கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

பரப்புரைப் பயணத்துக்கான 15 வெளியீடுகளில் ஒன்று “மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?” பெரியாரியவாதியும் ஊடக வியலாளருமான ர. பிரகாஷ் மிகச் சிறப்பாக ஏராளமான தகவல்கள் தரவுகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மக்களை எப்படி ஏமாற்று கிறார்கள்?

ஜி.எஸ்.டி. கொள்கையால் மாநிலங்கள் வருவாய் எப்படி சுரண்டப் படுகின்றன?

ஏர் இந்தியா, எல்.அய்.சி. பங்கு விற்பனைக்கு ஒன்றிய ஆட்சி கூறும் மக்களை ஏமாற்றும் போலி வாதங்கள் என்ன? அதில் உண்மை இருக்கிறதா?

பொதுத் துறை நிறுவனங்கள் ஏன் தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது? பயனடைவது யார்? எப்படி விதிமீறல்கள் நடக்கின்றன?

கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் வரிப்பணம் கொட்டி அழப்படுவதோடு வங்கிகள் கடன்களை வாரி வாரிக் கொடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்.

கார்ப்பரேட் சேவைகளுக்காக பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் பரிசுகள்; பரிவர்த்தனைகள் என்ன?

ஊழல் எதிர்ப்புக் கட்சியாக காட்டிக் கொள்ள விரும்பும் பா.ஜ.க.வின் போலி முகமூடியைக் கிழித்துக் காட்டும் ‘தேர்தல் பத்திரங்களின்’ கதை!

இப்படி ஏராளமான தகவல்களைத் திரட்டி, உங்கள் விரல் நுனியில் கொண்டு வந்து சேர்க்கிறது இந்த வெளியீடு.

நடப்பது ஏழை விளிம்பு நிலை “இந்து”க்களுக்கான ஆட்சியல்ல; பார்ப்பன-பனியா-பணக்கார இந்துக்களைக் கொழுக்க வைக்கும் ஆட்சி என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள்.

எவருடனும் நீங்கள் வாதாடலாம்; பேசலாம்; முகநூலில் பதிவிடலாம்; மேடைகளில் பேசலாம்; கருத்துகளைக் கூர் தீட்டிக் கொள்ளலாம்.

அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். நீங்கள் மட்டும் வாங்கினால் போதாது; குறைந்தது

10 நூல்களை யாவது ஒவ்வொரு தோழரும் வாங்கிப் பரப்ப வேண்டும்.

32 பக்கங்கள்; விலை ரூ.30/- மட்டுமே.

– இது ஒரு ‘நிமிர்வோம்’ வெளியீடு

 

பெரியார் முழக்கம் 28042022 இதழ்

You may also like...