சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!
சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: பேரறிவாளன் விடுதலை என்பது அனை வருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளன் என்ற முறையில், ஈழம் தொடர்பானது என்று கருதிக் கொண்டு, ஏதோ பயங்கரவாதம் நடந்து விட்டதாக பேசிக்கொண்டு அரசுகள் அவர் மீது வழக்கு புனைந்ததும், தண்டிக்கப்பட்டதும் வேறு கதை என்றாலும் கூட, இப்போது இவரது விடுதலையை 30 ஆண்டுகள் கடந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த அரசுகளுக்கு குறிப்பாக ஆளுநருக்கு தலையில் குட்டு வைத்ததைப் போல இந்த தீர்ப்பினை நான் பார்க்கிறேன். அவர் நேரடியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று வழக்கே கூறினாலும், அவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப் பட்டது. அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்பும், இவ்வளவு காலம் சிறையில் இருந்தார் என்பதை எந்த மனிதநேயர் களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலானோரால் தேசத் தந்தை என்று சொல்லப்படுகின்ற காந்தியைக் கொன்ற கோபால் கேட்சேவிற்கு 15...