Category: பெரியார் முழக்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

மனு நீதி : ஒரு குலத்துக்கொரு நீதி- பெரியார், விலை-ரூ.10. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?-விடுதலை இராசேந்திரன் விலை-ரூ.30. இந்து மதப் பண்டிகைகள்-பெரியார். விலை-ரூ.30. கடவுளர் கதைகள்- சாமி. விலை-ரூ.20. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? விலை-ரூ.20. உயர் எண்ணங்கள்-பெரியார். விலை-ரூ.30. பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி. விலை-ரூ.50. இவர்தான் பெரியார்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.20. திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.30 ஈழம் முதல் அணுஉலை வரை-கொளத்தூர் மணி. விலை-ரூ.30 பண்பாடு-சமூகம்-அரசியலில் ‘மனு’வின் ஆதிக்கம்- விடுதலை இராசேந்திரன், விலை-ரூ.10 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜாதி ஒழிப்பு மலர். விலை-ரூ.100 பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள். செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்? அப்துல் சமது உரை- விலை-ரூ.10. தொடர்புக்கு: தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்...

‘வரலாற்றில் வரம்பைக் கடந்த தலைவர்’

விஞ்ஞானி – கல்வியாளர் – இலக்கியவாதி என்று பன்முகத் திறமையோடு வாழ்ந்த முனைவர் வி.சி. குழந்தைசாமி, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி 87ஆம் அகவையில் முடிவெய் தினார். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இந்திரா தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக திறம்பட பணியாற்றியவர். சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்ற அவர் கோவை மாவட்ட கிராமம் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு பெரியாரிஸ்ட். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த இன உணர்வாளர். பெரியார் மறைந்த 1973ஆம் ஆண்டில் சிந்தனையாளர் பேரவை, சென்னை மத்திய நூலகக் கட்டிடத்தில் நடத்திய பெரியார் இரங்கல் கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையை இங்கு வெளியிடுகிறோம். இந்த உரை நிகழ்த்தியக் காலத்தில் அவர் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர். “தென்னகத்தின் ஒரு தலைவர்; ஒரு நூற்றாண்டு, திராவிடத்தின் வளர்ச்சிக்கே, தன்னைத் தந்த தன்னிகரில்லாத் தமிழர்;...

‘பசுவதைத் தடை’ச் சட்டத்தின் அரசியல் பின்னணி

பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ட           ஆக. 21, 2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதா அறிமுகம் செய்ய முயன்றார். கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. ட           1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே இந்து ராஜ்யம் குறித்து கனவு காண்பதுகூடத்  தேசத் துரோகம் என்றே நான் கூறுவேன்” என்றார் காந்தி. ட           சங்பரிவாரங்கள், ‘கோமாதா பக்தி’யை முஸ்லிம், கிறிஸ்தவ வெறுப்பு அரசியலுக்கே...

தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

7 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மதச்சார்பின்மை குறித்து அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1990ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அபிராம் சிங், ‘இந்து ராஜ்யம்’ அமைப்பேன் என்று கூறி வாக்கு கேட்டார். மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது தேர்தல் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு (பிரிவு 123(3)) எதிரானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தேர்தல் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியது. 1995இல் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு வந்தபோது வழக்கை விசாரித்த ஜே.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இந்துமதம் அல்லது இந்துத்துவா என்பது இந்திய உபகண்டத்தில் மக்களின் வாழ்க்கை நெறி, அதை மதமாகக் கருத முடியாது” என்று கூறிவிட்டது. சங்பரிவாரங்கள் ஆனந்தக் கூத்தாடின. அன்றிலிருந்து இன்றுவரை “இந்து என்பது வாழ்க்கை நெறி” என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என்று வாதிட்டு வருகிறார்கள். இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் தரவேண்டும் என்று சில...

பகுத்தறிவு ‘அம்மா’க்கள் வேண்டும்!

பகுத்தறிவு ‘அம்மா’க்கள் வேண்டும்!

திரைப்பட இயக்குனர் பா. இரஞ்சித், ஜன.11, ‘ஆனந்த விகடனில்’ பெண் விடுதலை குறித்து எழுதிய கட்டுரை யிலிருந்து சில பகுதிகள். நாம் சாதி சமூகமாக இருப்பதில் ஆண்களைப் போலவே பெண் களுக்கான பங்கும் அதிகம். ஆண்கள் சொல்கிற எதையுமே தட்டிக் கழிக்கிற பெண்கள், சாதி, மதம், அடிப்படை யிலான நம்பிக்கைகளை, உணர்வுகளை, சடங்குகளை மட்டும் இன்னமும் தாங்கிப் பிடிக்கிறவர்களாக ஏற்றுக் கொள்கிறவர்களாக இருக் கிறார்கள். அப்பா கண்டிப்பான முறையில் கற்றுத் தருகிற சாதியைவிட, நிதானமாக சாதிக்குக் கொடி பிடிக்கிற அம்மா ஆபத்தானவராக இருக்கிறார். சாதி என்பது தவறானது என்றே தெரிந்தாலும், அதைத் தவறு என்று தன் பிள்ளைகளுக்கு அம்மா உணர்த் தாமல் இருப்பது ஆபத்தானது தான். பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத, பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க இயலும். * * * பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வரை பெண் குறித்த என்னுடைய நம்பிக்கைகள், பார்வைகள் என அனைத்தும் கல்வியும்...

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...

கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கலைஞர் இல்லம் சென்று நலம் விசாரித்தனர்

தமிழினத்தின் மூத்த தலைவர் கலைஞர் உடல் நலம் விசாரிக்க கழகத் தலைவர் பொதுச் செயலாளர் ஜன. 2ஆம் தேதி, பகல் 11 மணியளவில் கலைஞரின் இல்லமான கோபாலபுரம் சென்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, இராசா, எ.வ. வேலு, மருத்துவர் எழிலன் ஆகியோர் உடனிருந்தனர். கழகத்தின் வெளியீடுகள் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டன. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைவர் வேழவேந்தன், செயலவை உறுப்பினர் அன்பு தனசேகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடன் சென்றிருந்தனர். பெரியார் முழக்கம் 05012017 இதழ்

‘குடி செய்வார்க்கில்லை பருவம்’

‘குடி செய்வார்க்கில்லை பருவம்’

அவசர சூழலில் ‘ஆம்புலன்ஸ்’ வந்து நிற்பதுபோல் கழகத் தோழர்கள் உடனடியாக களமிறங்கிய செயல்பாடுகளும் கடந்த காலத்தில் நிகழ்ந்தன. அவற்றுள் சில: ஈரோடு மாவட்டம் ஆர்.எஸ். புதூர் பகுதியிலுள்ள சி.எம். நகரில் பொது சுடுகாட்டில் ஒரு அருந்ததியப் பெண் சடலத்தை எரியூட்ட ஜாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்தனர். சடலத்தை பாதி வழியில் நிறுத்திய நிலையில் செய்தி அறிந்த ஈரோடு, கோபி கழகத்  தோழர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து போராடிய உள்ளூர் மக்களுடன் இணைந்து அதிகாரிகளிடம் வாதாடி வழக்கறிஞர்களையும் வரச் செய்து  7 மணி நேரம் போராடிய பிறகு ஜாதி வெறியர்கள் பணிந்தனர். தலித் பெண் சடலம் ஜாதி எதிர்ப்பு முழக்கங்களுடன் பொது சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. 2016, ஏப்.27 அன்று இது நடந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை நாளில் பார்ப்பனர்களைக் கொண்டு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. செய்தி அறிந்து நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள்...

தோழர்களின் தொய்வில்லா களப்பணிகளோடு 2016இல் கழகம் பதித்த சுவடுகள்

தோழர்களின் தொய்வில்லா களப்பணிகளோடு 2016இல் கழகம் பதித்த சுவடுகள்

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்; பெரியார் பயிலரங்கங்கள்; மூட நம்பிக்கை களுக்கு எதிரான பரப்புரைப் பயணம்; ஜாதி ஆணவக் கொலை எதிர்ப்பு; கண்டன ஆர்ப் பாட்டங்கள்; கைதுகள் என்று 2016ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் தொய்வின்றி களப்பணியாற்றியது. சுயநலம், சந்தர்ப்பவாத அரசியல் மேலோங்கி நிற்கும் சமூக சூழலில், பெரியார் இலட்சியங்களை ஏற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் – சமுதாயக் கவலையோடு உழைப்பு, நேரம், சொந்தப் பொருளை செலவிட்டு, பெரியார் கொள்கைப் பணிகளுக்காக தங்களை அர்ப் பணித்திருக்கிறார்கள். இத்தகைய தோழர் களின் கொள்கை உணர்வும் களப் பணிகளுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் உண்மை யான வலிமை என்று பெருமையோடு,  கடந்த ஆண்டில் கழகத்தின் களப்பணிகள் குறித்த ஒரு சுருக்கமான தொகுப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. ஜனவரி 24 அன்று திருச்சியில் கழக செயலவை கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு தோழர்கள் திரட்டிய சந்தாக்களை வழங்கினர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் உயர்...

கழக வளர்ச்சி நிதிக்கு நன்கொடை

கழக வளர்ச்சி நிதிக்கு நன்கொடை

செயலவையில் கழகப் பொறுப்பாளர் கொளத்தூர் டைகர் பாலன் கழக வளர்ச்சி நிதிக்கு ரூ.25,000/- வழங்கினார். அமெரிக்க நாட்டில் பணியாற்றும் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த பாலவாடியைச் சேர்ந்த மகேந்திரன், கொளத்தூர் நகர செயலாளர் இராமமூர்த்தி வழியாக கழக வளர்ச்சி நிதியாக ரூ.25,000/- அளித்துள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 30062016 இதழ்

பெண்கள் சடலத்தை சுமந்து சென்றனர் இளந்தாடி துரையரசன் முடிவெய்தினார்

பெண்கள் சடலத்தை சுமந்து சென்றனர் இளந்தாடி துரையரசன் முடிவெய்தினார்

87 வயது பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு மற்றும் இந்தி எதிhப்பு உள்பட பெரியார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்  கொண்டு சிறை சென்றவர். தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் கருப்புச் சட்டையுடன் இறுதி வரை கொள்கை மாறாமல் வாழ்ந்து காட்டிய இளந்தாடி தி.க. துரையரசன், 17.6.2016 அன்று திருச்சியில் முடிவெய்தினார். அன்று மாலை இறுதி நிகழ்வு இரங்கல் கூட்டம் பெரியார் தொண்டர் மருத்துவர் எம்.எஸ்.முத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் த.பெ.தி.க. – சீனி விடுதலை அரசு, தி.மு.க. வெளியீட்டு செயலாளர் திருச்சி செல்வேந்திரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார், மா.பெ.பொ.க. மாவட்ட செயலாளர் கலிய பெருமாள், வனச்சரக (ஓய்வு) அலுவலர் பெரியார் உணர்வாளர் கோவிந்தசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி திருச்சி சரவணன் மற்றும் பலர் இரங்கல் உரை நிகழ்த்தினர். இறுதி ஊர்வலத்தை கழகத் தோழர்கள் முன்னின்று நடத்தினர். சந்தவேல், குமார், திருச்சி புதியவன் ஆகியோர்...

மதவாத ஆட்சிகள் பாடம் பெறுமா? பிரிட்டன் விலகியது; ஸ்காட்லாந்து விலகப் போகிறது

மதவாத ஆட்சிகள் பாடம் பெறுமா? பிரிட்டன் விலகியது; ஸ்காட்லாந்து விலகப் போகிறது

28 நாடுகளைக் கொண்டு 43 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது அய்ரோப்பிய ஒன்றியம். அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து இப்போது பிரிட்டன் விலகிவிட்டது. வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் விலகலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் விலகல் அய்ரோப்பிய நாடுகளிடையே கடுமையான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்தில் பிரிட்டன், ஸ்காட்லேண்ட், வேல்ஸ், வடக்கு அயர்லாந்த மாநிலங்கள் அடங்கியுள்ளன. ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மாநிலங்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கவே கூடுதலாக வாக்களித்துள்ளன. அய்ரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் விலக முடிவு செய்தவுடன், ஸ்காட்லாந்து, பிரிட்டனோடு இணைந்திருக்க விரும்பவில்லை. 2 ஆண்டுகளுக்குள் ஸ்காட்லாந்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரிட்டனோடு இணைந்திருக்கவே கூடுதலான ஆதரவு கிடைத்தது. இப்போது அங்கே கூடுதலானவர்கள் பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் மனநிலையில் உள்ளனர் என்று பிரிட்டிஷ் ஏடுகள் தெரிவிக்கின்றன. சந்தை பொருளாதாரம், அடிப்படை மதவாதம் இரண்டும் இன்று உலகநாடு களில் பிரச்சினைகளாக முன் நிற்கின்றன. இதில் இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் இருக்கிறது. எந்த ஒரு தேசத்துடனும் இணைந்து நிற்க...

செயலவை இரங்கல்

செயலவை இரங்கல்

செயலவை முதல் தீர்மானமாக – குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிறுவனர் அருணாசலம் (ஆனா ரூனா), திருச்சி இளந்தாடி துரையரசன், பெங்களூர் வேமண்ணா (எ) வி.சி. வேலாயுதம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒரு நிமிடம் மவுனம் காத்தது. பெரியார் முழக்கம் 30062016 இதழ்

அணுஉலைகளுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மோடி கைவிட வேண்டும்

அணுஉலைகளுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மோடி கைவிட வேண்டும்

மேட்டூரில் கூடிய  கழகச் செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஆபத்துகளை உருவாக்கிடும் அணுஉலைகளைப் பயன்படுத்து வதை உலகநாடுகள் கைவிட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் மின் உற்பத்திக்கு என்று அணுஉலைகளைப் பயன் படுத்துவதில் நடுவண் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மக்கள் விரோத செயல்பாடா கும்.  அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி “வெஸ்டிங் ஹவுஸ்” என்ற தனியார் நிறுவனத்திடம் 6 அணு உலைகளை இந்தியாவில் நிறுவிடும் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  இந்த நிறு வனம் தரமற்ற ஆபத்தான எந்தி ரங்களை வழங்கிய குற்றச் சாட்டு களுக்குள்ளான நிறுவனம்ஆகும். அறிவியலில் வளர்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவே அணுஉலை ஆபத்துகளை கருத்தில் கொண்டு 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக அணுமின் நிலையங்களைத் தொடங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த கடைசி அணுமின் நிலையமும் மூடப்படவிருக்கிறது. ஆனால் அதே...

ஜூலை 8ஆம் தேதி மாவட்டங்களில் கழகம் ஆர்ப்பாட்டம் ‘சமஸ்கிருதத்தை எட்டாவது பட்டியலிலிருந்து நீக்குக!”

ஜூலை 8ஆம் தேதி மாவட்டங்களில் கழகம் ஆர்ப்பாட்டம் ‘சமஸ்கிருதத்தை எட்டாவது பட்டியலிலிருந்து நீக்குக!”

மேட்டூரில் கூடிய செயலவைக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய்.அய்.டி.களிலும் மத்திய பாடத் திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளி களிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது. சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும். அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாக அறிவித்திருக் கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை. அது பேச்சு மொழியாகவும் இல்லை. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் சமஸ்கிருத நூல்களின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டதாக எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை கூறவும் இல்லை. கண்டுபிடிப்புகள் வந்த பிறகு சமஸ்கிருத நூல்களிலேயே இருக்கிறதே என்று கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது. சமஸ்கிருத...

அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு

அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு

சமஸ்கிருதப் பண்பாடு – தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை விளக்கிடும் அறிஞர்கள் கருத்து. விவேகானந்தர் எதிர்ப்பு “நான் என் ஆயுள் முழுவதும் சமஸ்கிருத மொழியைப் பயின்று கொண் டிருக்கின்றேன். எனினும் எனக்கே ஒவ்வொரு தடவையும் புதியதாகத் தோன்றுகிறதெனில், சாதாரண மக்களுக்கு அவற்றைப் பயில்வது எவ்வளவு சிரமமாயிருக்கும். எனவே இவ்வெண்ணங்கள் பொது மக்களுடைய சொந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.” (விவேகானந்தர் – இந்திய பிரசங்கங்கள் பக்கம் 183-84) வள்ளலார் எதிர்ப்பு வடலூர் இராமலிங்க அடிகளார் பின்வருமாறு சமஸ்கிருதத்தைப் பற்றி எழுதியுள்ளார். “இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பொழுதுபோக்கையும் உண்டு பண்ணு கின்ற மொழி.” (வள்ளலார் ஒருமைப்பாடு பக்கம் 284) இப்படி எழுதிய வள்ளலார், “இத்தகைய ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்தில் என் மனம் செல்லாமல், எளிய இனிய தமிழ் மொழியில் மனம் செல்லுமாறு பணித்தாயே” என்று மனமுருகி இறைவனைப் புகழ்கிறார். கால்டுவெல் எதிர்ப்பு வடமொழி, தமிழ் முதலான பல மொழிகளில்  சிறந்த பயிற்சியும், புலமையும் உடைய...

சமூகத்தை பார்ப்பனியமாக்கிய சமஸ்கிருதம்

சமூகத்தை பார்ப்பனியமாக்கிய சமஸ்கிருதம்

சமஸ்கிருதத்தை கல்வி நிறுவனங்களில் பா.ஜ.க. ஆட்சி திணிப்பது பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பேயாகும். சமஸ்கிருதத் திணிப்பால் சமூகத்தில் நடந்த பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்புகளை எதிர்த்து போராடிய, போராடி வரும் நாடு தமிழ்நாடு. இது குறித்து முனைவர் பொற்கோ எழுதிய கட்டுரையிலிருந்து… வடமொழிச் செல்வாக்கு சமயங்களையும் அரசர் களையும் தன்னுள் அகப்படுத்திய பிறகு சமுதாய வாழ்விலும் ஊடுருவிப் பரவியது. சங்க காலத் தமிழரசர்களின் பெயர்களையும் பிற்காலச் சோழ பாண்டிய வேந்தர்களின் பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வடமொழிச் செல்வாக்கின் வளர்ச்சி தெளிவாகப் புலப்படும். ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்கன், விக்ரமன், ராஜகேசரி, பரகேசரி முதலான பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ்ப் பெயராக இல்லை. மாறவர்மன், சடையவர்மன், குலசேகரன் முதலான பெயர்களும் வடமொழிச் செல்வாக்கின் உச்சநிலையை நமக்கு உணர்த்துகின்றன. அரசர்களின் பெயர்களே இப்படி மாறிவிட்ட பிறகு அவர்கள் வழங்கும் பட்டங்களும் சிறப்புப் பெயர்களும் எப்படி இருக்கும்? அவையும் வடமொழி மயமாயின. தமிழகத்திலுள்ள ஊர்ப் பெயர்கள், கோயிலின் பெயர்கள், தெய்வத்தின்...

மேட்டூர் செயலவையில் தீர்மானம் 7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் துரோகம்

மேட்டூர் செயலவையில் தீர்மானம் 7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் துரோகம்

மேட்டூரில் கூடிய செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதி மன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான்  மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலைக்கு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மனித உரிமை அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள்,   திரைப் படத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 7 தமிழர் விடுதலைக்கு தனது ஆதரவை தமிழக முதலமைச்சர் ஏற்கெனவே சட்டமன்றத்தில் தெரிவித் துள்ளார்.  இவ்வளவுக்குப் பிறகும் ஆயுள் சிறைவாசியாக சிறையில் வாடும் நளினி தன்னை அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு...

இந்திய அடையாளத்தைத் திணிக்கும் ‘ஆதார்’

இந்திய அடையாளத்தைத் திணிக்கும் ‘ஆதார்’

மேட்டூர் செயலவை தீர்மானம்: ஆதார் அடையாள அட்டையை நடுவண் அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பல முறை தீர்ப்புகளை வழங்கியிருந்தும், தொடர்ந்து மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.  மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டுமின்றி, மாநில அரசின் ஜாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், சமையல் எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை, ஓய்வூதிய நீட்டிப்பு போன்றவற்றிலும் ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் என்று நடுவண் அரசு வற்புறுத்துகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியதோடு மாநில அரசின் உரிமைகளிலும் குறுக்கிடுவ தாகும். வெளிநாட்டிலிருந்து ஊடுறுவும் அகதிகளைத் தடுப்பதற்காக ஆதார் அடையாளம் கொண்டு வரப்படுவதாக முதலில் அறிவித்தார்கள். பிறகு, மக்களை உளவுத்துறை கண்காணிப்பதற்கான ஏற்பாடு என்று உளவுத் துறை அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழி பேசும் இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசிய இனத்துக்குமான அடையாளங்களை மறைத்து இந்தியர் என்ற ஒற்றை அடையாளத் துக்குள் திணிக்கும் சூழ்ச்சிகரமான ஏற்பாடே ஆதார் என்ற அடையாளம். மாநிலங்களுக்கான...

மேட்டூரில் செயலவை கூடியது

மேட்டூரில் செயலவை கூடியது

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 25.6.2016 அன்று பகல் 11 மணியளவில் மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் கூடி கழகத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் – கழக வளர்ச்சி குறித்த திட்டங் களை விரிவாக விவாதித்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழக முழுதுமிருந்தும் கழகச் செயலவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். கொளத்தூர் குமார் – கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூற, சேலம் மேற்கு மாவட்ட செய லாளர் கோவிந்தராசு அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக சென்னை யில் தலைமைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள், கழக அமைப்புகளை மேலும் வலிமையாக்கவும், பரவலாக்கு வதற்குமான திட்டங்கள், பெரியாரியலை சமகாலச் சூழலில் மேலும் வளர்த்தெடுப் பதில் கழகம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்துப் பேசியதோடு, தீர்மானங்களையும் முன் மொழிந்தார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், முகநூல் பொறுப்பாளர்...

ஆக.8 முதல் 12 வரை நான்கு முனைகளிலிருந்து புறப்படுகிறது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கழகத்தின் பரப்புரைப் பயணம்

ஆக.8 முதல் 12 வரை நான்கு முனைகளிலிருந்து புறப்படுகிறது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கழகத்தின் பரப்புரைப் பயணம்

மேட்டூரில் கூடிய கழக செயலவையில் மூட நம்பிக்கைளுக்கு எதிரான பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒரு குடிமகனின் அடிப்படை கடமை என்று அரசியல் சட்டம் கூறுகிறது.  ஆனால் சமுதாயத்தில் அறிவியலுக்கு எதிராக சமூகத்தைப் பாதிக்கும் மூட நம்பிக்கைகள் ஏராளமாக மக்களிடத்தில் படிந்திருக்கின்றன. பெண் சிசுக்கொலை, இளம்வயது திருமணம், பெண்களை ஏமாற்றி கெடுக்கும் சாமியார்களின் மோசடி, பேய், பில்லி, சூனிய நம்பிக்கைகளில் அச்சம், அதனால் சந்திக்கும் இழப்புகள், நரபலி போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக விளக்கி தன்னம்பிக்கையை விதைக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துவது என இந்த செயலவை முடிவு செய்கிறது. 7-8-2016 அன்று சென்னை, கோவை, மயிலாடுதுறை, சத்திய மங்கலம் ஆகிய நான்கு முனைகளிலிருந்து புறப்பட்டு கிராமம் கிராமமாக 5 நாட்கள் பரப்புரை செய்யப்படும். திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய பெயரோடு...

இங்கர்சால் கூறிய பாதிரியார் கதை

இங்கர்சால் கூறிய பாதிரியார் கதை

வியாதிகளுக்கு ஆவிகளும், பேய் களுமே காரணம் என்று ஒரு காலத்தில் மக்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தார்கள். ‘அம்மை நோய்’ வந்து விட்டால் ‘மாரியாத்தா’ உடலுக்குள் குடியேறியிருக்கிறாள் என்று நம்பி சிகிச்சை தர மாட்டார்கள். ‘மாரியம்மாள் தாலாட்டு’ புத்தகத்தை நோயாளிகள் அருகில் உட்கார்ந்து படிப்பார்கள். ‘ஆத்தா முத்துப் போட்டிருக்கிறாள்’ என்பார்கள். வேப்பிலை களை பறித்து படுக்கைக்கு அருகே போடுவார்கள். சிகிச்சை அளிப்பது ‘பாவம்’ என்று நம்பினார்கள். ‘பெரியம்மை’ என்பது ஒரு கடுமையான நோய்க் கிருமியின் தொற்று. சிகிச்சை இல்லாமையினால் ஏராளமான இறப்புகள் நடந்தன. அதற்குப் பிறகுதான் ஆட்சியாளர்கள் தலையிடத் தொடங் கினார்கள். உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க முன்வந்தபோது அதை மக்கள் ஏற்க மறுத்த நிலையிலும் உயிர் ஆபத்துகள் குறித்து விளக்கி பரப்புரை செய்யும் நிலை உருவானது.  ‘பெரியம்மை’ ஒழிப்புக்காகவே தனி சுகாதாரத் துறை உருவாக்கப்பட்டு ஊழியர்களும் நிய மிக்கப்பட்டனர். தொடர்ச்சியான இயக்கங் களுக்குப் பிறகு ‘மாரியாத்தா’ மூட நம்பிக்கை முற்றாக முடிவுக்குக்...

இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (3) இட்லர் – முசோலினியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். க. முகிலன்

இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (3) இட்லர் – முசோலினியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். க. முகிலன்

ஆர்.எஸ்.எஸ். எதற்காக – ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்ற அறிக்கையில் ஹெட்கேவர் கூறுகிறார்: “மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத் தின் விளைவாக நாட்டில் தேசியத்துக்கு ஆதரவு குறைந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தினால் தோற்று விக்கப்பட்ட சமூகத் தீமைகள் ஆபத்தான முறையில் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றன. தேசியப் போராட்ட வெள்ளம் வடிந்தவுடன் பரஸ்பர விரோதங்களும் பொறாமைகளும் மேற்பரப்புக்கு வந்துள்ளன. வெவ்வேறு சமூகங்களுக் கிடையே சண்டைகள் ஆரம்பமாயின. பிராமணர்-பிராமண ரல்லாதார் சண்டை மிக வெளிப்படையாக நடைபெற்றது. எந்த ஸ்தாபனமும் ஒற்றுமையாக இல்லை. ஒத்துழையாமைப் பாலை குடித்து வளர்ந்த இசுலாமியப் பாம்புகள் தமது விஷ மூச்சினால் கலகங்களைத் தூண்டின.” சோதிராவ் புலே 1870இல் தொடங்கிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாகிய – உண்மை நாடுவோர் சங்கமும், 1920ஆம் ஆண்டு முதல் மராட்டியத்தில் மேதை அம்பேத்கர் உருவாக்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கமும் வலிமையாக இருந்ததையும், இசுலாமியர் தங்களுக்குரிய பங்கைக் கேட்பதையும்தான் ஹெட்கேவர் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். ஹெட்கேவருக்குப் பின்...

அபிஷேகத் தீர்த்தமா… அய்யய்யோ ஆபத்து!

அபிஷேகத் தீர்த்தமா… அய்யய்யோ ஆபத்து!

‘ஆன் லைன்’ வழியாக ‘ஆர்டர்’ செய்தால் ‘கங்கை நீர் பாக்கெட்’ அஞ்சலகம் வழியாக இல்லங்களைத் தேடி வரும் திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி தொடங்கப் போகிறதாம். உலகிலேயே மிகவும் ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘கங்கை’ நீர் புனிதமானது என்று  மக்களை நம்ப வைக்கிறது மோடி ஆட்சி. கங்கையை சுத்தப்படுத்தப் போவதாக ரூ. 25000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்காகவே ஒரு அமைச்சர் முழு நேர வேலையாக அலைந்து கொண்டிருக்கிறார். நோய்க் கிருமிகளும் கழிவுகளும் நிறைந்து சாக்கடையாக மாறி நிற்கிறது கங்கை நீர். இங்கே அன்றாடம் ஆயிரக்கணக்கான பிணங்கள் எரியூட்டப்படுகின்றன. அவற்றின் சாம்பல் கரைக்கப்படுவது இந்த கங்கையில்தான். கங்கையில் கரைப்பதற்காகவே வெளியூர் களிலிருந்து ‘சாம்பல்கள்’ கொண்டு வரப்படுகின்றன. இறந்துபோன பிணங்களை எரியூட்டாமல் அப்படியே கங்கையில் வீசும் பழக்கமும் தொடருகிறது. கங்கையில் சாம்பலை கரைத்தால் உடனே ‘மோட்ச’த்தில் அவர்களுக்கான இடம் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது என்ற மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். கங்கை நதிக்கரையோரம் உள்ள நகரங்களிலிருந்து...

‘பாவமன்னிப்பு’ விற்பனைக்குத் தயார்

‘பாவமன்னிப்பு’ விற்பனைக்குத் தயார்

ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் – நாம் எவ்வளவோ உயர்ந்த நாகரிகமும் முற்போக்கும் பெற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அக்காலத்தில் நம்மைவிட மிக மோசமாக மத சம்பந்தமான பழக்க வழக்கங்களை அனுஷ்டித்து வந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் நிலை, இன்றைய நமது  கேவல நிலையைவிட மிக மோசமாகவும், மானக் கேடாகவுமே இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக, அக்காலத்தில் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற ஒரு சுலபமான முறையைக் கடைப்பிடித்து நம்பச் செய்து வந்தார்கள். இன்று நமது நாட்டில் புரோகிதர்களால் நாம் ஏமாற்றப்படுவது போலவே  அங்குள்ள பாதிரிமார்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். அதாவது, ‘பாவமன்னிப்புச் சீட்டு’ வாங்குவது என்பதாகும். ஒருவன் எத்தகைய தீச்செயலையும் செய்துவிட்டுப் பாதிரியாரிடம் சென்று, “அய்யா! நான் இன்ன பாவம் செய்தேன். அதற்கு ‘மன்னிப்பு டிக்கெட்’ வேண்டும்” என்று கேட்டதும், உடனே பாதிரியார், அந்தந்தப் பாவத்தின் நிலைக்குத் தக்கபடி கிரயம் போட்டுப் பணம் வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்து...

வினா… விடை…!

வினா… விடை…!

ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுவோம்.                           – விஜயகாந்த் அந்த ஃபீனிக்ஸ் பறவையே உங்கள் கட்சியைப் போல் தான் சார்; அப்படி ஒன்று இல்லை. திருட்டுப்போய் கைப் பற்றப்பட்ட சாமி சிலை களை அடையாளம் காட்டினால் அந்தந்த கோயில்களிடம் ஒப்படைக்கப்படும்.                 -காவல்துறை அறிவிப்பு கடவுளைக் கண்டுபிடித்தது காவல்துறை; கடவுளை அடையாளம் காட்டுபவன் மனிதன்; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை. திருப்பதி ஏழுமலையான் கருவறை கோபுரத்துக்கு மேலே விமானங்கள் பறப்பது ஆகமத்துக்கு எதிரானது. – திருப்பதி தலைமை அர்ச்சகர் காக்கா, குருவி எல்லாம் பறக்குறதுக்கு ஆகமம் அனுமதிக்குதுங்களா… கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. திருவாரூர் தியாகராஜ சாமி தேரில் பவனி வந்தார்.- செய்தி அப்படியே மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண் டிருப்பாரே… பெற்றிருப்பார். மக்கள் பிரதிநிதிக்கு அதுதான் அழகு! டெல்லி பல்கலைக் கழகத்தில் படித்து மோடி பட்டம் வாங்கினாரா என்ற தகவலை வெளியிட முடியாது; அது பாதுகாக்கப்பட வேண்டிய இரகசியம்.   – பல்கலைக்கழகம் தகவல் இந்தியாவின்...

அறிவியல் வழியாக நிரூபணம் ‘பிரார்த்தனை’  எந்தப் பயனும் தராது

அறிவியல் வழியாக நிரூபணம் ‘பிரார்த்தனை’ எந்தப் பயனும் தராது

‘எனக்காக – எனது நோய் தீர்வதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ – இது நோயாளிகளைப் பார்க்க வருவோரிடம் நோயாளிகள் வைக்கும் கோரிக்கை. “செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து முடித்து விட்டோம்; இனி நம் கையில்  எதுவும் இல்லை; எல்லாம் ஆண்டவனிடம் தான்” – இதுவும் வழக்கமாக கேட்கப்படும் உரையாடல்கள். பல மருத்துவர்கள் – அறுவை சிகிச்சையை முடித்த பிறகு, “சிகிச்சை வெற்றி பெற்றுவிட்டது; ஆனாலும் இறுதி முடிவு ஆண்டவனிடம்தானே!” என்று கூறுவது அவர்களுக்கான பாதுகாப்பு. அறுவை சிகிச்சை தோல்வி அடைந்து விட்டால் பழியை ஆண்டவன் மீது போட்டு தப்பித்துக் கொள்ளும் தந்திரம்தான்! ‘பிரார்த்தனை’யால் நோய் தீருமா? ‘பிரார்த்தனை’யால் பலன் கிடைக்குமா? ‘பிரார்த்தனை’ என்பது ஒரு மூட நம்பிக்கைதான். பிரார்த்தனைகளில் நம்பிக்கை உள்ள குடும்பங்களுக்கு கடவுள் ஏன் நோயைத் தரவேண்டும்? நோயைத் தராமலே இருந்திருக்கலாம் அல்லவா? கடவுள் நோயைத் தருவார்; பிறகு அதைத் தீர்க்க அதே கடவுளிடம் ‘பிரார்த்தனை’ செய்ய வேண்டும் என்றால்,...

“சாவிலும் சடங்குகளை தவிர்க்கச் சொன்ன தோழர்”

“சாவிலும் சடங்குகளை தவிர்க்கச் சொன்ன தோழர்”

1 1062016 அ ன் று சென்னை மாவட்ட கழகத் தோழர் ஆட்டோ சரவணன் முதலாமாண்டு நிகழ்ச்சி இராயப்பேட்டை பத்ரிநாராயணன் படிப்பகத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்திற்கு மாலை அணிவித்து இரங்கல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்ட இந்நிகழ்வில் கழகத்தோழர்கள் திரளாக கலந்து வீர வணக்கம் செலுத்தினர். “மரணத்திலும் சடங்குகளை மறுக்கச் சொன்ன பெரியார் தொண்டர் சரவணனுக்கு வீர வணக்கம்!” என்ற வாசகங்களடங்கிய சுவரொட்டியை கழகத் தோழர்கள் ஒட்டியிருந்தனர்.   பெரியார் முழக்கம் 16062016 இதழ்

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி எழுச்சிப் பேரணி

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி எழுச்சிப் பேரணி

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முன் வந்த தமிழக அரசின் முடிவை நிறைவேற்றக் கோரி ஜூன் 11ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் கோரிக்கை பேரணி எழுச்சியுடன் நடந்தது. 7 தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய பேரணி, பிற்பகல் 3.30 மணியளவில் எழும்பூர், லேங்ஸ் தோட்டம் அருகே முடிவடைந்தது. பேரணி யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி , பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் ஏராளமான கழகத் தோழர்களும், புதுவை கழகத் தோழர்களும் பங்கேற்றனர். வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், அற்புதம் அம்மாள், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, வி.சி.க. செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும்,...

பெரியார் நூல்களை கன்னடத்தில் மொழி பெயர்த்த வேமண்ணா முடிவெய்தினார்

பெரியார் நூல்களை கன்னடத்தில் மொழி பெயர்த்த வேமண்ணா முடிவெய்தினார்

தந்தை பெரியாரின் நூல்களை கன்னட மொழியில் மொழி பெயர்த்து, கன்னட மக்களிடம் பெரியார் சிந்தனைகளை கொண்டு சென்ற எழுத்தாளர் வேமண்ணா (89). பெங்களூரில் கடந்த ஜூன் 8ஆம் தேதி முடிவெய்தினார். 1960களில் பெரியார் பெங்களூரு கோலார் தங்கவயல் பகுதிகளுக்கு பொதுக் கூட்டங்களுக்கு சென்றபோது, வேமண்ணா, பெரியாருடன் உரையாடி, நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். கன்னட மொழியைப் படித்தால் பகுத்தறிவு கருத்துகளை கன்னட மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுமே என்று பெரியார் அறிவுறுத்தியதை ஏற்று, பெங்களூர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து முறைப்படி கன்னடம் பயின்றார். கடந்த 50 ஆண்டுகளில் பெரியாரின் 30க்கும் மேற்பட்ட நூல்களை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். பெரியாரின் வாழ்க்கை வரலாறு நூலையும் கன்னடத்தில் எழுதிய பெருமைக்குரியவர். இந்த நூல் ஹம்பி பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவரது பெரியாரியல் பணிகளை பாராட்டி, ‘கன்னட ரத்னா’, ‘பெரியார் முழக்கம்’ உள்ளிட்ட பல விருதுகளை பல அமைப்புகள் வழங்கி கவுரவித்துள்ளன. வேமண்ணாவின் இயற்பெயர் வி.சி.வேலாயுதம். தமிழ்நாட்டுத் தமிழர்....

க. முகிலன் இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (2) சீர்திருத்தங்களை எதிர்த்த திலகர்

க. முகிலன் இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (2) சீர்திருத்தங்களை எதிர்த்த திலகர்

முஸ்லிம் அல்லாதவர்களில் மிகப் பெரும்பான்மையினரையும், வருணாசிரம அமைப்புக்கு வெளியில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் இந்துக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவந்து அவர்கள் எல்லாருக்கும் பொதுவான இந்து உரிமை இயல் சட்ட நெறிகளை (மனுஸ்மிருதி) முதலானவற்றின் அடிப்படையில், ஆங்கிலேயே ஆட்சி 1860இல் உருவாக்கியது. 1860க்கு  முன்பு வரை, இந்தியாவில் ஒரே சீராக எல்லா இடங்களுக்கும் எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் பொருந்துகிற, பொதுவான சித்தாந்த உள்ளடக்கத்தைக் கொண்ட இந்துச் சட்டம் (ழேைனர உடினந) என்று ஏதும் இருந்ததில்லை. ஆனால் சங்பரிவாரங்கள் வேதகாலம் முதல் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி இருந்து வந்தது போலவும், அதை மீண்டும் நிலைநாட்டுவதே இந்தியர்களின் – இந்திய நாட்டின் சுயமரியாதையை மீட்டெடுப்பதாகும் என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன.  ஆங்கிலேயரின் ஆட்சியாலும் கருத்துகளாலும் இந்து மதம் பல அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வேதகாலம் முதல் பார்ப்பனியம் காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, தன் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்யும்...

தபோல்கர் கொலை:

தபோல்கர் கொலை:

இந்து தீவிரவாதி கைது மகாராஷ்டிராவில் பகுத்தறிவாளர் டாக்டர் தபோல்கர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து தீவிரவாத அமைப்பைச் சார்ந்த ஒருவரை சி.பி.அய். கைது செய்துள்ளது. அவரது பெயர் வீரேந்திர தாப்தே. ‘இந்து ஜன் ஜாக்ருதி சமிதி’ என்ற அமைப்பின் தீவிர உறுப்பினர். கம்யூனிஸ்ட்டும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே, இதேபோல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதே இந்து தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சமீர் கெய்க்வார்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2009இல் கோவாவில்  நடந்த குண்டு வெடிப்பில் தேடப் பட்டு வரும் முக்கிய இந்து தீவிரவாதி சாரங் அகோல்கர்தான் தபோல்கர் கொலையில் முதன்மை குற்றவாளி என்று சி.பி.அய். கருதி அவரை தேடி வருகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த இருவருக்கும் அகோல்கருக்கும் இடையே இணைய தளம் வழியாக கடிதத்  தொடர்புகள் இருந் துள்ளதை சி.பி.அய். கண்டு பிடித்துள்ளது. சரியான திசையில் சி.பி.அய். செயல்படத் தொடங்கியிருக்கிறது என்றும், காலம் கடந்த நடவடிக்கை...

நீதிபதிகளையும் விடாத ‘இராசி எண்’ மூடநம்பிக்கை

நீதிபதிகளையும் விடாத ‘இராசி எண்’ மூடநம்பிக்கை

‘இராசி எண்’ பார்க்கும் மூட நம்பிக்கை நீதித் துறைகளில் கொடி கட்டிப் பறப்பதை விளக்கி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு, தமிழ் நாளேடு ஒன்றில் விரிவான கட்டுரை  எழுதியுள்ளார். அதிலிருந்து… கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி தோற்று, இடதுசாரி கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. முந்தைய அமைச்சர்கள் பயன் படுத்திய வாகனங்களையே – புதிய அமைச்சர்களும் பயன்படுத்த முடிவெடுத்தனர். வாகனங்களை அணிவகுத்து  நிறுத்திய போது, அதில் 13ஆம் எண் உள்ள வாகனமே இல்லை. காரணம் 13 இராசியில்லாத எண் என்ற மூட நம்பிக்கை. ‘இராசியில்லாத எண்’ வேண்டாம் என்று நம்பிய பிறகும் தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு ‘இராசி’ இல்லாமல் போய்விட்டதே! இப்போது நிதி அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த  அமைச்சர் தாமஸ் அய்சக் தன்னுடைய வாகனத்துக்கு 13  என்ற எண்ணைப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். அமைச்சரைப் பாராட்ட வேண்டும். கேரளாவில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைகளுக்குக்கூட ‘13’...

ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 12.6.2016 காலை 10 மணியளவில் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடியது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24.1.2016 அன்று திருச்சியில் கூடிய கழகச் செயலவை கூட்டத்துக்குப் பிறகு கழக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் கழகம் அறிவித்த போராட்டங்களை நடத்திய – நடத்தாத கழக அமைப்புகள் குறித்தும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 16062016 இதழ்

அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுறுவியது   மோடியின் 2 ஆண்டு ஆட்சி

அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுறுவியது மோடியின் 2 ஆண்டு ஆட்சி

  மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் மோடி ஆட்சியின்  “சாதனைகள்” தான் என்ன? இரண்டாம் ஆண்டு வெற்றி விழாவை மே 28 மாலை புதுடில்லியில் ‘இந்தியா கேட்’ மைதானத்தில் திரையுலக நட்சத்திரங்களை  அழைத்து ஆடம்பரமாக கொண்டாடினார்கள். நட்சத்திரங்களைப் பார்க்க கூட்டம் கூடியது. இதே போன்ற வெற்றி விழா உ.பி. தேர்தலை கவனத்தில் கொண்டு அலகாபாத்தில் ‘சர்தார் பட்டேல் கிசான் மகா சம்மேளனம்’ என்று விவசாயிகள் விழாவாக கொண்டாடினார்கள். அமித்ஷா சிறப்பு விருந்தினர். குறைந்த எண்ணிக்கையில் தான் கூட்டம் சேர்ந்தது. அமீத்ஷா விரக்தியானார். ஊடகங்களும் பெரிதாக செய்தி போடவில்லை. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் 80 சதவீதம் ‘வாய் வீச்சு’களாகவே இருக்கிறது என்றும் ஆட்சியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாக ‘பிரண்ட் லைன்’ ஏடு எழுதியிருக்கிறது. ‘தாராளமயம்’ என்ற கொள்கையில் காங்கிரஸ்...

குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் முடிவெய்தினார்

குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் முடிவெய்தினார்

பெரியார் இயக்கத்தின் குடும்பத்தில் வந்த வரும், மிகச் சிறந்த பெரியாரிய லாளருமாகவும் திகழ்ந்த குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் (74) ஜூன் முதல் தேதி குடந்தையில் முடிவெய்தினார். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் திராவிடர் கழக இளைஞரணி தலைவராக செயல்பட்ட ஆர்.பி.எஸ். ஸ்டாலின் ஏராளமான இளைஞர்களை பெரியார் இயக்கத்துக்குள் கொண்டு வந்தவர். மரணமடைந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சக்கரவர்த்தி, திராவிடர் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பிறகு அந்தக் கழகத் தலைமையால் நீக்கப்பட்ட மறைந்த வள்ளிநாயகம் போன்றவர்களை உருவாக்கியவர். அவரது தலைமைப் பண்புக்கு ஏராளமான சான்றுகளைக் கூறலாம். 1974ஆம் ஆண்டு பெரியார் முதலாமாண்டு நினைவு நாளை வடநாட்டு எதிர்ப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு போராட்ட நாளாக அப்போது கழகத் தலைவராக இருந்த அன்னை மணியம்மையார் அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் இராம லீலா மைதானத்தில் ‘இராவணன், கும்பகர்ணன், மேகநாதன்’ என்ற இராமாயணத்தில் திராவிடர்களாக சித்தரிக்கப்படும் கதை மாந்தர்களை தீயிட்டு எரிக்கும் ‘இராம லீலா’வை...

பகுத்தறிவாளர்கள் கொலை: புலன் விசாரணை தாமதப்படுத்துவது ஏன்?

பகுத்தறிவாளர்கள் கொலை: புலன் விசாரணை தாமதப்படுத்துவது ஏன்?

பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆண்டுகள் பல ஓடியும் இன்னமும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மூன்று கொலைகளிலும், ஒரே துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக மும்பை தடயவியல் சோதனை அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இது உண்மை தானா என்பதை உறுதி செய்வதற்கு மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) இலண்டனில் உள்ள ‘ஸ்காட்லாண்ட் யார்ட்’ புலனாய்வு அமைப்பின் உதவியை நாடியிருக்கிறது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் இதர தடயவியல் சான்றாதாரங்களை ஸ்காட்லாந்து நாட்டின் உளவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கருநாடக காவல்துறையும் தடயவியல் நிறுவனமும் வேறு ஒரு கருத்தை முன் வைத்திருக்கின்றன. கருநாடக பகுத்தறிவாளர் பன்சாராவை சுடுவதற்கு இரண்டு நாட்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு துப்பாக்கிகளில் ஒன்று தபோல்கரை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று கருநாடக அரசின் புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன. இந்த மூன்று கொலைகளுக்கு திட்டமிட்டவர்களும் கொலையை செய்து முடித்தவர்களும் ஒரே கும்பலைச் சார்ந்தவர்கள்தான் என்று சி.பி.அய்....

5 நாள்கள் நடந்த  குழந்தைகள் ‘பழகுமகிழ்வு’ முகாம்

5 நாள்கள் நடந்த குழந்தைகள் ‘பழகுமகிழ்வு’ முகாம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் நடத்தப் பட்ட குழந்தைகளுக்கான ‘பழகு மகிழ்வு’ முகாம் 5 நாள்கள் நடந்தன. முகாமில் பங்கேற்ற குழந்தைகள் 5 நாளுக்குப் பிறகு முகாமிலிருந்தே பிரிந்து செல்ல மனமின்றி கண்ணீருடன் பிரிந்தனர். முகாமில் மகிழ்ச்சியாக இருந்ததோடு பல அறிவியல் கருத்துகளை அறியவும், பகிரவும் வாய்ப்பு பெற்றதாகவும் தெரிவித்தனர். முதல் நாள் பெற்றோரைப் பிரிந்து வந்ததற்காக அழுத குழந்தைகள், 5ஆம் நாள் பிரியும்போது முகாமை விட்டுப் பிரிவதற்காக அழும் நிலைக்கு உணர்வுகளை முகாம் இவர்கள் உள்ளத்தில் விதைத்திருக்கிறது. (முகாம் நான்கு நாள் நடந்ததாக கடந்த இதழில் வெளி வந்த செய்தி தவறு. 5 நாள்கள் நடந்தன.) பெரியார் முழக்கம் 09062016 இதழ்

ஜூன் 11  வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

ஜூன் 11 வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு ஜூன் 11ஆம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர்  கைது செய்யப்பட்ட நாள் 1991 ஜூன் 11. இதை நினைவு கூர்ந்திடவும் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்துள்ள 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவான முடிவை மீண்டும் நினைவூட்டியும் ஜூன் 11 அன்று வேலூர் சிறை வாயில் முன்பிருந்து காலை 8 மணிக்கு வாகனப் பேரணி புறப்படுகிறது. வேலூரிலிருந்து சென்னை கோட்டை நோக்கி வரும் இந்தப் பேரணியில் இரு சக்கரவாகனங்களும், நான்கு சக்கரவாகனங்களும் இடம் பெறுகின்றன. 7 தமிழர் விடுதலலைக்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய் துள்ள இந்தப் பேரணியில் கழகத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். – கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 09062016 இதழ்

‘எஸ்.வி.ஆர்.’ ஆவணப்  படம் திரையிடல்

‘எஸ்.வி.ஆர்.’ ஆவணப் படம் திரையிடல்

சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் 4.6.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெற இருந்த “மனித நேயப் போராளி தோழர் எஸ்.வி.ஆர். ஆவணப் படத் திரையிடல் நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. உடனே கழகத் தலைவர் ஆலோசனைப்படி கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் இல்லத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சிக்கான இடம் மாற்றப்பட்டது. இரவு 7.15 மணிக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் நல்லகண்ணு வெளியிட ஆவணப் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார் நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தியாகு, வ.கீதா, ஓவியர் டிராட்ஸ்கி மருது, பேராசிரியர் வீ.அரசு மற்றும் பல தோழர்கள் இயக்க நண்பர்கள் பங்கேற்றனர். கீழே காவலர்கள் நின்றிருக்க வீட்டின் மாடியில் ஆவணப் படம் திரையிடப்பட்டது. பெரியார் முழக்கம் 09062016 இதழ்

இந்துத்துவ அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை

இந்துத்துவ அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை

“மதத்தின் மேலாண்மையும் படிநிலைச் சமூகத்தின் நிலைத்த தன்மையும் பெருந்தாக்கு  தலுக்குள்ளாகும் காலத்தில்தான் தேசம் என்ற ஓர்  அமைப்பு, அக்காலத்தின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு  செய்யும் வகையில் உருவாகத் தொடங்குகிறது” என்று வரலாற்று அறிஞர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.  அய்ரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கிய அறிவொளிக் காலம், எதையும் கேள்விக்குட்படுத்தி ஆராய்வது என்ற அறிவுத் தேடலை ஊக்குவித்தது. அச்சுக் கலையின் கண்டுபிடிப்பு பரந்துபட்ட அளவில் மக்கள் நூல்களைப் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியது. இதன் விளைவாக வளர்ந்த அறிவியல் மனப்பான்மை மத நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக எழுந்தது; பிறப்பு, இறப்பு, சாவுக்குப் பிந்தைய வாழ்வு முதலியவை பற்றி மதம் முன் வைத்த வாதங்களைக் கேள்விக்குட்படுத்தியது. அதேகாலக் கட்டத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகளின்  உந்துவிசையால் வளர்ந்த முதலாளியம், பழைய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பும், கிறித்துவ மத ஆதிக்கமும் தன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதால் அவற்றை வீழ்த்த முனைந்தது. இதன் விளைவாக அய்ரோப்பாவில் தேசியம், தேச-அரசு, சனநாயகம், சுதந்திரம், தனி...

கொள்கைக்கு முகமது அலி கொடுத்த விலை

கொள்கைக்கு முகமது அலி கொடுத்த விலை

உலக குத்துச் சண்டை வீரர், மூன்று  முறை சாம்பியன் பட்டத்தை வென்ற முகம்மது அலி, அமெரிக்காவில் மரண  மடைந்துவிட்டார். அமெரிக்காவில் கருப்பர் இனத்தில் பிறந்தவர். ஹெவி வெயிட் சாம்பியனாக குத்துச் சண்டை போட்டியில் வெற்றிகளைக் குவித்தாலும், குத்துச் சண்டையிலேயே அவர் மூழ்கிக் கிடக்கவில்லை. கோடி கோடியாய் பணம் குவிப்பதையே நோக்கமாகக் கொள்ளவில்லை. வியட்நாம் மீது போர் தொடுத்த  அமெரிக்கா, முகம்மது அலியை இராணுவத்தில் சேர உத்தரவிட்டது. அலி அதை ஏற்க மறுத்தார். அது தனது இஸ்லாமிய  கொள்கைக்கு எதிரானது என்றார். அதோடு நிற்கவில்லை; “வியட்நாமியர்களை நான் ஏன் எதிர்க்க வேண்டும்? அவர்கள் என்னை ‘நீக்ரோ; கறுப்பன்’ என்று இழிவு படுத்தவில்லையே?” என்று திருப்பிக் கேட்டார். இராணுவத்தில் சேர மறுத்ததால் அமெரிக்க அரசு அலிக்குக் கிடைத்த விருதுகள் பதக்கங்களை முடக்கியது. அவர்  போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்தது. அவரது கடவுச் சீட்டு முடக்கப்பட்டது. நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 10000 டாலர்...

பெண் விடுதலை பேசும் ‘இறைவி’

பெண் விடுதலை பேசும் ‘இறைவி’

எவரும் தொடுவதற்கு அஞ்சும் பிரச்சினையை  திரைப்படமாக்க முன் வந்த துணிவுக்காகவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அவரது எழுத்து-இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘இறைவி’ படம் பெண்ணுரிமை என்பதையும் தாண்டி பெண்  விடுதலையைப் பேசுகிறது. ஆண்கள் தங்களிடம் கட்டி எழுப்பியிருக்கும் ‘ஆணாதிக்கம்’ என்ற ஆணவத்துடன்  எடுக்கும் முடிவுகள், பெண்களிடம் உருவாக்கும் கடும் பாதிப்புகளையும் வலிகளையும் அழுத்தமாக உணர்த்தி யிருக்கிறார் இயக்குனர். சிலப்பதிகாரம் – தமிழ் தேசிய இலக்கியமாக – தமிழ் தேசியவாதிகளால் முன் வைக்கப்படுகிறது. அதில் அடங்கியுள்ள பெண்ணடிமை சிந்தனையை பெரியார் கேள்விக்குள்ளாக்கினார். மாதவி எனும் தாசி  வீட்டுக்குச் சென்ற கணவன் கோவலன், எப்போது  திரும்பி வருவான் என்று உடலையும் உள்ளத்தையும் வருத்தி காத்திருக்கிறாள் கண்ணகி. இதேபோல் கண்ணகி, தனது  காதலன் வீட்டுக்குச் சென்றால், கோவலன் காத்திருப்பானா என்று பெரியார் கேட்ட கேள்வியை இத்திரைப்படமும் கேட்கிறது. கைவிட்டு ஓடிய காதலனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பாத்திரம் இந்த படத்தில் காதலையும் திருமணத்தையும் ...

தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே சமூக நீதி பரப்புரை

தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே சமூக நீதி பரப்புரை

29.5.2016 அன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கழகச் செயலாளர்  முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், இடஒதுக்கீடு, தனியார் துறையில் இடஒதுக்கீடு, பொது நுழைவுத் தேர்வு, அரசாணை 92, தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் சேர்க்கை, தனியார் கல்விக்கொள்ளை, தாய்மொழிக் கல்வி, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை குறித்தும் இன்னும் பிற கல்வி உதவித் தொகை வழங்கும் அரசாணை குறித்தும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி.சிவக்குமார் தொடக்க உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்வி களுக்கு கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் விளக்கம் அளித்தார். காலை நிகழ்வு மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. மதிய உணவு  மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கிய கூட்டம் 6.30 வரை தொடர்ந்தது. மதிய அமர்வில்...

ஒரே நேரத்தில் நடந்த இரு பயிலரங்குகள்

ஒரே நேரத்தில் நடந்த இரு பயிலரங்குகள்

குடியாத்தம் அருகே உள்ள இராமாலை கிராமத்தில் மாவட்ட கழக அமைப்பாளர் சிவாவின் முயற்சியால் அவருக்கு சொந்தமான தோப்பில் கழக சார்பில் பெரியார்-அம்பேத்கர் பயிலரங்கம், மே 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கு தனியாகவும், தோழர்களுக்கு தனியாகவும் பயிற்சிகள் நடந்தன.  கழகத் தோழர் ஆசிரியர் ஈரோடு சிவக்குமார், சிறுவர் சிறுமி யருக்கு  பெரியார் குறித்தும், ஜாதி, கடவுள், மதம் குறித்தும் மிக எளிமையாக குழந்தைகளுக்கு புரிந்திடும் வகையில் இரண்டு மணி  நேரத்துக்கும் மேலாக பேசி  கலந்துரையாடினார். இரண்டு நாள்களிலும் காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கு நடத்தி பகுத்தறிவு அறிவியல் கருத்துகளை விளக்கினார். குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோழர்களுக்காக நடந்த பயிலரங்கத்தில் – முதல் நாள் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கர்-பெரியார் தேவையும்- அவசியமும்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அடிப்படை வாதமும் ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியும்’ என்ற தலைப்பிலும், கொளத்தூர் மணி, ‘அம்பேத்கரும் இந்துமதமும்’...

10 ஆண்டு கோரிக்கை 24 மணி நேரத்தில் தீர்ந்தது இராமாலை பயிற்சி முகாமின் தாக்கம்

10 ஆண்டு கோரிக்கை 24 மணி நேரத்தில் தீர்ந்தது இராமாலை பயிற்சி முகாமின் தாக்கம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இராமாலை கிராமத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மே 26, 27 தேதிகளில் நடத்திய பயிலரங்கம் மிகப் பெரும் தாக்கங்களை உருவாக்கியது. திராவிடர் விடுதலைக் கழகம் பயிற்சி முகாம்  நடத்திய இராமாலை கிராமத்துக்கு அருகே உள்ளது  கிருஷ்ணாபுரம். இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அவர்களையொட்டி அருந்ததிய சமூகத்தினரின்  சுமார் 20 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.  அருந்ததியர் குடியிருப்புகளையொட்டி மிகப் பெரும் புளியமரம் ஒன்று எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய நிலையில் இருந்தது. இதனால் தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் இந்த மரத்தை அகற்றக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக  அருந்ததிய சமூகத்தினர் மாவட்ட பஞ்சாயத்துத்  தலைவரிடமும் வருவாய் அலுவலகத்திலும் புகார் அளித்து வந்தனர். எவரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கழகப் பயிற்சி முகாம் நடப்பதற்கு அய்ந்து நாள் முன்பு மரத்தின் ஒரு பகுதி உடைந்து குடியிருப்புகளின் மீது விழுந்துவிட்டது....

மதவாதிகளை மிஞ்சினர் நாத்திகர்கள்

மதவாதிகளை மிஞ்சினர் நாத்திகர்கள்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மாநிலங்களில் கிறிஸ்துவ மத நம்பிக்கையாளர்களைவிட மதங்கள் வேண்டாம் என்று கூறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தங்களை கிறிஸ்துவர், கத்தோலிக்கர் என்று வெவ்வேறு மத அடையாளங்களைப் பதிவு செய்தவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் 25 சதவீதம் பேர். 2014ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மத நம்பிக்கையாளர்களில் இரண்டு மடங்கு அளவில் மத நம்பிக்கைகளை கைவிட்டு விட்டனர். எங்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்தவர்கள், மக்கள் தொகை எண்ணிக்கையில் 48.5 சதவீதம். இங்கிலாந்து சமூகத்தில் கிறிஸ்தவர்களைவிட மத நம்பிக்கையற்றவர்களே அதிகரித்து விட்டனர். இத்தகவலை இது குறித்து ஆய்வு நடத்தி வரும் பேராசிரியர் ஸ்டீபன் புலுவென்ட் (Stephen Bulluvant) கடந்த மே 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவர் இலண்டனில் உள்ள செயின் மேரீஸ் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இறையியல் துறையின் பேராசிரியர். கடந்த 30 ஆண்டுகளாக மத நம்பிக்கைகள் குறித்து...

சமஸ்கிருதத்தில் கணித அறிவியலா? பொய் பிரச்சாரத்தின் முகமூடி கிழிகிறது

சமஸ்கிருதத்தில் கணித அறிவியலா? பொய் பிரச்சாரத்தின் முகமூடி கிழிகிறது

‘நாசா’ கூறியிருக்கிறது; ‘அமெரிக்க பேராசிரியர் கண்டுபிடித்திருக்கிறார்’ – இப்படி எல்லாம் சங்பரிவார் கூட்டம், தங்களது போலி அறிவியலுக்கு சான்று களைக் காட்டுவார்கள். ஆராயப் புகுந்தால் கடைசியில் இவை எல்லாம் போலிச் சான்றுகள் என்ற உண்மை வெளிச்சத் துக்கு வரும். கடந்த சில மாதங்களாக மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒரு கதையை கூறி வருகிறார். “சமஸ்கிருதத்தில், ‘சல்பாசூத்திரம்’ (Sulbasutras) என்று ஒன்று இருக்கிறது; கணிதத்தில் கிரேக்கர்கள், ‘பித்தகோரஸ்’ சூத்திரத்தை கண்டறிவதற்கு முன்பே, சல்பா சூத்திரத்தில் இந்தக் கணிதம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன” என்று கூறும் ஸ்மிருதி இராணி, அய்.அய்.டி. மாணவர்களின் அறிவியலுக்கு சமஸ்கிருதம் பயன்படும் என்றும் கூறி வருகிறார். இதன் காரணமாகவே அய்.அய்.டி. மாணவர் களுக்கு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக கற்பிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் நியாயப் படுத்துகிறார். ஸ்மிருதி இராணியின் கதை இத்துடன் முடியவில்லை. அமெரிக்காவின் கோர்வெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், 1990இல் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்து...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22) தலைநகர் மீட்புப் போரில் திராவிடர் கழகம் வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22) தலைநகர் மீட்புப் போரில் திராவிடர் கழகம் வாலாசா வல்லவன்

தமிழரசு கழகத்தைத் தொடங்கிய ம.பொ.சி., மீண்டும் காங்கிரசுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இது குறித்து ம.பொ.சி.யே இப்படி எழுதுகிறார். (சென்ற இதழ் தொடர்ச்சி) காங்கிரசிலிருந்து வெளியேறி விடுவதென்று தமிழரசுக் கழகம் எடுத்த தீர்மானத்தின் ஆங்கில நகலை எனது கையெழுத்துடன் நேருஜிக்கு அனுப்பி வைத்தேன். அவர், “தமிழரசுக் கழகம் எடுத்த துரதிருஷ்டமான முடிவு எனக்குக் கிடைத்தது” என்று மட்டுமே குறிப்பிட்டு பதில்  எழுதினார். “தமிழரசுக் கழகத்தார் அனுப்பிய ராஜினாமாக்களை ஏற்று பதில் எழுதவேண்டாம்; மேற்கொண்டு அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதைக் கண் காணித்து வாருங்கள்” என்று நேருஜி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியதாகக் கேள்விப்பட்டேன். பிரதமர் நேருஜி என்பால் காட்டிய பேரன்பு காரணமாக ஒன்றரையாண்டு காலம் நான் காங்சிரசில் நீடித்திருக்க அவகாசம் கிடைத்தது. (ம.பொ.சி. ‘நேருஜி என் ஆசான்’ பக். 93 முதல் 100 வானதி பதிப்பகம், சென்னை-17) சென்னை நகர் பிரச்சினை 1953 சனவரி முதல் 1953...

கொளத்தூர் மணி பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3) சுயமரியாதை திருமணத்துக்கு தமிழ் திருமண முறை மாற்றாக முடியுமா?

கொளத்தூர் மணி பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3) சுயமரியாதை திருமணத்துக்கு தமிழ் திருமண முறை மாற்றாக முடியுமா?

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)   சுயமரியாதைத் திருமணம் என்பதை பெரியார் அறிமுகப்படுத்தினார். பார்ப்பன புரோகித விலக்கு,           பெண்ணடிமை விலக்கு என்பதெல்லாம் சேர்த்து தான் சுயமரியாதை திருமணம். பெரியாருடன் இந்தி      எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்ற சைவர்கள் போராட்டம் முடிந்தவுடன் 1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் தமிழர் திருமண மாநாடு கூட்டினார்கள். அங்கு தமிழ்த் திருமண முறை என்று ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள். பொதுவாக தமிழர்கள் என்பதில் நாம் வைத்திருக்கும் பொருள் என்னவென்றால் வெள்ளாள மனப் பான்மை உடையவர்கள். அந்த உடை, அந்த உணவு உண்பவர்கள் என்பதுதான். யார் தமிழர்? உங்களுடைய அடையாளமெல்லாம் யாரைக் குறிக்கிறது? வேட்டிதான் தமிழர் உடையென்றால் இன்றைக்கு கிராமத்தில் யாரும் வெள்ளை வேட்டி அணிவதில்லை, லுங்கிதான் அணிகிறார்கள். லுங்கி இப்போது வந்திருக்கலாம். அதுதான் அவர்களுக்கு வசதியாக உள்ளது. இப்போது...