எது மெரிட்?
வீட்டில் தனி அறை இல்லை!
குளிர்சாதன வசதி, மின் விசிறி இல்லை!
கைபேசி இல்லை!
பத்து நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு மகளுடன் கூடவே இருந்து சொல்லித் தரும் தகுதியும் வசதியும் பெற்ற அம்மா அப்பா இல்லை!
கண்விழித்துப் படிக்கும்போது
பக்கத்தில் பிளாஸ்க் காபி இல்லை!
‘அந்தக் காலத்துல நாங்க கவர்ன்மெண்டு சர்வீஸ்ல இருக்கும் போது யூ நோ’ என்று சொல்லும் தாத்தா இல்லை!
அமெரிக்காவில் ஐடியில் டாலர் சம்பளம் வாங்கி ஆண்டுக்கொரு முறை வீட்டுக்கு வரும் ரே-பான் கண்ணாடி மாமா இல்லை!
ஒரு மணி நேரத்துக்கு 500, 1,000 வாங்கும் டியூஷன் டீச்சர் இல்லை!
வார இறுதி சினிமா, ஹோட்டல் இல்லை!
விடுமுறைக்குச் செல்ல ஊர் இல்லை!
இருந்தாலும் 1176!
இதுதாண்டா மெரிட்டு!
– விஜயசங்கர் ராமச்சந்திரன், முகநூலிலிருந்து
பெரியார் முழக்கம் 07092017 இதழ்