கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை வடக்கு தெற்கு மாநகர மாவட்ட கழகங்களின் கலந்துரை யாடல் கூட்டம் 8.4.2012 ஞாயிறு காலை 11 மணிக்கு கோவை அண்ணா மலை அரங்கில் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.

சமீபத்தில் முடிவெய்திய பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சுப்பையா, சிந்தனையாளர் சங்கமித்ரா ஆகியோ ருக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து தோழர்களின் கருத்துரைகளையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை மாநகரில் பார்ப்பன சங்கம் நடத்தும் மின் மயானத்தை அனைத்து சாதியினருக்கான பொது மயானமாக அறிவிக்க வலியுறுத்தி மே மாதம் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது எனவும்,

தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அனுமதி மறுக்கம் அன்னூர் வடவள்ளி கிராம அங்கன்வாடி மையத்திலும் அஞ்சல் நிலையத்திலும் நிலவும் தீண்டாமை யைக் கண்டித்து எதிர்வரும் 16 ஆம் நாள் வடவள்ளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்,

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் திராவிடர் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி சாதனைகளை விளக்கம் பயிலரங்குகள் புகைப்படக் கண் காட்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்துவது எனவும்

கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு மே மாத இறுதிக்குள் 1000 சந்தாக்களை சேர்த்து சூன் முதல் வாரம் 1000 சந்தா வழங்கும் விழாப் பொதுக் கூட்டத்தை தலைவர் பொதுச் செயலாளர்களை அழைத்து நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வே. ஆறுச்சாமி, மாவட்ட தலைவர்கள் து.இராமசாமி, கலங்கல் மு.வேலுசாமி, வே.கோபால், மாவட்ட செயலாளர்கள் காசு. நாக ராசன், இமு. சாஜித், மாவட்ட அமைப்பாளர் சண்முக சுந்தரம், மாவட்ட பொருளாளர் அகில் குமர வேல், மாநகர பொருளாளர் ரஞ்சித் பிரபு, மாநகர துணை செயலாளர்கள் தமிழரசன் இளங்கோ, ஒன்றிய பொறு ப்பாளர்கள், அன்னூர் ஜோதிராம், ஈஸ்வரன் கிணத்துக்கடவு நிர்மல், பொள்ளாச்சி சீனிவாசன், ஆனை மலை ஆனந்த், நகர செயலாளர்கள் பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, ஆனை மலை அரிதாசு, பெ.நா.பாளையம் சீனிவாசன், பகுதிக் கழக பொறுப் பாளர்கள் மணிமாறன், அண்ணா மலை, மனோகரன், சோமு, செல்வம், ராசன், ஈசுவரன், செபஸ்டியன், செந்தில், காளப்பட்டி அம்பேத்கர், ஜெயப் பிரகாஷ் பொறியாளர் பன்னீர் செல்வம், பேராசிரியர், திருநாவுக்கரசு மற்றும் கிளை கழகங்களின் பொறுப் பாளர்கள் தோழர்கள் பங்கேற்றனர்.

 

பெரியார் முழக்கம் 10052012 இதழ்

You may also like...