‘நிமிர்வு’ இதழ் குறித்து திருப்பூரில் வாசகர் வட்டம் ஆய்வு

திருப்பூர் மாநகர செயலாளர் சி. மாதவன் சகோதரர் சி.நாகராசு – ம. அசுவிதா, வாழ்க்கை துணை ஒப்பந்த விழா முடிந்தவுடன் நண்பகல் 3:00 மணிக்கு நிமிர்வோம் வாசகர் வட்டம் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் சிவகாமி தலைமையில் 2ஆவது கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் 15 தோழர்கள் பங்கு பெற்றார்கள். வாசகர் வட்ட நோக்கத்தினை எடுத்துக் கூறி இனி கழக நிகழ்வுகளில் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தோழர்கள் 1 மணிநேரம் வாசிப்பு வட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

நிகழ்வில் ஆகஸ்ட் மாத நிமிர்வோம் இதழில் வெளிவந்த “வந்தே மாதரம்” பாடல் குறித்த தலையங்கம் படித்துக் காண்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதழின் ஒவ்வொரு கட்டுரையும் அதன் ஆசிரியர் பற்றிய தகவலோடு அனைவரும் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.  16.9.2017 அன்று மாலை பொள்ளாச்சியில் வாசகர் வட்ட சந்திப்பு நடத்துவதென்றும் தோழர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் படிக்கும் நூல்களைப் பற்றி முன்கூட்டியே பதிவிட்டு அது குறித்து விவாதிக்கவும் ஒருமனதாக முடிவெடுத்தனர்

பெரியார் முழக்கம் 14092017 இதழ்

You may also like...