திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூரில் தெருமுனை கூட்டங்கள் :  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு திருப்பூரில் தெருமுனைக் கூட்டங்கள் 01.05.22 அன்று காலை 11 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து துவங்கியது.

நிகழ்வு பெரியார் பிஞ்சு யாழினி மற்றும் து.சோ.பிரபாகர் ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் துவங்கியது. மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தெருமுனை கூட்டத்தில் துவக்க நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

மதிப்பிற்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், தெருமுனைக் கூட்டங்களை துவக்கி வைத்து தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி குறித்தும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சி குறித்தும் சிறப்பானதொரு கருத்துரையை வழங்கினார். கழகப் பொருளாளர் துரைசாமி, தெருமுனை கூட்டங்களின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், தமிழ்நாடு மாணவர் கழக திருப்பூர் மகிழன், கோவை மாநகர கழகச் செயலாளர் நிர்மல் ஆகியோர் திராவிட மாடல் குறித்து உரையாற்றினர்.

அடுத்து தோழமை அமைப்புகளைச் சேர்ந்த எம்.ரவி, மாவட்டச் செயலாளர், சிபிஐ. – செ.முத்துக் கண்ணன் மாவட்டச் செயலாளர், சிபிஎம் – க.சக்திவேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர், மதிமுக – ஆறுமுகம், மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம் – துரைவளவன், மா.து.பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – ஜெயம் செந்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி – தெ.மா.செயலாளர், அர.விடுதலைச் செல்வன் துணைப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை – ஆ.இராமகிருஷ்ணன், திமுக – கருவம்பாளையம் பகுதி துணைச் செயலாளர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் கழகத்தின் மாநில மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் திரளாய் பங்கேற்றனர். மதியம் 1.00 மணியளவில் முதல் தெருமுனை கூட்டம் நிறைவுற்றது. கழக ஆதரவாளர் பாண்டியன் நகர் பாண்டியன்  கழகத் தோழர்களுக்கு மதியம் அசைவ உணவு வழங்கினார்.

அடுத்தடுத்து தெருமுனைக் கூட்டங்கள் புதிய பேருந்து நிலையம்,கணக்கம் பாளையம், திருமுருகன்பூண்டி பகுதிகளில் இரவு வரை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் மாதவன் தலைமையில் நடைபெற்றது. கோவை நேருதாஸ், நீதிராசன், சந்தோஷ், மாரிமுத்து ஆகியோர் உரையாற்றினர்.  நன்றியுரை : சரஸ்வதி.

கணக்கம்பாளையத்தில்  மாதவன்  தலைமையில் துரைசாமி, சிவகாமி, நிர்மல் பிரசாந்த் ஆகியோர் பேசினர். நன்றியுரை : பரந்தாமன்.

திருமுருகன் பூண்டியில் திலகவதி தலைமையில் கிருஷ்ணன் அவர்கள் (காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர்) சங்கீதா, சந்தோஷ் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர் ராஜசிங்கம் நன்றி கூறினார்.

ஈரோடு : ஈரோடு  வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில்  கல்வி உரிமையைத் தடுக்காதே! மாநில உரிமைகளைப் பறிக்காதே! மதவெறியைத் திணிக்காதே! நமக்கான அடையாளம் திராவிட மாடல் – தெருமுனைக்கூட்டம்  2 ஆவது நாள்பரப்புரை பயணம் முதல் கூட்டம் நம்பியூர் பேருந்து நிலையம் பகுதியில் எலத்தூர் செல்வக்குமார்  தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சென்னியப்பன், புஇமு வெங்கட், திவிக தலைமை கழக பேச்சாளர் வேலுச்சாமி, ரமேசு, கழக வெளியீட்டு செயலாளர் இராம .இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினார்கள், நம்பியூர் ஒன்றிய தோழர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். மதியம் உணவு இடைவேளைக்கு பின் 2 வது கூட்டம் கொளப்பலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் கொளப்பலூர் பேரூராட்சி மன்ற தலைவர் அன்பரசு துவக்கி  வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பரப்புரையின் நோக்கம் குறித்து மாவட்ட செயலாளர் வேணுகோபால், வேலுச்சாமி, இராம. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினார்கள். மாவட்ட கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நமது அடையாளம்  திராவிட மாடல் மூன்றாவது நாள் பரப்புரை பயணத்தின் முதல்   கூட்டம்   அந்தியூர்  பகுதியில் 8.05.2022 ஞாயிறு  தொடங்கியது. நிகழ்விற்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி தலைமையேற்க வீரா கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார். பரப்புரை பயணத்தை வாழ்த்தி வேங்கை பொன்னுசாமி (தமிழ்புலிகள்), தோழர்கள் பன்னீர்செல்வம், பெருமாள் (தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு) ஆகியோரும், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை விளக்கி வேணுகோபால் (மா.செயலாளர் திவிக), இராம. இளங்கோவன் (மாநில வெளியீட்டுசெயலாளர்) ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். தோழர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் தேனீர் ஏற்பாடு செய்தனர்.

மதிய உணவுக்கு பின்   திராவிட மாடல் மூன்றாவது நாள் பரப்புரை பயணத்தின் இரண்டாவது  கூட்டம்  குருவரெட்டியூரில் வேல்முருகன்  தலைமையில்  தொடங்கியது. திலிபன் வரவேற்க பயணத்தை வாழ்த்தி குருவை ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார், மக்கள் சிந்தனை பேரவை தைரியமணி, முன்னாள் கவுன்சிலர் சம்பூர்ணம் ஆகியோரும்,பயணத்தின் நோக்கத்தை விளக்கி இராம. இளங்கோவன் உரையாற்றினார்கள் .

மூன்றாவது நாள் பரப்புரை பயணத்தின் மூன்றாவது  கூட்டம்  பவானி அந்தியூர் பிரிவில் வட்ட செயலாளர் வேணுகோபால் தலைமையில் தொடங்கியது. நிகழ்வில் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், திமுக நகர செயலாளர் ப.சி.நாகராசன், பாலமுருகன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஆற்றலரசு (விசிக), ஆகியோர் வாழ்த்துரை வழங்க இரமேசு, வேணுகோபால், இராம.இளங்கோவன்  ஆகியோர் பரப்புரை பயணத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்கள்.  வினோத் நன்றி கூறினார். நிகழ்வில் மாவட்ட கழகத்தின் திவிக தோழர்களும், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர்களும்  கலந்து கொண்டனர்

 

பெரியார் முழக்கம் 12052022 இதழ்

You may also like...