விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை கண்டித்தும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப் பட்டு கிராமத்தில்

04.09.2017  அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சி.சாமிதுரை  தலைமை வகித்தார். க. மதியழகன்  தொடக்க உரையாற்றினார்.  வேதகாலக் கல்வி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி கல்வி, நீதிக்கட்சி காலக் கல்வி, இராசாசியின் குலக் கல்வி, காமராசர் ஆட்சி கல்வி, மோடியின் இந்தி திணிப்பு – நீட் தேர்வு பற்றி உரையாற்றினார்.

அழகு முருகன், இராஜேஷ், இளையரசன், தீனா, பெரியார் வெங்கட் ஆகியோர்  நீட் தேர்வினால் ஏழை எளிய பிள்ளைகள் பாதிக் கப்படுவதைப் பேசினார்கள். இறுதியாக

க. இராமர்  கண்டன உரையாற்றினார். உரையில் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, தமிழக  கல்வியின் சிறப்பு மருத்துவ சிறப்பு, வெளி மாநிலத்தில் மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் படுகின்ற துன்பங்கள் பற்றி விரிவாகப் பேசினார்.

கண்டன ஆர்பாட்டத்தில்   விழுப்புரம் மாவட்ட  கழகத் தோழர்கள், அம்பேத்கர் அமைப்பு  மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  கலந்து கொண்டு தங்கள்  கண்டனத்தையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 14092017 இதழ்

You may also like...