ட்ரெண்டிங்கில் பெரியார்
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்துவிட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்