மயிலைப் பகுதி கழகம் நடத்தும் கால்பந்து போட்டி – பெரியார் விழா

மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் சென்னையில் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் வழியாக 5 ஆண்டுகளாக கால்பந்து போட்டியையும் பெரியார் பிறந்த நாள் விழாவையும் இணைத்து நடத்தி வருகிறார்கள். இவ்வாண்டு செப்.26ஆம் தேதி பெரியார் பிறந்த நாள்விழா பொதுக் கூட்டம், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழாவை மந்தைவெளி இரயில் நிலையம் அருகே செயின்ட் மேரீஸ் பாலம் பகுதியில் தோழர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். கழகத் தலைவர், பொதுச் செயலாளரோடு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் சிறப்புரையாற்றுகிறார். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் வீதி நாடகம், பறையிசை நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.

பெரியார் முழக்கம் 21092017 இதழ்

You may also like...