அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை
அணுக்கழிவு சேமிப்பு வைப்பகத்தை தமிழ்நாட்டுக்குள் திணிக்காதே! 14.07.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு காலை 11 மணி அளவில் தொடங்கியது. ஜப்பானில் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் அணுக்கழிவு வைக்கப்பட்டிருக்கும் நான்காவது வளாகம் பற்றியும் விளக்கும் ஆவணப் படமும் பிரான்சில் அணுக்கழிவு பாதுகாப்பு எவ்வளவு அபாயகர மானதாக இருக்கிறது என்பதை விளக்கும் ஆவணப்படமும் திரை யிடப்பட்டது. பின்னர் அறிவியல் அமர்வு தொடங்கியது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவரும் பியூசிஎல்-இன் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் கண. குறிஞ்சி இவ்வமர்வுக்குத் தலைமை ஏற்றார். கூட்டமைப்பின் நீண்ட காலச் செயல்பாடு குறித்து விளக்கி அமர்வை ஒருங்கிணைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன் தொடக்கவுரை ஆற்றினார். அணுக் கழிவுப் புதைப்பதைத் தடுப்பதற்கு இதை வெகுமக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு...
