‘ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு’ப் பயண நிறைவில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல் வாழ்விடங்கள் தீண்டாமைக்கு முடிவு கட்டுக!
தலித் மக்களின் வாழ்விடங்களில் பின்பற்றப் படும் தீண்டாமை வடிவங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்று திருப்பூரில் நிறைவடைந்த ‘ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரை’ப் பயணத்தில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
அரசு கட்டித் தரும் குடியிருப்புகள், வீட்டுமனை விற்பனைகளில் பின்பற்றப்பட்டுவரும் ‘தீண்டாமை களை’ இத் தீர்மானங்கள் சுட்டிக்காட்டி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஏப்.29 அன்று திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற பயண நிறைவு விழா நிகழ்வில் பயணத்தில் பங்கேற்ற தோழர்களால் கழக சார்பில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- தமிழ்ப் பேரரசர்கள் காலத்திலிருந்து இன்றுவரை நிலைத்து இருக்கும் “ஊர் – சேரி” என்ற இரட்டை வாழ்விடங்களை – வாழ்விடத் தீண்டாமையை ஒழிக்கும் வகையிலும், “தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களுக்குத் தனியாக சேரி என்று இருப்பதைத் தடைசெய்யவேண்டும்”, “இனி கட்டப் போகும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கள் ஊருக்கு உள்ளேயே கிடைக்கும் இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகக் கட்டவேண்டும்” என்று 1947 ஆம் ஆண்டிலிருந்தே முழங்கிய பெரியாரின் இலட்சியத்தைச் செயல் வடிவ மாக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு இனி கட்டப்போகும் புதிய தலித் குடியிருப்புக்களை ஊருக்கு உள்ளேயே பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் தெருக்களிலேயே கிடைக்கும் சிறு சிறு இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களாகக் கட்டித் தரவேண்டும்.
- தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில், லே அவுட் அனுமதிக்காக ஊராட்சி அலுவலகங்களை அணுகும்போது அந்த வீட்டுமனைத் தொகுப்புகளில் தலித் மக்களுக்கு வீட்டுமனை விற்பனை செய்யக் கூடாது என்று ஊராட்சித் தலைவர்கள் வாய் மொழியாக உத்தரவிடுகின்றனர். பிற்படுத்தப் பட்ட மக்களும் அப்படிப் புதிதாக உருவாகும் வீட்டுமனைத் தொகுப்புகளில் தலித் மக்களுக்கு இடம் விற்பனை செய்யக் கூடாது என மிரட்டியும் வருகின்றனர். இதனால் தலித் மக்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் சேரித் தீண்டாமையிலிருந்து விடுபட்டு ஊரைத் தாண்டி வீட்டுமனை வாங்கக்கூட இயலாத நிலை உள்ளது. எனவே புதிதாக உருவாக்கப்படும் வீட்டு மனைத்தொகுப்புகளில் தலித்துகளுக்கு கட்டா யம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். அவை மொத்தமாக ஒரே பகுதிக்குள் ஒதுக்குப்புறமாக இல்லாமல், கலந்து இருக்க வேண்டும். தலித் மக்கள் இடம் வாங்கிய பிறகு மறு விற்பனை செய்தாலும் மீண்டும் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குத் தான் அந்த வீட்டுமனையை விற்பனை செய்ய வேண்டும் என்ற வகையில் அரசு சட்டமியற்ற வேண்டும்.
3 . சாதி மறுப்புத் திருமணத் தம்பதியினருக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கல்வி-வேலை வாய்ப்பு களில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் “சாதியற்றோர்” (சூடி ஊயளவந ணுரடிவய )என்ற பெயரில் தனி இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
- அரசுத் துறைகள் வேக வேகமாக தனியார் துறைகளாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பன் னாட்டு நிறுவனங்களில் சாதிவாரிப் பிரதிநிதித்து வத்தை நடை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்.
5 . இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதியை அடையாளப்படுத்தும் ஊர்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்கள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தனியார் பேருந்துகள், கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தின் பெயர்களையும் திருத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றைத் திருத்தாத நிறுவனங்களின் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழி செய்யவேண்டும்.
- தனியார் பெரும் தொழிற்சாலைகளில் – பஞ் சாலைகளில் உரிமையாளர்களின் சொந்த சாதி யினரை அதிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள் வதைத் தடைசெய்ய வேண்டும். ஆலைகளின் நிர்வாகப் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளி லும் கட்டாயம் சாதி அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்.
- சாதி அடிப்படையில் இயங்கும் திருமணத் துணைதேடும் மய்யங்களைத் தடைசெய்ய வேண்டும். திருமணத்திற்குத் துணைதேடும் விளம்பரங்களில் ‘ப்ராமின்ஸ் ஒன்லி’, ‘எஸ்.சி, எஸ்.டி’ தவிர என்று வரும் விளம்பரங்களையும், கவுண்டர், செட்டியார், வன்னியர், தேவர், நாடார் என்று குறிப்பிட்ட ஜாதிகளை அடையாளப் படுத்தி வரும் விளம்பரங்களையும் தடை செய்யவேண்டும்.
- திருமண மண்டபங்களில் மறைமுகமாக பார்ப்பன சைவக் கலாச்சாரத்தைப் பரப்பும் வகையிலும், தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப் பட்டோர் உணவுமுறையைக் கொச்சைப்படுத் தும் வகையிலும், தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கும் நோக்கத்திலும் ‘சைவம் மட்டும்’ என்று சொல்வதைத் தடைசெய்ய வேண்டும். சைவம் மட்டும் புழங்கச்சொல்லும் மண்டப உரிமையாளர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் வழியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரங்களில் வீடு வாடகைக்கு விடுவோர் ‘சைவம் புழங்குவோருக்கு மட்டும்’ என்று கூறுவதும் மறைமுகமாக தீண் டாமையைக் கடைபிடிக்கும் செயல்தான் என்பதால் அப்படிச் சொல்லும் வீட்டு உரிமை யாளர்கள் மீதும் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழிசெய்ய வேண்டும்.
- டாக்டர் அம்பேத்கர் எழுதிய ஜாதியை ஒழிக்க வழி என்ற நூலை பள்ளி – கல்லூரிகளில் துணைப் பாடமாக (சூடிn – னுநவயடைநன ) வைக்கவேண்டும். பெரியாரின் குடி அரசு 1925 முதல் 1949 வரை உள்ள தொகுப்பு நூல்களையும், அம்பேத்கரின் 37 தொகுப்பு நூல்களையும் தமிழ்நாட்டின் அனைத்து அரசு நூலகங்களிலும், பள்ளி – கல்லூரிகளிலும் இடம்பெறச் செய்யவேண்டும்.
- ஜாதி ஒழிப்புக்கு என தனி அமைச்சகம் – தனி துறை உருவாக்கப்பட வேண்டும். தீண்டாமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பில் அக்கறை செலுத்தாத மாவட்ட ஆட்சியர்கள் மீது நட வடிக்கை, சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் பாதுகாப்பு போன்றவற்றை உள்ளடக்கி உச்சநீதி மன்றம் 19. 04. 2011 அன்று லதாசிங் எதிர் உ.பி அரசு, ஆறுமுக சேர்வை எதிர் தமிழ்நாடு அரசு ஆகிய வழக்குகளில் அறிவித்த ஆணைகளின் அடிப்படையிலும், அந்த ஆணைகளின் நோக்கங்களைச் செயல்படுத்தும் வகையிலும், முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டதாக ஜாதி ஒழிப்புத் துறை உருவாக்கப்படவேண்டும். அத்துறைக்குப் போதுமான நிதிஒதுக்கீடு அளித்து, அறிவொளி இயக்கம், தடுப்பு ஊசிகள், பொதுசுகாதாரம் போன்றவற்றிற்கு மேற்கொள்ளப்படும் பரந்து பட்ட பிரச்சாரங்கள் போன்று தெருத்தெருவாக, கிராமம் கிராமமாக சாதிக்கு எதிராகவும், தீண் டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும், பாகு பாடுகளுக்கு எதிராகவும் பரந்துபட்ட தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ட
பெரியார் முழக்கம் 03052012 இதழ்