நெல்லை இந்து கல்லூரியில் விடுதலை இராசேந்திரன் உரை

திருநெல்வேலி இந்து கல்லூரியில் மதுரை பல்கலை ஆசிரியர் சங்கம் நடத்திய சமூகநீதி கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 16.4.2012 பகல் 12 மணியளவில் சிறப்புரையாற்றினார். ‘சமூக நீதியும் கல்வியும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சமூக நீதிப் போராட்ட வரலாறு, சமூக நீதிக் கொள்கைகள் தற்போது உலகமயமாக்கல் சூழலில் சந்திக்கும் நெருக்கடிகளை விளக்கினார். எழுத்தாளரும், மார்க்சிய சிந்தனையாளருமான அருணன், இஸ்லாமியர்கள், பெண்களுக்கு மறுக்கப்படும் சமூக நீதிகளை விளக்கியும், இந்துத்துவ மதவாத சக்திகளின் பிற்போக்கு கருத்தியலால் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகளை யும் விளக்கினார். பேராசிரியர் முனைவர் செல்லப்பா தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் நீலகண்டன் வரவேற்றுப் பேசினார். கருத்தரங்கை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார். கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள் பெருமளவில் பங்கேற்றனர்.

ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று நெல்லையில் மாலை 7 மணி அளவில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மன்றத்தின் சார்பில் அம்சா அரங்கில் நிகழ்ந்த அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் அமலநாதன், பேராசிரியர் முனைவர் செல்லப்பா தலைமைக் கழக பேச்சாளர் பால். பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். பேராசிரியர்களும், மாணவர்களும் திரண்டிருந்தனர். பார்வை யாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பதிலளித் தார். 9 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

பெரியார் முழக்கம் 03052012 இதழ்

You may also like...