டில்லியின் அதிகார ஆணவம்
‘தேசிய பயங்கரவாத தடுப்பு மய்யம்’ ஒன்றை உருவாக்க மத்திய உள் துறை அமைச்சகம் மேற் கொண்ட முயற்சிக்கு காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் கடுமையாக எதிர்த்ததால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய உளவு நிறுவனமே மாநிலங் களில் நேரடியாக தலையிட்டு பயங்கர வாத நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. மாநில முதல மைச்சர்களை கலந்து ஆலோசிக்கா மலே ‘சட்டாம் பிள்ளைத்’தனமாக மத்திய அரசு செயல்பட்டது.
மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரசோ, பா.ஜ.க.வோ, மத்தியில் அமைச்சரவை அமைக்க முடியாது என்ற நிலை வந்த பிறகும் காங்கிரஸ் ஏதோ, அகில இந்திய அளவில் செல்வாக்குள்ள கட்சி போல கற்பனைக் கனவில் மிதந்து கொண் டிருக்கிறது. உண்மையில் சோனியா காந்தி, இப்படி ஒரு கற்பனையில் மூழ்க்கிக் கிடந்தவர்தான். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பில் கவிழ்ந்தபோது சோனியா, தன்னிடம் 272 நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்ப தாகக் கூறி, ஆட்சி அமைக்க முன் வந்தார். பா.ஜ.க.வை எதிர்க்கும் மாநிலக் கட்சிகள் எல்லாம், காங்கிரஸ் பின்னால் அணி வகுக்கும் என்று நம்பினார். முலாயம் சிங்கின் மாநிலக் கட்சியான சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க.வை எதிர்த்தாலும் கண்மூடித் தனமாக காங்கிரசுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டது. இதேபோல் 2004 ஆம் ஆண்டு வரை பா.ஜ.க.வும், மாநிலக் கட்சிகளை அங்கீகரிக்காமல் ஏதோ தங்களுக்கு அகில இந்திய செல் வாக்கு இருப்பதுபோல் கற்பனையில் மிதந்தது. அதற்குப் பிறகு தான் அந்தக் கட்சி, தனது போக்கை மாற்றிக் கொண்டது. நிலைமையைப் புரிந்து கொண்ட சோனியாவும் பா.ஜ.க.வை மத்தியில் வீழ்த்துவதற்கு மாநிலக் கட்சிகளில் ஆதரவைப் பெற்றே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். 2009 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மாநிலக் கட்சிகளையே சார்ந்து நிற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது. உண்மை இவ்வாறு இருக்க, மாநில ஆட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல், ப.சிதம்பரங்கள், இப்படிப்பட்ட முயற்சிகளில் அதிகார மமதையில் ஆட்டம் போடு கிறார்கள். சில்லறை விற்பனைக் கடை களைத் திறக்க பன்னாட்டு நிறுவனங் களுக்கு அனுமதி அளிப்பதற்கு மன் மோகன் சிங் ஆட்சி, மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமலே தன்னிச்சை யாக முடிவெடுத்தது.
கடும் எதிர்ப் பால், அத் திட்டம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது, நினைவு கூரத்தக்கது.
பெரியார் முழக்கம் 08032012 இதழ்