியாதா? வங்கிக் கடன் கட்டாட்டி வாஸ்து வீடு ஏலம் போகாதா? தமிழக அரசே! தமிழக அரசே! தடை செய்! தடை செய்! மூடநம்பிக்கைகளை தடை செய்! சட்டமியற்று சட்டமியற்று! மூடதனத்தை ஒழித்திடவே! சட்டம் இயற்று! சட்டம் இயற்று!...
