சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: ம.தி.மு.க. வேட்பாளருக்கு கழகம் ஆதரவு

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் குறித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியார் திராவிடர் கழகம், களத்தில் நின்ற எந்த அணியையும் ஆதரிக்க இயலாத நிலையில் தேர்தலில் விலகி நின்றது. இப்போது சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தனித்தனியாக களம் இறங்கியுள்ளன. போட்டியிடும் கட்சிகளில் முல்லைப் பெரியாறு உரிமை, கூடங்குளம் எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்சனை, தூக்குத் தண்டனை எதிர்ப்பு போன்ற தமிழர் உரிமைகளுக்காக முனைப்புடன் போராடி, வாதாடி வரும் அமைப்பான ம.தி.மு.க., தனது கட்சியின் வேட்பாளரை

(தோழர் சதன் திருமலைக்குமார்) நிறுத்தியுள்ளது.

தமிழர்களின் உரிமைக்கான களங்களில் உறுதியுடன் முனைப்பாகப் போராடிவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமாய் சங்கரன்கோயில் தொகுதி வாக்காளர்களை பெரியார் திராவிடர் கழகம் கேட்டுக் கொள்கிறது. ம.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பு எனக் கருதி செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

– கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் முழக்கம் 01032012 இதழ்

You may also like...