உரிகெல்லர் ‘ஆன்மீக’ சத்தியால் இரும்புப் பொருளை வளைத்தாரா? எட்வின் பிரபாகரன்
உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியம் போலி அறிவியல் வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு (3)
‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.
புதிர் 4: உரி கெல் லெர் என்பவர் 23.11.1973 இல் பிபிசி தொலைக்காட்சியில், உலோகப் பொருள் களை பார்வையாலும், தொடுதலாலும் வளைத்துக் காட்டியது அனை வரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஹெரால்ட் புத்தோஃப், ரஸல் டர்க் ஆகிய ஆன்மீக உளவியல் ஆராய்ச் சியாளர்கள் உரி கெல்லெரை சோதித்துப் பார்த்து, அவரிடம் உள்ள அமானுஷ்ய சக்தியை ஒப்புக் கொண்டனர். இதை எந்த அறிவியல் வல்லுனராலும் விளக்க முடியவில்லை.
விடை: மார்க்ஸ் டேவிட் என்ற உளவிய லாளரிடம் இதற்கான பதில் உள்ளது. அவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார். அவற்றுள், “The non-psychic powers of Uri Griller” என்ற நூல் புகழ்பெற்றது. 1977இல் எழுதப்பட்ட இந்த நூலில் உரி கெல்லரின் தில்லுமுல்லுகளை மார்க்ஸ் டேவிட் அம்பலப்படுத்தி யுள்ளார். ஹெரால்ட் புத்தோஃபும், ரஸல்டர்க்கும் செய்த ஆய்வே மோசடியான தாகும். உரி கெல்லரை ஆய்வுக்கு உட்படுத்திய அறையில் சில ஓட்டைகள் இருந்தன… அதன் வழியே படங்களை பார்க்கும் வசதி உரி கெல்லருக்கு இருந்தது. மேலும், ஆய்வாளர்களுக்கும் கெல்லருக்கும் இடையே “இன்டர்காம்” எனப்படும் தொலைபேசி வசதியும் இருந்தது. இதனூடே, ஆய்வாளர்கள் பேசிக் கொள்வதை கெல்லரால் கேட்டிருக்க முடியும். எனவே, இந்த ஆய்வை நிராகரிக்கும் மார்க்ஸ் டேவிட், அறிவியல் ரீதியாக கட்டுப் படுத்தப்பட்ட நிலைமையில் செய்யப்படும் ஆய்வு தான் சரியான ஆய்வாக இருக்க முடியும் என்று நிறுவுகிறார். Brain Sapient என்பவர், “Rational Response Squad ” (பகுத்தறிவு மறுமொழிக் குழு) என்ற யூடியூப் கணக்கில் பதிவேற்றிய காணொளி யில், உரி கெல்லெர் தன்னுடைய வித்தையை செய்ய முயன்று தோற்றுப் போன தருணங்களை சேர்த்திருந்தார். இதனை எதிர்த்து காப்புரிமை வழக்காடி உரி கெல்லெர் தோற்றுப் போனது குறிப்பிடத் தக்கது.
புதிர் 5: சோவி யத் ரஷ்யாவில் மேடம் நீனா குலகினா என்பவர் இருந்தார். அவர் பார்வையாலேயே பொருள்களை நகர்த்தும் திறன் பெற்றிருந்தார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட பலரும் அவரை சோதித்தனர். யாராலும் அவருடைய சக்தியை மறுக்க முடியவில்லை
விடை: 1983 இல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழக அச்சகம் வெளியிட்ட “Science Good, Bad and Bogus” என்ற நூலில் இந்த சித்து விளையாட்டுகளைப் பற்றிய தகவல்கள் உள்ளன. சோவியத் விஞ்ஞானிகளிடம், ஒரு முறைக்கு மேல், ஏமாற்றும் போது மேடம் நீனா குலகினா சிக்கி யுள்ளார். 1991 இல் சோவியத் ரஷ்யா உடைந்த பின், 2002ஆம் ஆண்டு, லெவி ஜோயல் என்ற ஆய்வாளர் எழுதிய, “KISS Guide to the unexplained” என்ற நூலில், மேடம் நீனா குலகினா, பொருள் களை அசைக்க கண்ணுக்கு புலப் படாத நூலை பயன்படுத்திய தகவலும், காந்தங்களை மறைத்து வைத்து பயன்படுத்திய தகவல் களும் உள்ளன. எனவே, மேடம் நீனா குலகினா செய்வதை ஒரு மாயா ஜால ஏமாற்று வேலை என்று தான் கருத முடியும்.
(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)
(தொடரும்)
பெரியார் முழக்கம் 14042022 இதழ்