போராட்டத்தை விளக்கி பரப்புரை
மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கி தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை கழகம் தொடங்கு கிறது. இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருப்பூர் கூட்டத்தில் வெளியிட்ட செயல் திட்டம்:
- இந்து – ஜாதீய வாழ்வியலுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லவும், ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்காக தமிழ்நாடு அரசும் மக்களும் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்த திருப்பூர் தீர்மானங்களை விளக்கும் வண்ணமும், மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டம் ஏன்? எதற்கு? என விளக்கவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக முழுமையான பரப்புரைகளை நடத்த உள்ளோம். இந்தப் பரப்புரைகளில் இன்றும் மனு தர்மம் எந்தெந்த வழிகளில் உயிர்ப்புடன் உள்ளது என்பவைகளை எளிதாக விளக்கும் வகையில் புகைப்படங்கள் நிறைந்த சாதி ஒழிப்புக் கண்காட்சியும் இடம்பெறும்.
- முதற்கட்டமாக சேலம் கிழக்கு, தஞ்சை, திருவாருர், நாகை ஆகிய மாவட்டங்களில் கிராமப் பிரச்சாரப் பயணங்கள் நடக்க உள்ளன.
ஒரு குழு மே மாதம் 14 ஆம் நாள் சேலம் மாநகரத் தில் தொடங்கி, மே 26 அம் நாள் ஓமலூரில் பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளது.
மற்றொரு குழு நாகை மாவட்டம் மணல் மேட்டில் மே மாதம் 21 ஆம் நாள் தொடங்கி, மே மாதம் 30 ஆம் நாள் திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் நிறைவு செய்ய உள்ளது.
அந்த மாவட்டங்களைத் தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கிராமப் பிரச்சாரப் பயணங்கள் நடைபெற உள்ளன.
- மேலும், நவம்பர் 26 ஆம் நாள் வரை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்துப் பொதுக் கூட்டங்களிலும் ஜாதீய வாழ்வியல் எதிர்ப்பும், மனு சாஸ்த்திர எரிப்புப் போராட்ட விளக்கமுமே தலைப்புகளாக இருக்கும்.
உண்டியலில் மக்கள் தந்த நிதி
பயணத்தில் நன்கொடை வழங்கியவர்கள்:
புதுவை பேராசிரியர் இராம கிருஷ்ணன் – ரூ.2500
போடி சரவணன் – 500
ஆத்தூர் பாலகிருஷ்ணன்
(முன்னாள் ராணுவத்தினர்) – 250
ஆத்தூர் பாரூக் – 100
திண்டுக்கல் நகரத் தலைவர் சுப்ரமணி -500
திருச்சி மாவட்ட கழகம் – 1500
அரியலூர் பெருநர்கிள்ளி, தி.மு.க. – 500
நாமக்கல் மாவட்டகழகம் – 1000
கரூர் மாவட்ட கழகம் – 1500
பெருந்துறை ஒன்றிய கழகம் – 1500
கெம்பநாய்க்கம்பாளையம் மூர்த்தி – 500
ஈரோடு மாவட்ட கழகம் – 3500
அன்னூர் ஒன்றிய கழகம் – 1000
பொள்ளாச்சி விடுதலை சிறுத்தைகள் – 200
உடுமலை மலர் இனியன் – 1000
சித்தம்பலம் கருப்புசாமி (பல்லடம்) – 1000
கீற்று இரமேஷ் – 2000
உண்டியல் மூலமாக வசூல் செய்த தொகை – 26,911
இரவு தங்கிய இடங்களும்,
ஏற்பாடு செய்தவர்களும்:
மதுரை சின்ன உடைப்பு – வழக்கறிஞர் பெரியசாமி (கழக மாவட்டத் தலைவர்); திருப்பரங்குன்றம் – செந்தில் (நாம் தமிழர் கட்சி); பெரிய குளம் – தேனி மாவட்டக் கழகம்; திண்டுக்கல் – கருந்திணை இல்லம்; திருச்சி – தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை; அரியலூர் – வழக்கறிஞர் பகுத்தறிவாளன், மாவட்ட தலைவர்; பெரம்பலூர் – துரை.தாமோதரன், மாவட்டத் தலைவர்; சின்ன தாராபுரம் – சண்முகம். கருக்கம்பாளையம் – கைலாசம் (கழக ஆதரவாளர்); பவானி – பவானி ஒன்றிய கழகம்; கோபி – ஜெயராமன்; கருமத்தம்பட்டி – பொன்னுசாமி, ம.தி.மு.க.; சூலூர் – சூலூர் ஒன்றிய கழகம்; பல்லடம் – பல்லடம் ஒன்றிய கழகம்.
உணவு வழங்கிய தோழர்கள்:
தேனி மாவட்ட கழகம் சார்பாக மூன்று வேளை உணவு, பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பாக மூன்று வேளை உணவு; அரசலூர் சிவா மூன்று வேளை உணவு வழங்கினார். மதுரை மாவட்ட கழகம், சின்னதாராபுரம் ஒன்றிய கழகம், பல்லடம் ஒன்றிய கழகம், திருப்பூர் மாவட்ட தலைவர் துரைசாமி ஆகியோர் தலா இரண்டு வேளை உணவு வழங்கினர். திருப்பரங்குன்றம் செந்தில் (நாம் தமிழர்), திண்டுக்கல் ஆத்தூர் வின்சென்ட், திண்டுக்கல் மாவட்ட தலைவர் துரை. சம்பத், மாவட்ட செயலாளர் இரவணா, தஞ்சை மணிவண்ணன், திருச்சி காட்டூர் ஆரோக்கியசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் குமார், இலால்குடி முத்துச்செழியன் மற்றும் பூவாளூர் செகந்நாதன், அரியலூர் பகுத்தறிவாளன், அரியலூர் வழக்கறிஞர் சசிக்குமார், அரியலூர் திருவிழி (விடுதலை சிறுத்தைகள்), கொடுமுடி ஒன்றிய கழகம், ஈரோடு சசி, கழக ஆதரவாளர் கைலாசம், திருச்செங்கோடு ஒன்றிய கழகம், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திக சோதி, குமாரபாளையம் சாக்கிய அருந்ததியர் சங்கம், பெருந்துறை ஒன்றிய கழகம், கோபி ஒன்றிய கழகம், கோபி நாகப்பன், சக்தி ஒன்றிய கழகம், கண்ணம்பாளையம் கழகத் தோழர்கள், தி.மு.க. பேச்சாளர் தமிழ்ப்பித்தன், செந்தில் ம.தி.மு.க. ஆகியோர் ஒவ்வொரு வேளை உணவு வழங்கினர்.
பெரியார் முழக்கம் 03052012 இதழ்