நீதி கேட்கும் 21 ஆண்டுகாலப் போராட்டம்!
21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை நேரில் சந்தித்தார், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தியாளர் கோபு மோகன். நீதி கேட்டு போராடி வரும் இந்த மூன்று தமிழர்களின் மன உணர்வுகளை நேர்மையாக மனித உரிமைப் பார்வையில் பதிவு செய்திருக்கிறார், செய்தியாளர். ‘இந்தியன் எக்ஸ்பிரசின்’ புதுடில்லி வாரப் பதிப்பில் (பிப்.12-18) வெளியான இந்தக் கட்டுரையின் தமிழாக்கம். அந்த சிறை அதிகாரியின் சிறையில் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்கிறார்கள். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தருகிறார்கள். பிறகு அவர்களுக்கு உடல் அடையாளங்கள் பரிசோதிக்கப் படுகின்றன. சில படிவங்களில் கைரேகையை பதிவு செய்கிறார்கள். சிறைக் கதவு திறக்கப்படுகிறது. அவர்கள் இப்போது சுதந்திரமாக வெளியே போகலாம். இந்தக் காட்சிகளை ஒவ்வொரு நாளும் அதே அறையில் எங்கள் முன்னால் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் இந்த இளைஞன், இப்படி சுதந்திரமாக விடுதலைப் பெற்று வெளியேறு வோரை பார்த்துக் கொண்டே இருக்கிறார்....