கழகம் – தோழமை அமைப்புகள் எதிர்ப்பு: மதுரை ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு
மதுரையில் அக். 8ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப் பதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது. உடனே மதுரை மாவட்ட கழகச் செயலாளர் மணி கண்டன், மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, த.பெ.தி.க., இளந் தமிழகம், புரட்சிகர இளைஞர் கழகம், சி.பி.எம்.எல். ஆகிய அமைப்புத் தோழர்கள், மாநகர காவல்துறை அதிகாரியை சந்திந்து, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்காமல் இருந்ததை சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகும் வாய்ப்பு உள்ளதால் தடை விதிக்கவேண்டும் என்று கோரி இருந்தனர்.
மதுரை மாவட்ட செயலாளர் மணி கண்டன் தனது முகநூலில், “60 தோழர்கள் கைதாகி ரிமாண்ட் ஆவதற்கு தயாராகி விட்டோம். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை எதிர்த்து கருப்புக் கொடி காட்டவும் தயாராகி விட்டோம். எங்கள் தோழர்களை கட்டுப்படுத்த முடியாது” – என்று பதிவிட்டிருந்தார். எதிர்ப்புகளைத் தொடர்ந்து ஊர்வல அனுமதியை காவல்துறை மறுத்தது. அமைச்சர் செல்லூர் ராஜூவும் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
பெரியார் முழக்கம் 12102017 இதழ்