கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி
கஜா புயல் நிவரணத்திற்காக வேலூர் மாவட்ட திவிக தோழர் களால் திரட்டப் பட்ட பொருட் கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டு கோட்டை வட்டம் வாட்டா குடி மற்றும் இரண்யன் நகர் உள்ளிட்ட 3 குக்கிராமங்களைச் சேர்ந்த 156 குடும்பங்களுக்கு கழகத் தோழர்களின் உதவியுடன் வேலூர் மாவட்ட திவிக தோழர்கள் நேரில் சென்று வழங்கினர்.
1 குடும்பத்திற்கு 2.5 கிலோ காய்கறி, 1.25 கிலோ அரிசி, 1 ப்ரெட் பாக்கெட்,
1 வரக்கி பாக்கெட் , 100கிராம் கடலை எண்ணெய், 50கிராம் மிளகுதூள் பாக்கெட், 1 நாப்கின் பாக்கெட், 1 பாக்கெட் பன்,
1 தைலம், 1 கொசுவத்தி, 1 வத்திப் பெட்டி என பல்வேறு பொருட்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் கஜேந்திரன், பாஸ்கரன், சுதகார், பார்த்திபன், வழக்கறிஞர் மகேஷ் குமார், பாரத் தமிழ், மாதேஷ், பாண்டியன், மாதேஷ், திருமலை ஆகியோர் அடங்கிய குழு சென்றது.
பெரியார் முழக்கம் 13122018 இதழ்