களப்பணிகளில் கழகத் தோழர்கள் திருச்சியில் கழகக் கூட்டம்

கழக சார்பில் திருச்சியில் 21.01.2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பார்ப்பன இந்தியாவின் துரோகம், தமிழீழத்தில், முல்லைப் பெரியாறில், கூடங்குளம் அணு உலையில் – என்ற தலைப்பில் பொதுக் கூட்டம், சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக புதியவன் (மாவட்ட இணைச் செய லாளர்) வரவேற்புரை ஆற்றினார். துரை தாமோதரன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடத்தினார். பால் பிரபாகரன் உரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார். மாவட்ட அமைப்பாளர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார்.

கூட்டத்திற்கு முன்பு தமிழீழ இனப்படுகொலை, அணு உலையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் முல்லைப் பெரியாறு உரிமைகளை விளக்கும் புகைப்படங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.கொட்டும் பனியை பொருட் படுத்தாமல் பொது மக்கள், கழகத் தலைவரின் நீண்ட ஆழமான உரையை ஆர்வமாக கேட்டனர்.

மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து, முத்துச் செழியன், இளந்தாடி துரையரசன், மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார், அசோக் உள்ளிட்ட மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாடு – மதம் – மனிதன் விளக்கக் கூட்டம்

11.02.2012 அன்று ஊரப்பாக்கம் இரயில் நிலையம் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் ‘மாடு-மதம்-மனிதன்’ என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. பொன். விசயகுமார் தலைமையில்

ஆ. முருகன், வி.பாபு முன்னிலையில் சிற்பி இராசனின் ‘மந்திரமா தந்திரமா’ அறிவியல் விளக்க பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரவி பாரதி, டேவிட் பெரியார், மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், வழக்கறிஞர் குமாரதேவன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ம.ரே. ராசகுமார் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

சென்னையில் கழகம் நடத்திய

காதலர் நாள் கூட்டம்

16.2.2012 அன்று சென்னை தேனாம்பேட்டை திரு வள்ளுவர் சாலையில் காதலர் தினம் கூட்டம் நடைபெற்றது. இரா. பரணிகுமார் தலைமை தாங் கினார். சிற்பி இராசனின் ‘மந்திரமா தந்திரமா’ அறி வியல் விளக்க பகுத்தறிவு நிகழ்ச்சியைத் தொடர்ந்து மருத்துவர் எழிலன், சைதை அன்பரசு சிறப்புரை யாற்றினர். மு.மணிகண்டன் நன்றி கூறினார்.

 

பெரியார் பொன்மொழிப் பதாகை திறப்பு

மொழிப்போர் ஈகியர் தினத்தை முன்னிட்டு கழகத்தின் சார்பில் குமார பாளையம் நகராட்சி எதிரில் பெரியாரின் பொன்மொழிப் பதாகை திறந்து வைக்கப்பட்டது. தண்டபாணி வரவேற்புரையாற்றினார். காசிநாதன் தலைமையேற்க, கேப்டன் அண்ணா துரை பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.

 

பெரியார் முழக்கம் 01032012 இதழ்

You may also like...