சட்ட விரோத ஈஷா மையம் மூடப்படுவது எப்போது?
கோவையில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தின் மீது எழுந்துள்ள நூற்றுக்கணக்கான புகார்களின் பட்டியலில் புதிதாக ஒன்று இணைந்துள்ளது. கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘எனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ளச் சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஈஷா யோகா மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க சாமியார் ஜக்கி வாசுதேவ் அனுமதி தந்துள்ளார். எனது மகள்கள் அங்கிருந்து வெளிவந்தால் அவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தைக் கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும். எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில்...
